பின் நவீன இசை : ஒரு திருப்புமுனை

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

எச்.முஜீப் ரஹ்மான்


பின்நவீன இசை(postmodern music) என்பது இசை ஸ்டையிலையும்,இசை நிலையையும் கொண்டதாகிறது.இசை ஸ்டையிலைப் பொறுத்தவரை பின்நவீன கலையின் குணாம்சங்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது. பலவடிவங்களையும், வகையினங்களையும் அது தன்னகத்தே தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. சுய நோக்குக் கொண்டதுடன் உயர்கலையின் எல்லைகளை முரண்நகையாக கொண்டு இது இயங்குகிறது.டானியல் ஆல்பிரைட்(2004) என்பவர் பின்நவீனஇசை ஸ்டையில் பற்றிக்கூறும் போது பிரிகொலாஜ்,பாலிஸ்டையிலிசம்,ராண்டம்னஸ் முக்கியத்துவம் பெறுகிறது என்றார்.இசை நிலை எனும் போது இசையின் தன்மை பின்நவீனத்தை கொண்டதாகிறது.மேலும் பின்நவீன இசை ஒரு குறிப்பிட்ட ஸ்டையிலையோ அல்லது குணாம்சத்தையோ வலியுறுத்தவில்லை என்பதும் முக்கியமாகிறது.பின்நவீன இசை நவீன இசை சொல்லும் வெளிப்படுத்தலுக்கு வேறுபாடுடையதாக அடையாளதின் பண்டப்பொருளாகவும்,குறியீடாகவும் விளங்குகிறது.உதாரணமாக பின்நவீன சமூகத்தில் உபபண்பாட்டின் அடையாளமாக மொழியைப்போல இசை செயலாற்றுகிறது.

நவீன காலத்தில் இசையை பதிவு செய்வது என்பது புகைப்படத்தைப்பதிவு செய்வது போன்றதே.1930ல் ரிக்கார்டிங் சமயத்தில் எடிட் செய்யும் முறை வந்தபோது கலை நுணுக்கத்தின் மற்றோர் சாத்தியமாக மாறியது.1950ல் பாப் இசை மைக்கில் நிகழ்த்தும் போது எல்லா திசைகளிலிருந்தும் கேட்பது பிரதானமானது.எட்கர் வர்கீஸ் எலக்றாணிக் இசையாக மாற்றியதும்,பியாரி ஸ்சாப்பார் கம்போஸ் செய்த குறிப்பிட்ட பகுதியை ரிக்கார்டு செய்த விசயமும்,பில் ஸ்பெக்டார் ராக் இசையை நிகழ்த்தியதும்,கிளீன் குட் செவ்வியலிசையை ரிக்கார்டு செய்ததும் முக்கிய மைல்கற்களாக இருந்தது.ஸ்டுடியோ ரிக்கார்டிங்கில் பல டிராக் ரிக்கார்டிங் பொதுவானதாக வெகுஜன பரப்பில் நுழைந்தது. ராக்கும் கிப்ஹாப்கும் போதிய அளவில் பல நுணுக்கங்களோடு மிக்ஸிங் செய்யப்பட்டது.பின்நவீன காலத்தில் பாபிசை அடுத்த கட்டத்துக்கு தாவும் நிலை ஏற்பட்டது.இதில் உயர்ந்த அல்லது தாழ்ந்த என்ற படித்தர பண்பாடு கிடையாது எனலாம்.பின்நவீன இசை, இசை பற்றிய அடிப்படை புரிதலை மாற்றி மறித்தது.இசை என்பது இசைக்கு மாத்திரமே என்ற நிலை முக்கியமாக கருதப்படுகிறது.இசை வேலைப்பாடுகள் மற்ற இசைகளை மேற்கோளாக கொண்டமையவேண்டும்.மேற்கோள் என்பது ஒரு உத்தியல்ல மாறாக இசையின் சாரம் ஆகிறது.

நவீனத்துவத்தின் பகுதியாக அடிப்படையான கலையம்சத்துடன் நல்ல இசையின் உத்திகள் இடைவெளிகளாக,ரிதம்களாக,துண்டாடப்பட்ட உறுப்புகளாக இருப்பதிலிருந்து பின்நவீனத்துவம் அடிப்படையில் கலையாக,ஊடக ஓடையாக,தாயாரிக்கப்பட்ட பொருளாக, வகைமாதிரியான பொருட்களாகவே பாவிக்கிறது.இதை வேறு வார்த்தைகளில் சொல்வதானால் பின்நவீனநிலை என்பது இசையில் நுகர்வு சமூகத்தின் பொருளாக,தயாரிக்கப்பட்ட பொருளாக மாத்திரமாக இருக்கிறது.நவீனத்துவம் உலகை அடிப்படையான வடிவமான உண்மையாக இசையை கருதியது.ஆனால் பின்நவீன உத்திகளும் பயன்பாட்டுகளும் ரிக்கார்டு செய்யும் திறமையிலும்,மிக்ஸ் செய்யும் திறமையிலும் ஒழிந்திருக்கிறது.அதாவது சப்தங்களை கண்டுபிடிப்பதும்,மற்ற ரிக்கார்டிங்குகளை பயன்படுத்துவதிலும்,பேசப்பட்ட ஒலிகளை,ஓசைகளை திறம்பட இணைப்பது முக்கியமானதாகும்.எட்கர் வர்கீஸ் இசையில் எல்க்ட்றாணிக் உபகரணங்களை பரிசோதனை செய்தல் ஒருங்கிணைவையும்,டேப் லூப்புகளை பயன்படுத்துவதிலிருந்து துவங்கியது. ஜாண்கேஜ் டேப்புகளையும்,ரிக்கார்டு செய்யப்பட்டவற்றை விதமான முறைகளில் மறு உற்பத்தி செய்தும் கற்பனை நிலதோற்றங்களையும் யூரோபேரா முதலிய ஸீரீஸ்களை உலகிற்க்கு அறிமுகம் செய்துவைத்தார். ஆபி ரோடு,பிங்க் பிளாயிட்ஸ் மெடில்,பெர்ரி போன்றோர்கள் இசையில் டப் ஸ்டைலை பயன்படுத்தினர்.டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்தபிறகு ஹிப்ஹாப் பிரபலமானது.கம்போசர்கள் பலவிதமான சப்தங்களை எபக்ட் மூலம் வித்தியாசபடுத்தியும்,குறிபிட்ட கருவிகளுக்கு முக்கியத்துவம் அளித்தும் வந்தனர்.ரிச்சர்டு ஸ்ற்றாஸ்,சார்லஸ் ஜவஸ் போன்றோர்கள் சிம்பொனிகளையும்,சப்தங்களையும் இணைத்து புதுவகை இசைவகையை உருவாக்கினர்.

ரோச்பர்க் போன்றோர்கள் செவ்வியல் இசை பீஸ்களையும் அடிக்கடி பயன்படுத்தி முரண்நகை விளக்கங்களை கொடுத்து வித்தியாசப்படுத்தினர்.

Olivier Messiaen னின் ‘Oiseaux Exotiques ‘ ம் ‘Catalogue d ‘Oiseaux ‘ ம்

கொலாஜ் அடிப்படையில் பறவைபாடல்களாக புதுமாதிரியான இசையை

வெளியிட்டார்.tour-de-force பின்நவீன மியூசிக் கொலாஜ் ஆக இருந்து Luciano Berio ன் ‘Sinfonia, ‘மூன்றாவது இயக்கமாக இருந்து Gustav Mahler ன் ‘Resurrection Symphony ‘ ஆகவும் Samuel Beckett ன் ‘The Unnameable, ‘ பிரதியிலிருந்து உருவாக்கபட்ட இசையாகவும் இருக்கிறது.பின் நவீன கிளசிகல் மியூசிக்கை பொறுத்தவரை கம்போசருக்கு வேலையதிகம் இல்லாமல் வரிசையடிப்படையில் மியூசிக்கை பயன்படுத்துவது மட்டுமே ஆகும்.காலஞ்சென்ற நவீனத்துவத்தில் தர்க்க முடிவுக்கும்,மொத்த வரிசைக்கும் நிறைய வாய்ப்பு இருந்தது.நவீன கம்போசர்களான Arnold Schoenberg, Pierre Boulez, Karlheinz Stockhausen முதலியோர்களும் Boulez, Stockhousen, John Cage போன்றோர்களும் அலியேடரி மியூசிக்கை தான் பயன்படுத்தினர்.கேஜ் தனது ஜ ஸிங் மியூசிக்கில் கம்போஸ் முறையை நிராகரித்து உருவாக்கியதால் புகழ் பெற்றது.அதேசமயம் அவரது 4.33 பியானோவையும்,சுற்றுசூழல் சப்தத்தையும் வைத்து மிகச்சிறந்த முறையில் உருவக்கப்பட்டதாகும்.ஏற்கனவே கம்ப்போசருக்கும்,மக்களுக்கும் உள்ள இடைவெளியும் இசையமைப்பளனுக்கும்,சுழ்நிலைக்குமான எல்லைகள் உடைப்பட்டிருந்தது.இதை தான் பின்நவீன டிரண்ட் என்றழைக்கிறார்கள்.மேற்கத்திய மியூசிக் அல்லாத மியூசிக் முறைகளில் இது ஏற்கனவே(பரோக்கிற்கு முந்திய காலம்) பாப் மியூசிக்காக இருந்தது.பின்நவீன மியூசிக்கை பொறுத்தவரையில் எல்லா மரபுகளும் பின்பற்றப்பட்டு உயர்ந்தது அல்லது மோசமானது என்றவரையறைகள் மீறப்பட்டது. Gyய்rgy Ligeti

பிக்மி பாட்ல்களின் ரிதமிக்க கூறுகளை பின்னாளில் உணர்வு பூர்வமாக பயன்படுத்தினார்.Olivier Messiaen இந்திய இசையை கற்றுக்கொண்டு இந்திய தாலக்களை அதிகம் பயன்படுத்தினார்.Tan Dun தனது இசைக்கோர்வைகளில் சைனீஸ் இசையை பயன்படுத்தினார்.Steve Reich மேற்காப்பிரிக்க டிரம்மையும்,ஹீப்ரு இசையையும்,இந்தோனேஷிய இசையையும் கலந்த ராக் பாடல்களை அதிகம் உருவாக்கினார். ‘art music ‘ க்கிற்கும் ‘popular music ‘க்கிற்கும் உள்ள சுவரை உடைத்து ரீமிக்ஸ்ஸாக Glenn Branca , Rhys Chatham னும் பயன்படுத்தினர்.

பின்நவீன மியூசிக் கலைஞர்களை பொறுத்தவரை(Postmodern musical artists)

Classical/Jazz:

Patricia Barber, Luciano Berio,John Cage,Ornette Coleman,John Adams,Philip Glass, Steve Reich,George Rochberg ,Alfred Schnittke,Ezequiel Viண்ao,LaMonte Young ,John Zorn.

Rock/Pop:

The Beatles ,Can,Kraftwerk ,The Velvet Underground ,Pink Floyd,Frank Zappa,

Wire (band) ,The Butthole Surfers ,Beck, Suicide ,Throbbing Gristle.

Hip Hop/Rap/DJ:

King Tubby, Kurtis Blow ,Grandmaster Flash ,Grand Wizard Theodore,Run DMC,

Pete DJ Jones ,Kool DJ Herc,Public Enemy ,Invisibl Skratch Piklz ,Q-Bert , Mixmaster Mike ,DJ Shadow,Cut Chemist ,DJ Spooky .போன்றோர்கள் முக்கியமானவர்களாவார்கள்.பின் நவீன இசைக்கோர்வையாளர்களை பொறுத்தவரை

கம்போஸில் எசொடிக்கை பயன்படுத்துவார்கள்.மொசாத்தின் “ராண்டோ ஆல டர்கா”

வில் துருக்கிய இசையை தூய கிளசிக்கலில் இணைத்திருப்பார்.பின் நவீன கம்போஸர்கள் பொதுவாக எசோட் மியூசிக்கை புரிந்து அதன் விதிகளை தேவைக்கு தக்கவாறு சிறிது திரிபுடன் பயன்படுத்துவதால் வெளிநாட்டு இசைகள் அதன் தனித்தன்மையான கூறுகளை இழக்காது ஒருவிதமான பிம்பத்தை இசையில் உருவாக்கி தருகிறது.

1950ன் பாதியிலும்,1960களிலும் தொடர்ந்து ஸ்டையிலில்,பின்நவீனநிலைகளை

வடிவத்திலும்,இனைப்பிலுமாக பாப் இசையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.பின்நவீன கூறுகளுடன் பாப் இசை,ஜாஸ்,ரிதம்,புளூஸ்,ஆரம்ப ராக்,ரோல் போன்ற இசைவகைகள்

தொழில்நுட்பநுணுக்கங்கள் இன்றியே ரிக்கார்டிங்கில் செய்யப்பட்டது. முப்பரிணாம இசை முயற்சியும் முயற்சித்து பார்க்க பட்டது.1960ன் மத்தியில் வால் ஆப் சவுண்டு ஸ்டையில் வந்தபோது ரேடியோக்களில் பிரபலமானது.முழுதும் ஸ்டுடியோவில் டிராக் பிரித்து இசை அமைப்பதும்,குரலிசையை அடித்தளத்துக்கு கொண்டுபோய் மற்ற சப்தங்களை மேலுக்கு கொண்டுவந்து இசையனுபவத்தை மாற்றிமறித்தனர்.ஸ்டுடியோவில் மிக்ஸிங் நுட்பங்கள்,எல்க்ற்றாணிக்கை பயன்படுத்தி

சிங்கிள் வால் என்ற முறையில் ராக்கில் பயன்படுத்தப்பட்டது.பாப் இசையில் குறிப்பாக உபபிரிவு வகையில் எலக்ற்றிக் கித்தார் பயன்படுத்தப்பட்டு ரிதம் முறை பரவலாக மாற்றப்பட்டது.பின்னர் இது ராக்கிலும் பயன்படுத்தப்பட்டது.அதிகமான இசை உபகரணங்களின் சங்கமத்தில் பரவசம் அடைய முயற்சிமேற்கொள்ளப்பட்டது.

அதே சமயம் நாட்டிய இசையில் டிஸ்க் ஜாக்கீஸ் பயன்படுத்தப்பட்டு பின்நவீன நிலையை இசை எட்டியது.நகர்புற இசை பார்டிகள் தங்களது தனிதன்மை வாய்ந்த முயற்சிகள் மூலம் பின்நவீன இசை வளர்ந்தது என்று சொல்லமுடியும்.அவர்கள்

டர்ண்டேபிள் மூலம் ரிக்கார்டிங்கையும்,வேகத்தையும்,பல சவுண்ட் எபக்டையும் உருவாக்கியதன் வாயிலாக மிக்ஸிங் போர்டுக்கு முக்கியத்துவம் அளித்தனர்.அதேசமயம் மைக்ரோ போண் மூலம் பேசி டான்ஸ் டிராக்கில் தங்களது சொந்த குரலை பின்னணியாக இணைத்தன் வாயிலாக டிஜிங்,எம்சிங் வகை ஹிப்ஹாப் இசை பிரபலமானது.1990களில் டர்ண்டேளிசம் இயக்கமாக வளர்ந்ததால் டிஜிங் அம்சம் கொண்ட ஹிப்ஹாப் அதிகம் பயன்பாடடைந்தது.டர்ண்டேபிளிஸ்ட் டிஜேயில் டிஜே சாடோ,க்யூபர்ட்,டிஜே ஸ்பூகி,இன்விசிபிள் ச்கேறேச் பிக்ள்ஸ் போன்றவை அதிகம் செல்வாக்கு செலுத்தியது.கிளாசிகல் மியூசிக்கும்,மினிமலிசமும் பயன்படுத்தி முதல் பின்நவீன ஸ்டையில் உருவாக்கப்பட்டது.மினிமசிசம் என்பது ஒருவகை எதிர்வினை முறையாகும்.அதாவது நவீன கிளசிக்கல் மியூசிக் கம்போசகளின் உதாரணமாக

Arnold Schoenberg, Pierre Boulez, John Cage போன்ற அவந்த் கார்டு வல்லுநர்களின் இசைக்கூறுகளை பின்பற்றி எதிர்வினையாற்றுவது என்பதாகும்.பின்னாளில் மினிமலிசம் பின்நவீன ஸ்டையிலாக மாறியது.ஆரம்ப கால மினிமலிஸ்ட் கம்போசர்களான LaMonte Young, Terry Riley போன்றவர்கள் சிரியலிசத்தையும்,இந்தியவகைப்பட்ட இசையை திருப்பி பயன்படுத்திக்கொண்டதும் முக்கியமாக நடந்தேறியது.

நவீன இசைக்கு சற்று மாற்றமாக வந்த மினிமலிச படைப்புகள் பாப்புலர் இசையையும்,ஹைபுரோ இசையையும் மறு ஒருங்கிணைப்பு செய்தது.1970 களில் அவந்த் கார்டு ராக் பயன்படுத்தப்பட்டபோது(Suicide,Throbbing Gristle)

பாப் இசைகலைஞர்கள் எல்க்ற்றணிக் உபகரணங்கள் வாயிலாக கிழக்கத்திய ரிதம்களையும்,ஒசையை திருப்பி பயன்படுத்துவதுமான மினிமலிச முறைகளை பரிசோதனை செய்தனர்.

மினிமலிச மியூசிக் வகையிலுள்ள The Velvet Underground, Tangerine Dream, Kraftwerk போன்றவை டெக்னோ மியூசிக்கையும்,ஹவுஸ் மியூசிக்கையும் பாப் இசையிலும்,ராக் இசையிலும் 1990 கள் வரை பயன்படுத்தின.தற்சமயம் பின்நவீன ஜாஸ் இசையே பிரபலமாக இருக்கிறது.இதற்கு பிரதானமாக இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் காரணமாயின.Charlie Parker,Arnold Schoenberg போன்றோர்கள் பயன்படுத்திய சீரியல் வொர்க்குகள் வடிவங்களை கைவிட்டு பிரபலமடைந்தன.

John Coltrane, Albert Ayler and Sun Ra போன்றோர்கள் அவந்த் கார்டு மரபையும்,

நியூ ஜெனரேசன் மியூசிக்கையும் இணைத்தனர்.இதை Free jazz என்றழைத்தனர்.

Captain Beefheart, The Stooges, Lou Reed ,The Lounge Lizards போன்றவைகள் மிகவும் பிரபலமடைந்தால் பங்க் மியூசிக் பிரபலமாயின.இது ராக்கும்,ஜாஸும் இணைந்த

வடிவில் உருவானதாகும்.

பின்நவீன இசை நிலையை பொறுத்தவரை நவீன காலத்துக்கு பிறகான இசையான போதிலும் இசையில் இசை எப்படி பயன்படுத்தப்படுகிறது என்ற நிலையே பிரதான விஷயமாயிருக்கிறது.1970 வதிலிருந்து பின்நவீன இசை செல்வாக்கு செலுத்தி வருகிறது.இன்று இவ்விசை சார்ந்து பல கோட்பாடுகள் உருவாக்க பட்டுள்ளது.எல்லாவற்றையும் கலைத்து போடுதல் என்ற முரையில் துவங்கிய இவ்விசை டிவி,ரேடியோ,னெட்,ஆல்பம், ஸீரிஸ்,செல்போன் வரை அதிகம் பாதிப்பதாக இருக்கிறது.அடிப்படையில் இது இசை பற்றிய இசையாகவே இருந்து வந்துள்ளதால்

இதன் தன்மைகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கிறது.தற்போது மெட்டல் இசை சற்று பிரபலமாகிக்கொண்டு இருக்கிறது.தமிழ் சூழலில் பின்நவீன இசை தனியாக உருவாகவில்லை என்ற போதிலும் அதன் கூறுகள் சிறிய அளவில் பயன்படுத்தப்படுகிறது.விரைவில் தமிழுக்கும் பின்நவீன இசை வரும் என்பதில் அய்யமில்லை.

—-

எச்.முஜீப் ரஹ்மான்

mujeebu2000@yahoo.co.in

Series Navigation

எச்.முஜீப் ரஹ்மான்

எச்.முஜீப் ரஹ்மான்