பாட்டு படும் பாடு

This entry is part [part not set] of 24 in the series 20021118_Issue

அனந்த்


***

பாடகரின் தொண்டைகொஞ்சம் மட்டு
பாராதவர் மேல்ஸ்வரத்தைத் தொட்டுப்

…. பாட அந்த வேதனையைப்
…. பார்த்து ராக தேவதையே

ஓடிவந்து போட்டதொரு குட்டு!

*****

பாலக்காட்டில் இரிக்கும்சேஷ சாயி
பாகுபோல இளகுநெஞ்ஞ மாயி

….. ஓலம் வந்த திசையைப்பார்த்து
….. ஓடிச் சென்றான் உடலும்வேர்த்து;

சேலத்தையர் பாட்டில்உச்சஸ் தாயி!

*****

பாட்டுப் பாடும் ‘சீசன் ‘வந்த தாலே
பார்க்குமிட மெங்கும்ஒரே போலே

…. போட்டி போட்டுப் புதுநகையை
…. மாட்டிக் கொண்டு மினுமினுக்கிக்

காட்டசபை பார்வைஅவர் மேலே!
***
ananth@mcmaster.ca

Series Navigation

அனந்த்

அனந்த்