This entry is in the series 20021118_Issue

ஆ. மணவழகன்


முடிவு தெரியாது முடிந்துபோன
கவிதையின் மிச்சமாய்…!

முரண்டு பிடித்தும் முகம் தெரியாத
கனவின் சொச்சமாய்…!

பேசிப்பேசி மாளாது நீண்ட
கதையின் பக்கமாய்…!

ஊசி கொண்டு தைத்துவைத்த
உணர்வுகளின் மொத்தமாய்…!

துடிக்க வைத்துத் தூக்கம் தொலைத்த
இரவுகளின் ஏக்கமாய்…!

துடைக்க நினைத்தும் தொடர்ந்து வந்த
நினைவுகளின் தாக்கமாய்…!

பார்த்து நின்றே பசிபோக்கிய
ஆசைமுகத்தின் அம்சமாய்…!

பார்த்துப் பார்த்து செதுக்கி வந்த
உருவத்தின் பிம்பமாய்…!

எனக்குள் மொட்டுவிட்ட
மோகத்தின் இரகசியமாய்…!

என் இளமையைக் கிள்ளிவிட்டுத்
தாலாட்டும் அதிசயமாய்…!

இதோ,

ஏதும் அறியாத
எந்திரப்பாவையாய்
என்முன்னே…

நீ…!

************

a_manavazhahan@hotmail.com

Series Navigation