பாட்டிகளின் மகத்துவம்

This entry is part [part not set] of 35 in the series 20021124_Issue

நடாலி அஞ்சியர்

பாட்டி என்ற சொல்லுக்கே ஒரு பிம்பம் மனத்தில் தோன்றும். குழந்தைகளுக்கும், இந்த சொல், ‘நான் சரியான காலின் சரியான செருப்பை போடுவதாலேயே என்னை பெரும் புத்திசாலி என்று நினைக்கும், அம்மாவும் அப்பாவும் அந்தப்பக்கம் திரும்பியதும் நிறைய இனிப்புக்களை எனக்குக் கொடுக்கும் பெரிய மனசுடைய ஒரு உருவம் ‘ என்றுதான் மொழி பெயர்க்கப்படும்.

செய்திப் பத்திரிக்கைகளிலோ, ஒரு பெண்ணை ‘பாட்டி போன்ற ‘ என்ற வார்த்தை, ‘அன்பான, வயதான, தொந்தரவு செய்யாத, குடும்பத்தின் பண்டைய பொருட்களைக் காப்பாற்றுவதில் ஆர்வமுள்ள, பெரும்பாலும் இறந்தகால ‘ பெண் என்பதன் சுருக்கமாக உபயோகப்படுத்தப்படுகிறது.

மானுடவியலாளர்களுக்கும், பழைய இன ஆராய்ச்சியாளர்களுக்கும், பாட்டிகள் சரியாக ஆராய்ச்சி செய்யவிடாத தொந்தரவுகள். சார்லஸ் வில்லியம் மெர்டொன் ஹார்ட் என்ற பெரும் மானுடவியல் ஆராய்ச்சியாளர், 1920இல் ஆஸ்திரேலிய டிவி பழங்குடியினரை ஆராய்ச்சி செய்ய சென்றபோது வயதான பெண்களை ‘டெர்ரிபிள் நியுசென்ஸ் ‘ என்று எழுதினார். இந்த வயதான பெண்களையும், பாட்டிகளையும் ஆராய்வதோ, இவர்களது கருத்துக்களை பதிவு செய்வதோ எந்தவித முக்கியமானதாகவும் இந்த மானுடவியலாளர்கள் கருதவில்லை.

ஆனால், இன்று பரிணாமவியல் உயிரியலாளர்களும், கலாச்சார மானுடவியலாளர்களும், பாட்டிகளை முக்கியமாகப் பார்த்து, அவர்களை மனித வரலாற்றின் ஆரம்பத்தில் வகித்த முக்கியமான பாத்திரத்தை புரிந்து கொள்ளவும், நாம் வளர்வதற்கு நேரம் எடுப்பதற்கும், மெதுவாக இனவிருத்தி செய்ய ஆரம்பிப்பதற்கும், கருணையுள்ள விலங்குகளாக நாம் உருவாவதற்கும், குடும்பத்தை முக்கியமாக கருதும் நம் பார்வையின் காரணத்துக்கும், பாட்டிகளை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

தன் விளைவாக, உயிரியலாளர்கள், பரிணாமவியல் உயிரியலாளர்கள், சமூகவியலாளர்கள், மக்கள்தொகை கணக்கெடுப்பாளர்கள் ஆகியோர் பாட்டிகளை கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த பாட்டிகள் கடந்த காலத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள், இவர்கள் எப்படி குடும்பத்தில் குடும்ப நலனுக்காக மாறுதல்களை ஏற்படுத்துகிறார்கள், இன்று எவ்வாறு உள்ளார்கள் என்பதை உலகெங்கும் ஆராய்ச்சி செய்துவருகிறார்கள்.

சமீபத்தில் பாட்டிகளுக்காக நடந்த முதல் உலக மாநாட்டில், நம் பரிணாம பாரம்பரியத்தில், பாட்டிகளின் பங்கீட்டை குறைவாக மதிப்பிட்டு இருப்பதையும், பாட்டி என்பது ஒரு தனிப்பட்ட பரிணாம பகுதி என்பதையும் பொதுவாக ஒப்புக்கொண்டுள்ளார்கள். பாட்டிகளுக்கு இனவிருத்தி செய்ய எந்த விதமான உடல் இல்லையென்றாலும், அவர்களுக்கு வலிமையான வளமையான வருடங்கள் வாழ்வதற்கு இருக்கின்றன. இன்னும் புராதனமான பழங்குடிகளில்கூட வளமையான வலிமையான பாட்டிகளும் தாத்தாக்களும் இருப்பது,இவ்வாறு பாட்டிகளும் தாத்தாக்களும் வலிமையாக வளமையாக வாழ்வது நவீனகாலத்து விஷயமல்ல என்பதையும் காட்டுகிறது.

மாதவிடாய் நின்றபின்னர் வாழும் பெண்கள் தங்களது உடலை குழந்தைகள் பெறுவதற்காக செலவிடவில்லை என்றால், அவர்களது சக்தியை வேறொரு இடத்தில் செலவிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நம் பரிணாம வளர்ச்சி குறிக்கிறது.

தூசுபடிந்த ஒரு மாய உருவமாக தங்கள் பாட்டிகளுக்காக குழந்தைகள் ஏங்குவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பல பழங்குடி கலாச்சாரங்களில் ஒரு பாட்டி இருக்கிறளா இல்லையா என்பது வாழ்வுக்கும் சாவுக்குமான வித்தியாசமாக பேரப்பிள்ளைகளுக்கு இருப்பதை தெளிவாக ஆராய்ச்சியாளர்கள் காண்பித்திருக்கிறார்கள். தந்தை இருப்பதை விட, பாட்டி இருப்பது ஒரு குழந்தையின் வாழ்வுக்கு முக்கியம், அது உயிர்வாழ முக்கியம் என்பதும் கூட தெளிவாகி இருக்கிறது.

லண்டனின் பல்கலைக்கழக கல்லூரியில் மானுடவியல் துறையில் பணியாற்றும் டாக்டர் ரூத் மேஸ் அவர்களும் டாக்டர் ரெபக்கா சீர் அவர்களும், காம்பியா நாட்டின் கிராமப்புறங்களை 1950லிருந்து 1974வரை ஆராய்ந்து அங்கு குழந்தைகள் உயிர்வாழும் விகிதத்தை கணக்கிட்டு பார்த்திருக்கிறார்கள். பாட்டிகள் இருக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை விட பாட்டிகள் இல்லாத குழந்தைகளின் இறப்பு விகிதம் இரண்டு மடங்கு என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

‘இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தந்தை உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது தேவையில்லாத விஷயம் என்பதுதான் ‘ என்று டாக்டர் மேஸ் அவர்கள் கூறினார். ‘பாட்டி இல்லையென்றால் அது முக்கியமான விஷயம். தந்தை இல்லையென்றால் அது முக்கியமில்லை ‘ என்று கூறுகிறார்.

அதிலும் முக்கியம், தாயின் வழி பாட்டிதான் முக்கியமான ஆள். தந்தை வழி பாட்டி இருந்தாலும் ஒன்றுதான் இல்லையென்றாலும் ஒன்றுதான்.

வாஷிங்டன் பல்கலைக்கழக மானுடவியலாளரான டாக்டர் டோன்னா லியோனெட்டி அவர்களும் அவரது துணை ஆராய்ச்சியாளரான டாக்டர் திலீப் சி. நாத் அவர்களும், வடகிழக்கு இந்தியாவில் (பெங்காளி கிராமம், காஸி கிராமம்) ஆராய்ச்சி செய்து இதே விஷயத்தைக் கண்டறிந்துள்ளார்கள். இரண்டு கிராமங்களிலும், பெரும் உடலுழைப்பும், குறைந்த ஊதியமும், நவீன கருத்தடை வசதிகளும் இல்லாமல் இருக்கின்றதையும் பதிவு செய்துள்ளார்கள்.

ஆனால் அவர்களது திருமண உறவுகளில் மாற்றம் இருக்கிறது. பெங்காலி மனைவிகள் தங்களது குடும்பத்தை விட்டு, கணவனின் குடும்பத்துடன் இணைந்து மாமியார்களால் மேற்பார்வை பார்க்கப்படுகிறார்கள். காஸி பெண்கள், தங்களது பிறந்த வீட்டிலேயே இருக்கிறார்கள். கணவன்கள் அந்த குடும்பத்தில் இணைகிறார்கள்.

பெங்காளி, காஸி இரண்டு குடும்பங்களிலும் பாட்டிகள் இருப்பது பெண்களின் இனவிருத்தியை அதிகரிக்கிறது. (வயது முதிர்ந்த பெண் இல்லாத குடும்பத்தைவிட). ஆனால், பிறந்த குழந்தைகளின் உயிர்ப்பு விகிதம் பெருமளவு மாறுபடுகிறது.

பெங்காளி பெண்ணுக்கு தந்தைவழி பாட்டி இருப்பது பேரக்குழந்தைகளின் இறப்புவிகிதத்தை எந்தவகையிலும் பாதிக்கவில்லை. 86 சதவீத குழந்தைகள் 6 வயதை அடைகின்றன( தந்தை வழி பாட்டி இருந்தாலும் இல்லையென்றாலும்). காஸி குடும்பத்தில் தாயின் வழி பாட்டி உயிருடன் இருந்தால் குழந்தைகளின் உயிர்ப்பு விகிதம் 96 சதவீதமாகவும், தாயின் வழி பாட்டி இல்லையென்றால், 83 சதவீதமாகவும் இருக்கிறது.

ஆராய்ச்சியாளர்களால், இந்த பாட்டிகள் என்ன செய்கிறார்கள் என்பதை விளக்க முடியவில்லை.

உண்மையில், பல ஆராய்ச்சியாளர்கள், பாட்டியின் இந்த நன்மையை விளக்கமுடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

பாட்ரிசியா டிராப்பர் என்ற மானுடவியல் பேராசிரியர், ‘என்ன செய்து இப்படி விளைகிறது என்பது முக்கியமான கேள்வி ‘ என்று கூறுகிறார். ‘பாட்டிகள் ஏதோ செய்கிறார்கள். என்ன செய்கிறார்கள். குடும்பத்தில் நல்லது நடக்க அவர்கள் என்ன செய்கிறார்கள் ? ‘ என்று கேட்கிறார்.

ஒரு வேளை, குடும்ப ஒற்றுமையை முன்னிறுத்துவதும், சகோதர சண்டையை குறைப்பதையும் அவர்கள் செய்யலாம் என்று கூறுகிறார்.

டாக்டர் செரில் ஜாமிஸன் என்ற இந்தியானா பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளரும், அவரது துணை ஆராய்ச்சியாளர்களும் மத்திய ஜப்பானின் ஒரு கிராமத்தில் இருக்கும் மிக முழுமையான ஒரு பிறப்பு இறப்பு ஆவணங்களை ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். 1671இலிருந்து 1871வரை இந்த கிராமத்தின் அலுவலர்கள் கிரிஸ்துவ மதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக, ஒவ்வொருவரின் பிறப்பு, இறப்பு, ஒவ்வொரு வருடமும் அந்த மக்களின் மத சார்பை கேள்வி கேட்டும், இன்னும் இதர சமாச்சாரங்களையும் முழுமையாகப் பதிந்து வைத்திருக்கிறார்கள். காம்பிய நாட்டு ஆராய்ச்சி போலவே, இதிலும் குழந்தைகளின் இறப்பு விகிதம் 16 வயதுக்குள் சுமார் 27.5 சதவீத குழந்தைகள் இறந்து போகின்றன.

தாய் வழி பாட்டி உயிரோடு இருந்தால், பையன்கள் 52 சதவீதம் குறைவாக இறக்க வாய்ப்பு இருப்பதையும் டாக்டர் ஜாமிஸன் அவர்களும் அவரது துணை ஆராய்ச்சியாளர்களும் கண்டறிந்துள்ளார்கள். எந்த பாட்டியும் இல்லாமல் இருப்பதைவிட, தந்தைவழி பாட்டி வீட்டில் இருந்தால் 62 சதவீதம்குறைவாக இறக்க வாய்ப்பு இருப்பதை கண்டறிந்துள்ளார்கள். பெண் குழந்தைகளுக்கு எந்த பாட்டி இருந்தாலும் ஒன்றுதான்.

இந்த கண்டுபிடிப்புகளை வைத்து அதிகமாகப் பேசக்கூடாது என்று எச்சரிக்கிறார் டாக்டர் ஜாமிஸன். நவீனகாலத்துக்கு முந்திய ஜப்பானில், பையன்களே பெற்றோரை கடைசிக்காலத்தில் காப்பாற்றுகிறார்கள். தாய்வழி பாட்டிகள் தங்கள் பேரப்பிள்ளைகளுடன் வாழ்வது மிகவும் அரிதான விஷயம். இருப்பினும் இந்த வித்தியாசம் ஆச்சரியப்படவைப்பது என்று கூறுகிறார்.

‘எல்லோரும் பையன்களே எல்லோராலும் விரும்பப்படுவார்கள் என்று கருதுகிறார்கள். அது இங்கே நடக்கவில்லை ‘ என்று கூறுகிறார்.

டார்வினிய சார்புள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த வித்தியாசத்தை பழைய பரிணாமவியல் கொள்கையான ‘தந்தைமை சந்தேகம் ‘ மூலம் விளக்க முயற்சிக்கிறார்கள். தாய்வழி பாட்டிகள் குழந்தைகள் நிச்சயம் தன் குழந்தை வழிதான் என்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் தன் மருமகளின் உண்மைத்தனத்தை சந்தேகப்படும் தந்தை வழி பாட்டிகள் அவ்வளவு அக்கறை எடுத்து பேரப்பிள்ளைகளைக் கவனிப்பதில்லை (ஆழ்மனரீதியில்) என்று விளக்குகிறார்கள்.

தந்தைவழி – தாய்வழி பாட்டி-தாத்தா வித்தியாசம் இன்னும் இந்தக் காலத்திலும் தொடர்கிறது என்றும் அது நம் உறவுகளையும் பாசத்தையும் பாதிக்கிறது என்று காஸல் பல்கலைக்கழ மனவியல் பேராசிரியர் டாக்டர் ஹரால்ட் ஏ யூலர் கூறுகிறார்.

இவர் சுமார் 2000 ஜெர்மனியர்களை அவர்களது தாத்தா பாட்டிகளைப் பற்றி பேட்டி எடுத்திருக்கிறார். பொதுவாக எந்த உறவினர் உங்களுக்கு மிகவும் பிடித்தவர், உங்களை நன்றாக கவனித்துக்கொள்பவர் என்று கேட்டு பதில்களை ஆராய்ந்திருக்கிறார். சுமார் 50 சதவீதத்தினர் தாய்வழிப் பாட்டியை தன் பிடித்தமான உறவினராகவும், 12 அல்லது 14 சதவீதத்தினர் தந்தைவழி பாட்டியை தன் பிடித்தமான மூத்த தலைமுறை உறவினராகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இவரது மனைவியின் தாயை விட விட்டேற்றியாக தனது தாய் இவரது குழந்தைகளை கவனித்துக்கொண்டதாக வருத்தப்பட்டிருப்பதை இவர் குறிப்பிடுகிறார் . ‘முன்பு, என்ன கல்நெஞ்சம் கொண்ட பெண் என்று நினைத்திருக்கிறேன். இப்போது நான் என் அம்மாவிடம் வருத்தப்படுவதில்லை ‘ என்று கூறுகிறார்.

மற்றவர்கள், உயிரியல் மீது பழி போடுகிறார்கள். தாயின்வழி பாட்டிக்கு இன்னொரு விளக்கம் சொல்கிறார்கள். தாய்களே பெரும்பாலும் தங்கள் குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறார்கள். அந்த குழந்தைகள் உதவி தேவைப்படும்போது யாரைக் கூப்பிடுவார்கள் ? என் – அம்மா!

‘ஒரு பெண் தனக்கு நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணைத்தான் தன் உதவிக்கு அழைப்பாள். அந்தப்பெண் பெரும்பாலும் தன்னுடைய தாயாகவே இருக்கும் ‘ என்று டாக்டர் மார்ட்டின் கோலி கூறுகிறார். ‘ஆகவே தாய்வழி பாரம்பரியமே எல்லா வித்தியாசத்தையும் உருவாக்குகிறது ‘

டாக்டர் கோலி, ஒரு புதிய ஃப்ரெஞ்ச் ஆராய்ச்சியைக் காண்பித்து, தந்தை வழி தாத்தா பாட்டிகள் தங்களது பேரக்குழந்தைகளுக்கு நிறையச் செய்ய விரும்புகிறார்கள். ஆனால், தாய் வழி தாத்தா பாட்டியைப் போல அவ்வளவாக வீட்டில் வரவேற்கப்படுவதில்லை என்பதாக உணர்கிறார்கள்.

மேலும் தாத்தா பாட்டிகள் ஒரு குடும்பத்தின் பணத்தை பல ஆரோக்கிய சமாச்சாரங்களில் வீணடிப்பவர்களாகக் கருதப்பட்டு வருகிறார்கள். அதுவும் உண்மையில்லை. அமெரிக்காவிலும் ஃப்ரான்ஸிலும் நடந்த ஆராய்ச்சிகளின் பலன், பணம் பெரும்பாலும் ஒரே வழியில்தான் செல்கிறது. அதாவது முதியவர்களிடமிருந்து இளையவர்களுக்கு.

1996இல், உதாரணமாக, 65 வயது நிறைந்த ஜெர்மானியர்கள் அவர்கள் தங்களைவிட இளையவர்களிடமிருந்து பெற்றதைவிட, தங்களை விட இளைய உறவினர்களுக்கு சராசரி 3600 டாலருக்கும் அதிகமாக கொடுத்திருக்கிறார்கள். தங்கள் வாங்கு ஓய்வூதியம் போன்றவற்றிலிருந்தும் சேமித்து தங்களது பேரப்பிள்ளைகளுக்கு, அது மகன் வழி குழந்தைகளாக இருந்தாலும் சரி, மகள் வழிக் குழந்தைகளாக இருந்தாலும் சரி வித்தியாசமின்றி கொடுத்திருப்பதை ஆராய்ச்சி தெளிவு படுத்துகிறது.

***

Series Navigation