பழைய வாத்தியார்

This entry is part [part not set] of 36 in the series 20100627_Issue

பாரதிதேவராஜ்


“என்னாங்க. உங்க பழையவாத்தியாராம். ஹால்லே உட்காரவச்சிருக்கேன் அவரோட பையனுக்கு இங்க கிண்டிலே வேலை கிடைச்சிருக்காம். உங்களப்பாத்துட்டு போலாமேன்னு வந்தேங்கிறார். சும்மாவா பாக்க வந்திருப்பார். ஆயிரத்தே கொடு, ரெண்டா யிரத்தக் கொடுன்னு பணங்கேக்கத்தான் வந்திருப்பார்ன்னு நெனைக்கிறேன் கொஞசம் உஷாரா இருங்க. ஏமாந்து ஈன்னு பல்லக் காட்டிட்டு பணத்தைத்தூக்கி கொடுத்திராதிங்க. பாத்து நடந்துக்கங்க.
“சரிசரி நீ காப்பிக்கான ஏற்பாடு செய் போ.”
ஹாலுக்குள் நுழைந்த போது பழைய அழுக்கு சட்டையுடன் உட்கார்ந் திருந்தார் வாத்தியார் பழனி. சங்கரைக் கண்டதும் எழுந்து நின்று வணக்கம் கூறினார்.
“சார் நீங்க உட்காருங்க.எவ்வளவு பெரியவங்க.என்னைப்பாத்து நிக்கலாமா.”
“அதில்லப்பா.” என்று தயங்கினார்.
“எப்ப சென்னை வந்தீங்க?”
“சென்னைக்கு வந்து நாலுநாள் ஆச்சு. பாபுவுக்கு வேலைகிடைச்சிருக்கு. அவன் சென்னைக்கு வந்ததேயில்லை. யாரையும் தெரியாது. நாலுநாள் இருந்து எல்லாம் சொல்லிக்கொடுத்துட்டு போயிர்லாம்னு இருந்தேன் அப்படியே உன்னையும் பாத்துட்டு போலாம்னு வந்தேன்.”
“ரொம்ப நன்றி சார் டிபன்சாப்பிடலாமே.”
“பரவாயில்லேப்பா. எனக்கு ஒரு உதவி கேட்க தயக்மாயிருக்கு.”
“சும்மா சொல்லுங்க.”
“பையனுக்கு ஹாஸ்டல்லே இடங்கிடச்சிருக்கு ஐயாயிரருபா டெபாசிட் கட்டணுமாம். நீதான் உதவிபண்ணணும் ஊருக்குப் போனவுடனே பணம் அனுப்பி வச்சிட றேன்.”
அப்போது சங்கரின் மனைவி காப்பியை கொண்டுவந்து டீபாயில் “ணங்”கென்று வைத்துவிட்டு,
“ஏன் சார் எங்களுக்கென்ன பணம் கொட்டியா கெடக்கு வர்ரவங்களுக்கெல்லாம் தூக்கிக் கொடுக்க. நீங்க வேறே எங்கயாவது டிரை பண்ணுங்க.”
-முகத்திறைந்த மாதிரி சொன்னாள். வாத்தியார் ஆடிப்போய்விட்டார். ஓன்றும் பேசாமல் எழுந்து கொண்டார். வுhசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார். சங்கர் வீட்டிற்குள் நுழைந்தான்.உடையை மாற்றிக் கொண்டு ஆபிஸூக்குக் கிளம்பத் தயாரானான். டேபிள் மேல் பழைய டிக்ஸ்னாp புத்தகம் இருந்தது.
“ ச்சே அந்தகாலத்திலே இந்த வாத்தியார்தான் இந்த புத்தகத்தைக் கொடுத் தார். திருப்பி கொடுத்திருக்கலாம்.”
சங்கர் பஸ் ஸ்டாப்பருகே சென்றபோது இன்னமும் வாத்தியார் நின்று கொண் டிருந்தார். பஸ்ஸூம் வரவில்லை.
“சார் எம்பொண்டாட்டி ஒருமாதிரி. தயவுசெஞ்சு நீங்க என்னை மன்னிக்கணும். நீங்க கொடுத்த புஸ்தகம். எனக்கு ஆபிஸூக்கு டைமாச்சு நான் வர்றேன்.”என்றுகிளம்பி னான.; கையில் வாங்கிய புத்தகத்தை பிரித்தபோது அதில் ஐநது ஆயிரரூபாய் தாள்கள் இருந்தன.வேறுவழியிலலை. ரோசப்பட முடியாது. ஊருக்குப் போனவுடன அனுப்பிவிடலாம்.

Series Navigation

பாரதிதேவராஜ்

பாரதிதேவராஜ்