பயராத்திரி

This entry is part [part not set] of 18 in the series 20011022_Issue

பசுபதி


மன்ஹாட்டனில் வந்தானொரு
. . . மஹிஷாசுர மூர்க்கன்;
. வணிகர்மையம் இடித்தானுடன்
. . . மடிந்தார்பலர் அன்று.

பண்டைக்கறுப் பகையால்படர்
. . . கிருமிச்சமர் அஞ்சிப்
. பாரெங்கணும் கிலிராஜ்ஜியம்
. . . பயராத்திரி இன்று.

நம்நாட்டினர் கொண்டாடிடும்
. . . நவராத்திரி நாளில்
. நயவஞ்சக அசுரர்களை
. . . நசித்தாள்ஜய துர்க்கை.

வன்பாலையில் நிகழ்தீவிர
. . . வாதாசுரப் போரில்
. வரந்தந்திடு வஜ்ரேஸ்வரி !
. . . வாளிற்துணை நிற்பாய் !

****
மன்ஹாட்டன்=Manhattan;
கறு = ஆழ்ந்த பகைமை;
கிருமிச்சமர் = biological war .

Series Navigation

பசுபதி

பசுபதி