அதிரை தங்க செல்வராஜன்.
குடிக்கிறது தப்பாப்பா?
முப்பது வருஷத்துக்கு முன்னாடி அம்மாகிட்டே நான் கேட்ட
அதே கேள்வி இன்று என் மகன் என்னிடம்.
என் மீசை முடியை இழுப்பதும் விடுவதுமாய் விளையாடிக்
கொண்டிருந்தவனுக்கு இப்படி ஒரு கேள்வி எப்படி தோனுச்சுன்னு தெரியலே.
தப்புதான், குடிச்சா உடம்பு கெட்டுடும், சீக்கிரம் செத்து போய்டுவோம்.
அப்புறம் ஏம்பா குடிக்காத நம்ம தாத்தா செத்துட்டாங்க, குடிக்கிற பக்கத்து
வீட்டு தாத்தா இன்னும் சாகலை.
போடா உள்ளே, பொழுதன்னைக்கும் பெரிய மனுஷனாட்டம் தொன
தொனன்னு.
தப்பிப்பதற்கு வேறு வழியில்லை.
கன்னிக்கோயிலும் கடலூரும் முட்டிக்கொள்ளும் இடத்தில் முளைத்திருந்த
வெள்ளை மாளிகைதான் ஐந்து நட்சத்திர விடுதி. மாத உற்பத்தியும்,
விற்பனையும், குறித்த இலக்கை தொட்டோ, தாண்டியோவிட்டால் அதனால்
ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க எங்கள் தலைகளின் தாக சாந்தி இங்குதான்.
மச்சான் ஏழரைக்கு ஷார்ப்பா வந்துடு,
ஏன்டா நீ வீட்டுக்கு வரலை,
ஹேயார், ஐ டோன்ட் பைன்ட் எ டைம்யா.
சும்மா எம்டிக்கு சொம்பு தூக்காதடா.
நீள் செவ்வக மேசையின் முன் ஆளில்லாத நாற்காலிகள் தியானத்திலிருந்தன.
ஏழரை மணிக்கு என்னைத் தவிர யாருமில்லை.
ஏசியின் மீது விசிறப்பட்ட பர்·ப்யூம் தொன்டையை கரகரக்கச் செய்தது.
நேரம் நகர மறுத்தது, கடிகாரத்தை உத்து பார்த்த போது நொடி முள்
வேக வேகமாய் ஓடிக்கொண்டிருந்தது தொழிலாளிகளைப்போல, நிமிட
முள் யோசனையாய் நகர்ந்து கொண்டிருந்தது மேற்பார்வையாளர்களைப்போல,
மணி முள் நகர்வதே தெரியவில்லை முதலாளியைப்போல. பத்மா சொல்வது போல்
ஏந்தான் இப்படி கிறுக்குத்தனமா சிந்திக்கிறோம்னு தெரியலே. யாராவது வந்தா
போதும்னு இருக்கு, தாமதமா வருவதற்கு ஏன் குறிப்பிட்டு நேரம் சொல்லனும், எழுந்து
வெளியில் வந்த போது சீனு வந்து சேர்ந்தார்.
வணக்கம் சார், இன்னைக்கு இவர் எத்தனை “சார்” போடறார்னு எண்ணனும்.
ஐந்து நிமிடத்தில் அறையின் நிலையே மாறிவிட்டது. எடையில் சதம் போட்ட அர்னாப்,
தரக்கட்டுப்பாட்டுத் தலை, அரை போத்தல் ஜெலுசிலை வாயில் கவிழ்த்தார்.
குடிப்பதற்கு முன் இப்படிச்செய்தால் உள் உறுப்புகள் கெடாது என்ற இமாலய
கண்டுபிடிப்பை சப்தமிட்டுக்கொண்டிருந்தார். எம்டி நுழைந்த போது சற்று அமைதியாகி
மீன்டும் மீன் மார்க்கெட்டானது. அவரவர் பிரேன்டிற்கு ஆர்டர் தர, நான் பெப்ஸி
என்றேன்.
ஹேய் என்னாச்சு ட்ரிங்ஸ் எடுக்கமாட்டியா? வீட்டில பயமா?
பழக்கமில்லே.
என்னாச்சு செல்வா இமேஜ் பில்ட்டப்பா? எம்டியின் வார்த்தைக்கு எல்லோரும் கோரஸ்
பாடினார்கள். தொட்டதேயில்லை சார். இந்த “சார்” பாட்டை நிறுத்தி மிஸ்டர்னு பேர்
சொல்லி பேச நினைக்கிறேன், முடியலே.
சீனு பியர் பாட்டிலுடன் டூர் கிளம்பி விட்டார், ஒரு வளைவான போஸில் எம்டியின்
அருகில், எம்டி சற்றே நகர்ந்தார், சீனுவின் திருவிளையாடல் தொடங்கியது.
சார் யூ குட் சார், யூ ஸ்ட்ரிக்ட் சார், ப்ராமிஸ் சார் சம்டைம் ஐ அ·ப்ரைட் சார்
யுவர் ட்ரெஸ் பியூடி·புல் சார்.
ஓகே சீனு ரிலேக்ஸ்.
ஐ லவ் யூ சார். பாட்டிலோடு தலைக்கு மேல் கை தூக்கினார். எம்டியின் முகத்தில்
வெக்கம் கலந்த குழப்பம். என்ன சீனு ·பார்ம் ஆயிட்டிங்களா? கேட்ட அக்கவுன்ட்ஸ்
மேனேஜர் மாட்டினார். சீனுவின் கலைகட்டல் தொடர்ந்து கொண்டிருந்தது.
செல்வா அட்லீஸ்ட் வொய்ன்,
நோ ஸ்மெல், நோ கிட்டினெஸ்.
ரெண்ட்டுமில்லேனா அப்புறம் எதுக்கு சார் குடிக்கனும்.
இதுக்கு முன்னாடி பார்டி அட்டென்ட் பன்னதில்லையா?
நிறைய, பட் பெப்ஸிதான்.
அம்மாவுக்கு சத்தியம் செஞ்சிருக்கேன், குடிக்கிறதில்லேன்னு.
என்ன பெரிய காந்தின்னு நெனைப்போ. ஏன் காந்தினாத்தான் குடிக்காம இருக்கனுமா?
என்ன வயசாச்சு உங்களுக்கு? அம்மாதான் இப்ப இல்லை போலருக்கே செல்வா.
பத்து வருஷமா அம்மா எங்கூட இல்லைதான் ஆனா அவங்க சொன்ன வார்த்தை
எப்பவும் எங்கூடயிருக்கு.
” டீன் ஏஜ்ல ஒருத்தர் எந்த பழக்கத்துக்கும் அடிமை ஆகலைனா சாகறவரைக்கும்
எந்த பழக்கமும் அவரை நெருங்காது.”
இப்ப எனக்கு இதெல்லாம் பார்த்தா எந்த டெம்ப்டும் இல்லை சார்.
விளம்பரத்திற்கு தெருவில் போகும் சர்க்கஸ் கோமாளியை போல் சீனு
உச்சக்கட்டத்திலிருந்தார். டைனோசர் வாயில் மாட்டிய எலி போல, அர்னாபிடம்
மாட்டிய சாப்பாட்டு வகைகள். “பீபீக்கி மாலும் படேஹா தோ மார்காயகா” என்றவரை,
ஜா ஜா, என்றவாறு காரியத்தில் கண்ணாயினார்.
குடிச்சா தப்பா? கேட்டது எம்டி, தினமும் குடிக்கலைனா தப்பு மாதிரி தெரியலே சார்.
என் பையன் அவனது பிருஷ்டத்தை ஆட்டி தில்லா தாங்கு தாங்கு திருப்பி
போட்டு வாங்கு என ஆடுவது போல் தோன்றியது.
செல்வா உங்களுக்கொன்னு தெரியுமா?
எம்டி தொடர்ந்தார், என்னால ரெண்ட்டு பெக் இல்லாம தூங்க முடியல. தினமும்
எம்பையன் இந்த பெப்ஸி எனக்கு வேணும்னு அடம் பிடிச்சான். வீட்டுக்காரி
கவனிக்காத சமயத்திலே அவனுக்கு கொஞ்சம் ஊத்தி கொடுத்திட்டேன்,
கசப்பு தாங்காம துப்பிட்டு, அப்பாவோட பெப்ஸி நல்லாவே இல்லைனுட்டான்.
அதுலேந்து அவன் தொந்தரவேயில்லை. நான் செஞ்சது சரியா, தப்பானார்.
கழுத்துக்கிட்ட கத்தியை வச்சுக்கிட்டு சாவானா, மாட்டானானு பந்தயம் கட்டின
மாதிரியிருந்துச்சு.
புகை, ட்ரிங்ஸ் ஸ்மெல், சூடான சாப்பாட்டு வகைகளின் மணம் எல்லாம் கலந்து
ஒரு துர்வாசனையை பரப்பிக்கொண்டிருந்தது. யாரோ ஒரு நல்ல ஆத்மா
சன்னல் கதவை திறந்து விட்டது. நேரம் நகர்ந்ததே தெரியவில்லை.
சீனு மந்த கதிக்கு வந்த பிறகும் ஐ சாரி சார், ஐ பெக் பெர்டன் சார் என “சார்”
போடுவதை நிறுத்தாமலிருந்தார். எக்ஸ்க்யூஸ்மீ என்னை வாசல் வரைக்கும் ட்ராப்
பன்னமுடியுமாவென மயில்சாமியின் அவதாரமெடுத்துவிட்டார்.
வண்டி எடுக்கச்செல்லும்போது வீட்டுக்காரிக்கு சொல்ல புத்தி நல்ல காரணத்தை
தேடத் தொடங்கிவிட்டது.
கதவை திறந்தவள், முகச்சுழிப்போடு குளிச்சிட்டு வாங்க, நாத்தம் புடுங்குதென்றாள்.
மறுநாள் காலை பத்து மணி, முன்னிரவு நிகழ்வுகள் தெரியாது அவரவர் வேலையில்
கரைந்திருந்தனர்.
பர்ஸனல் டிபார்ட்மென்டில் தொழிலாளர் தலைவர் ராமு குடித்துவிட்டு வந்ததற்காக
பிடிபட்டு மன்னிப்பு கடிதம் எழுதிக்கொண்டிருந்தார்.
குடிச்சா குடும்பம் எப்படி ஓடுறது, பொழைக்க முடியுமா?
நீங்களே சொல்லுங்க, குடிக்கிறது தப்பா, இல்லையா?
எம்டியின் குரல் சற்று உச்சத்தில்.
எனக்கு கொஞ்சம் குடித்தால் தேவலாம் போலிருந்தது.
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 8
- ஓரின காதல் – வரவேற்கத்தக்க ஒரு சட்டதிருத்தம்
- வேத வனம் -விருட்சம் 40
- கரியமில இரகசியம்
- நண்பர் வஹாபிக்கு நன்றி
- Satsang led by Sri Nithya Bhaktananda Swami a direct disciple of Enlightened Master Paramahamsa Nithyananda
- முத்துக்கமலம் இணைய இதழ்
- “இரவலனாய் மாறிய மன்னன்”
- சித்திர சிற்பி, புதிர் குரு= தமிழில் இரண்டு மென்பொருட்கள்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பரிதி மண்டலம் சுற்றும் நமது பால்வீதி காலாக்ஸி எப்படி இயங்குகிறது ? (கட்டுரை: 60 பாகம் –
- உயிர்த்தெழுதல்…
- அவரவர் திராட்சை..
- இருட்டுக்குள் தீப்பிளம்பு…
- நான் முடிவு செய்கிறேன் உன்னை
- வானம் பாருங்கள்
- மைக்கல் ஜாக்சன்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -2
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் கீதம் கவிதை -12 பாகம் -2
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -43 நீ ஒரு தென்றல்
- ஜன்னத்தில் மதுக்குடங்கள் தாங்கிய 72 சுவன கன்னிகைகளை எதிர்நோக்கி
- KhudaKayLive (in the name of god) திரைவிமர்சனம்
- வார்த்தை ஜூலை 2009 இதழில்…
- எதிரும் புதிரும்
- அறிவியல் புனைகதை: ‘பிறர்’ என்ற எதிர்காலம்
- பதின்மம்
- அவள் ஒரு தொடர்கதை
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திரெண்டு
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தாவது அத்தியாயம்