படித்ததும் புரிந்ததும் 13 – வல்லமை தாராயோ என் இனிய தமிழ் மக்களைத் திருத்த

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

விஜயன்இடம் கும்பகோணம், மாமி தியேட்டரில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ‘ஸ்ரீனிவாசக் கல்யாணம் படம் போடறாள் பார்த்துட்டுவரேன் வீட்டை பத்திரமா பாத்துக்கோங்கோ! பாத்துடி சாமிப்படம் பார்க்கும்போது செருப்பை போட்டுண்டு போகாத யாராவது இந்து முன்னனிக்காரா குஷ்பு மேலே கேஸ் போட்ட மாதிரி உன் மேலேயும் போடப்போரா?
செய்தி நவம்பர் 29; அம்மன் சிலையை அவமதித்தார் குஷ்பு சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன் வல்லமை தாராயோ படத்தின் துவக்க விழாவில் முப்பெரும் தேவியர் செட்டில் சிலை முன் நாற்காலியில் நடிகை குஷ்பு செருப்புடன் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தது குறித்து கும்பகோண நகர இந்து முன்னணி செயலாளர் குருமூர்த்தி கோர்ட்டில் இந்து மத உணர்வை அவமதித்ததால், குற்றவியல் வழக்கு. மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி அதன் விசாரனையை வருகிற டிசம்பர் 3ம் தேதி ஒத்திவைத்தார்.
கேள்வி; ஒரு திரைப்பட துவக்க விழாவில், நாற்காலி போட்டு அந்த
விழாவில் சாமிபடமோ அல்லது பேப்பர் மேஷ் உருவ பொம்மையோ இருந்தால்,
அதற்கு முன்னால் செருப்பு போட்டுக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தால், அது மத உணர்வை அவமதித்தத் குற்றமா? என்றால் சந்தேகமே இல்லாமல் அது குற்றம் இல்லை என்று சொல்லலாம். குற்றம் நடந்த இடம் ஒரு வழிபடும் இடமாக இருந்தால், அங்கு செருப்பு போட அனுமதி இல்லை என்றால், கடவுளை வழிபடும் சன்னிதானத்தில் செருப்புடன் வலம் வந்தால் குற்றம் எனச் சொல்வது சரி. ஒரு சினிமா படப்பிடிப்பு நிகழ்ச்சியில் (மத சம்பந்தப்பட்டதல்ல) செருப்புடன் அமர்வது எந்த விதத்தில் மத உணர்வை புன்படுத்துவதாகும். இது போன்ற மலிவான விளம்பர வழக்குப் போடுபவரை, (தற்போது இது போல மூன்று வழக்குகள் பதிவாகியுள்ளது) மற்றும், அந்த வழக்கை விசாரனைக்கு, ஏற்க நோட்டிஸ் போட்ட மாஜிஸ்ட்ரேட் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் இது போன்ற வெட்டி விளம்பர வழக்குகள் போடுவது நிற்கும்.
செய்தி 2: செயற்கை மழை வரவழைக்க அப்துல்கலாம், முதல்வர் மற்றும் ரஜினி உதவவில்லை. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குற்றவாளி ஞானவேல் வாக்குமூலம் தினகரனில் குற்றவாளியின் படத்துடன் செய்தி. தமிழர்கள் முதலில் இது போன்ற மூட நம்பிக்கையுடன் அரசியல் தலைவர்களையோ அல்லது நடிகர்களையோ நம்பி, எதிர்கால கணவுகளை வளர்த்துக் கொள்வது கடைந்தெடுத்த முட்டாள்தனம். கண்டு பிடிப்பு என்று ராமர் பிள்ளை போல சொல்லிக் கொண்டு அலைபவருக்கு முதல்வரோ, ரஜினியோ ஆதரவு தர வேண்டிய அவசியம் இல்லை. அதன் தோல்வியை பிரபல்யத்திற்காக வெடிகுண்டு மிரட்டல் மூலம் மக்கள் கவனத்தை தன்பக்கம் திரும்ப வைப்பது அதைவிடக் கேவலம். அப்படிப்பட்ட நபருக்கு படத்துடன் கூடிய செய்தி போடுவது உச்சக்கட்ட கேவலம்.
மேலே குறிப்பிட்ட இந்த இரண்டு செய்திகளின் சாரம்சம் மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்கு சிந்தனையின்றி கேவலமான செயலில் ஈடுபட்டாலும் அதற்கு விளம்பரம் கிடைத்தால், தமிழ் சமூகம் எப்படி சாதனை செய்யும் சமூகம் ஆகும் என்பதைத்தான். இந்த அவலங்களிலிருந்து மீள எல்லாம் வல்ல இறைவன் தான் வல்லமைத்தர வேண்டும்!
செய்தி 3: பாமக தலைவர் ராமதாஸ் மருத்துவ மாணவர்களின் ஸ்டிரைக் பற்றி செஞ்சியில் கூறுகையில் தனக்கு வருடத்திற்கு ஒரு போராட்டம் நடத்தவில்லை என்றால் தலை வெடித்துவிடும் என்றும். வரிப்பணத்தில் படிக்கும் மரு;ததுவ மாணவர்களின் படிப்பை மேலும் ஓராண்டு நீடிக்க அன்பு மணி ராமதாஸின் திட்டத்தை எதிர்ப்பது தவறு என்று திரித்துக் கூறுகிறார்.
மருத்துவப் படிப்பு என்பது மருத்துவ கவுன்சில் எனும் அமைப்புக்கு உட்பட்டது. தற்போது மருத்துவ படிப்பு ஹவுஸ் சர்ஜன் காலம் சேர்த்து 5 1/2 வருடம் அதை 6 1/2 வருடமாக்க தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு சட்டமாக இயற்ற முடியாது. புதிதாக அடுத்த வருடம் சேரும் மாணவருக்கு வேண்டுமானால் சட்டம் போடலாம். மருத்துவப்பணி என்பது வேறு, மருத்துவக் கல்வி என்பது வேறு. மருத்துவப்பணி மாநில அரசின் ஆட்சிக்கு உட்பட்டது தற்போது மருத்துவம் படிக்கும் எல்லா மாணவர்களுக்கும், வேலை உத்திரவாதம் இல்லை டாக்டராக பதிவு செய்து பின்னர் வேலையில் சேர்ந்த பிறகு கிராமத்தில் பணி செய்ய ஆணையிட்டால் அது சரி ஆனால் படிப்பின் ஒரு பகுதியாக, வேலை உத்திரவாதம் இல்லாமல் கிராமத்தில் படிக்கச் சொல்வது அறிவீனம். மக்கள் வரிப்பணத்தில் மந்திரியாய் இருக்கும் அன்பு மணி எந்த கிராமத்தில் எத்தனை மாதம் மருத்துவராகவோ அல்லது அரசியல் வாதியாகவோ வேலை செய்தார்? ஊருக்கு உபதேசம் செய்யும் தலைவர்களே நீங்கள் முதலில் மற்றவர் பின் பற்றும் தலைவராய் நடக்க முயற்சியுங்கள். ஏளிமை, நேர்மை இவற்றை அறிவுறுத்திய மகாத்மா காந்தி முதலில் அவர் அதை சத்ய சோதனையாக கடைப்பிடித்தார். அதனால் பிறர்க்கு உபதேசம் செய்ய அவருக்கு யோக்யதை உண்டு. தினம் ஒரு போராட்டம், காலத்துக்கு ஒவ்வாத இட ஒதுக்கீடு சாதி அரசியல் செய்யும் ராமதாசுக்கு மருத்துவ மாணவர்கள் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? கிராமத்தில் முதலில் வசதி வேண்டுமானால் அதற்கான அடிப்படை வசதியை கிராமத்தில் உண்டாக்க அன்பு மணியோ ராமதாஸோ செய்தது என்ன? அன்பு மணி ராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராய் எத்தனை கிராமங்களில் ஆஸ்பத்திரிகள் உருவாக்கினார்? போன்ற கேள்விகளை அவரே கேட்டுக் கொண்டால் நல்லது.


kmvijayan@gmail.com

Series Navigation

விஜயன்

விஜயன்