This entry is in the series 20100613_Issue

ராம்ப்ரசாத்


கொடியதொரு மிருகத்தின்
மீதேறி சவாரி செய்கிறாய் நீ…
எல்லோரையும் போல…
அதன் வேகத்தின் மயக்கத்தில்
ஏறி நீ அமர்கையில்
யாரும் உன்னை தடுத்திருக்கவில்லை…
அத‌னை அந்நேர‌ம் வ‌ரை
யாரும் க‌வ‌னித்திருக்க‌வில்லை…
உன்னுட‌ன் ச‌வாரி செய்யும்
ஏனையோர் மீதே
உன் அவ‌தானிப்புக‌ள் முடிகிற‌து…
அத‌ற்கு மேல் உன்
அவ‌தானிப்புக‌ள் முதிர‌வில்லை…
அத‌னின்றும் இனி உன்னால்
இற‌ங்க‌ இய‌லாது…
க‌ட‌ந்து போகும் அழ‌கான‌ பூஞ்சோலைக‌ள்
உன் க‌வ‌ன‌த்தில் வ‌ராது…
ந‌ல்ல‌வேளை நான்
ந‌ட‌க்க‌ப் ப‌ழ‌கியிருந்தேன்…

20100613_Issue

ஏ.தேவராஜன் 2 கவிதைகள்