This entry is in the series 20040205_Issue

திலகபாமா


ஈரம் தோய்ந்திருந்த

கொல்லைப் புறக் கதவாய் நானும்

நிிலையோடு பொருந்த மறுக்க

அடித்து சாத்தியாயிற்று

திருஷ்டி கழித்து

தீயில் கரைய விட்ட சூடமோடு

எரியும் ஆசைகளோடு

முன் கதவும் தாழிட

உரை குத்திய பால்

நீருள் கன்னிமை காக்க

மூழ்கடிக்கப் பட்ட சோறு

சூடேற்றிய குழம்பு

எல்லாம் பார்த்து பார்த்து மூடி வைக்கப்படது

என்னையும் சேர்த்து

எதை தொலைத்து விடாமலிருக்கனும்

என் ற கேள்வியுடன்

தொலைந்த இருளோடு

நேற்றைய நிஜம் கரைந்து போயிமிருக்க

மூடி வைத்திருந்த புத்தகத்துள்

எழுதப் பட்டிருந்த கவிதை

சேகரம் செய்திருந்தது

யாராலும் சேமிக்க முடியாத

நேற்றைய பொழுதின்

நிஜங்களின் படிமங்களை

—————————
mathibama@yahoo.com

Series Navigation