நில அதிர்ச்சி – ஒரு அனுபவம்

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

கோச்சா (எ) கோவிந்த்


—-

புதன் ( செப்டம்பர் 9,2004 ) இரவு 9மணிக்கு மின் தொடர்பு போனது. கடுமையான வெயில் வேறு பகலில் அடித்ததால், புழுக்கும் வேறு.

சிறிய டார்ச் வைத்து குழந்தையைத் தூங்க வைத்தேன்.

அப்புறம், இரவு 12 மணிக்கு மின் இணைப்பு மீண்டும் வந்தது.

அப்புறம் அப்படியே தூங்கப் போனேன்.

திடாரென்று, ரொம்ப அதிர்வாக இருந்ததால், எழுந்தேன். மணி 332Am என்றது கடிகாரம்.

தூரத்தில் உடனே ஒரு நாய் சற்று குலைத்து ஓய்ந்தது.

நான் வசிப்பது ஒரு மூன்று தள அடுக்குமாடி குடியிருப்பு. எல்லாம், மரத்தினால் ஆனது.

எனக்கு உடனே உள்ளுணர்வு பூகம்பம் என்று சொன்னது. எழுந்து குழந்தை முகம் பார்த்தேன், அசந்து தூங்கிக் கொண்டிருந்தது.

ஜன்னல் வழி பார்த்தால் எந்த அரவமுமில்லை. எனக்கும், ‘Duck and Cover ‘ என்று தற்காப்பிற்கு சொல்லிக்கொடுத்த விஷயத்தை செயல்படுத்தத் தோன்றவில்லை.

தெரியாதவர்களுக்கு, DUCK & COVER என்றால், ஏதாவது மேசை அல்லது கட்டில் அடியில் வாத்து போல் நுழைந்து தலை மேல் கையை வைத்து பாதுகாத்துக் கொள்வது.

மனைவிக்கும் தூக்கம் கலைந்தது ‘என்ன சத்தம் ‘ என்று கேட்டாள்.

ஆனால், மனைவியிடம் யோரே அதிர அதிர மேல் மாடியில் நடந்திருப்பார் என்று சொல்லி விட்டு நேராக இண்டெர்நெட்க்குள் நுழைந்தேன்.

www.cnn.com பார்த்தேன் … ஜகார்த்தா வெடிகுண்டு செய்தி பிரதானமாக இருந்தது.

பின் google searchl ‘california earthquake monitor ‘ என்று போட்டுத் தேடினேன்.

அப்போது மணி 404 ஆகிவிட்டது.

வந்த பல தள இணைப்புகளில் நான் கிளிக் செய்தது, ‘http://quake.usgs.gov/recenteqs/index.html ‘

என்னே விஞ்ஞான அதிசியம்,

அப்பகுதியில் முழு விவரத்துடன், 3.32.29க்கு ஒர் பூகம்பம் நான் வசிக்கும் ( அமெரிக்கா – கலிபோர்னியா ) சான் ஓசே பகுதியில் என்று கூறியது. மேலும், நீண்ட விவரமும் இருந்தது, வந்த அந்த அழையா விருந்தாளி பூகம்பத்தைப் பற்றி.

பூகம்பம் வந்தால், வெட்டவெளியில் போய் நிற்க வேண்டும் என்று தற்காப்பிற்கு சொன்னது தெரிந்தும், வெளியில் ஆட்கள் வரவில்லை என்று ஜன்னல் வழி தெரிந்ததால், என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

நண்பர்களுக்கு ஒரு மெயில் தட்டி விட்டு, திண்ணை வாசகரிடம் அனுபவம் பகிர்ந்து கொள்ள எழுதி உடன் அனுப்புகிறேன் இதோ.

பின் உடன் தூங்கப் போகனும்.

ஆனால், தற்காப்பிற்கு வெளியே போய் நிற்கப் போகவில்லை.

இந்த மனநிலை தான், பூகம்பத்தை விட அழிவு அதிகம் தரும் தமிழகத்தில் அரசியல்வாதிகளின் செயல்பாடுகளுக்கு கூட எந்த தற்காப்பு நடவடிக்கையும் நாம் எடுக்காமல் இருப்பது…. ?

ஏனோ, திருக்குறள், ‘வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை…. ‘ ஞாபகம் வந்து போகிறது.

—-

gocha2004@yahoo.com

Series Navigation