நாவல் பட்டியல் பற்றி மீண்டும்

This entry is part [part not set] of 15 in the series 20010430_Issue

கோபால் ராஜாராம்

ஜெய மோகனின் இரண்டு கடிதங்களையும் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஜெய மோகன் தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதிலோ அவருடைய கருத்துகள் சீர் தூக்கிப் பார்த்து வெளியிடப் பட்டவை என்பதிலோ எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அவர் எழுப்பியுள்ள சில பிரசினைகளை மீண்டும் அலச வேண்டும்.

ஜெய மோகன் எழுதுகிறார் : ‘கோ.ராஜாராமின் ஒரு கருத்தை மிக மிக கடுமையாக கண்டிக்க விரும்புகிறேன்.அது தமிழ் சூழலின் படிப்பு

பற்றியது.தமிழ் வாசகர்களின் எண்ணீக்கை மிகமிக குறைவு என்பது எந்த அளவு உண்மையோ அந்த அளவு உண்மை

தமிழின் சீாிய வாசகர்களின் வாசிப்புத்தரம் எந்த உலகத்தரத்துக்கும் இணையானது,பலசமயம் மேலானது

என்பதும்.கோ.ராஜாராமின் வாசிப்புத்தரம் அதை மதிப்பிடும் தகுதியுள்ளதல்ல என்றே அவரது எழுத்தை வைத்து நான்

மதிப்பிடுகிறேன்.[அவையடக்கம் இங்குதான் தேவைப்படுகிறது].தமிழின் புதுத் தலைமுறை எழுத்தாளர்களில் பலரை

நான் தனிப்பட்ட முறையில் அறிவேன்.சில கருத்தரங்குகளில் அமோிக்க /ஐரோப்பிய படைப்பாளிகளை சந்திக்கும்

வாய்ப்பும் எனக்கு கிடைத்துள்ளது. அவர்களை விட எல்லாவகையிலும் மேலானவர்களாகவே தமிழ் படைப்பாளிகளை

என்னால் மதிப்பிட முடிந்தது. எந்த ஒரு முக்கிய உலகஇலக்கியப் படைப்பும் ஒரு வருடத்தில் இச்சூழலில்

பழையதாகிவிடுகின்றது என்பதே உண்மை.புதிய தமிழ்ப் படைப்பாளிகளான பிரேம் -ரமேஷ்,எஸ்,ராமகிருஷ்ணன், எம்.யுவன்

முதலியோருக்கு விாிவான முறையில் மரபிலக்கிய பயிற்சியும் தத்துவ பயிற்சியும் உண்டு.இவ்வகையில் அமொிக்க

/ஐரோப்பிய இளம் படைப்பாளிகளின் ‘தரம் ‘ என்னை அதிர்ச்சி கொள்ள வைத்ததுண்டு, அதை

எழுதியுமுள்ளேன்.கோ.ராஜாரமின் கூற்று ஒருவகையில் அவதூறின் பணியையே ஆற்றுகிறது.கோ.ராஜாராமின் உலக இலக்கிய அறிமுகம்

பொன்னீலனின் அரசியல் தகவல்பதிவையும்,தமிழவனின் தழுவலையும் ரசிக்கும் நிலைக்குத்தான் அவரை உயர்த்தியுள்ளது

என்பதை காண்கையில் அவர் சொல்ல வருவது என்ன என்று புாிகிறது. ‘

இந்தக் கட்டுரையில் எங்குமே நான் புதிய எழுத்தாளர்களின் படிப்புப் பற்றியோ படிப்புத் தரம் பற்றியோ ஒரு வரி கூட எழுதவில்லை. புதிய எழுத்தாளர்கள் பலரும் ஜெய மோகன் உட்பட – எனக்குத் தெரிந்த சொற்ப வங்காளம், இந்தி, ஆங்கில அறிவைக் கொண்டு ஒப்பிட்டாலும் கூட — உலக இலக்கியத் தரத்தில் எழுதுபவர்கள் தான். இப்படிப் பட்ட சிறப்பான எழுத்தாளர்களுடன் சமகாலத்தவனாய் இருப்பதில் நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். நான் என் சமகால எழுத்தாளர்களை ‘இளம் ‘ எழுத்தாளர்கள் என்று விளித்து அவமதிப்பவனும் அல்ல.

உண்மையில் இந்தப் படைப்பாளிகளின் படிப்புத் தரம் பற்றிய என் பார்வையில், ஜெய மோகனிடமிருந்து வெகுவாக மாறுபடுகிறேன். படைப்பாளிக்குப் பரவலான படிப்பு இருப்பது அத்தியாவசியமான ஒன்று என்று கூட நான் கருதவில்லை. படைப்பாளிக்குச் செய் நேர்த்தியைக் கற்றுக் கொடுக்க படிப்பு உதவலாம். ஆனால் தமிழ்ச் சூழலில் இவர்களின் படிப்பு துறுத்திக் கொண்டு பல புதிய எழுத்தாளர்களின் இயல்பான படைப்பூக்கத்தையும், படைப்பின் உள்ளார்ந்த தொனியையும் விட்டு விரட்டிக் கொண்டிருக்கிறது என்பது என் எண்ணம். என் வாசிப்புத் தரம் , மட்டுமல்ல ஜெயமோகன் அல்லது யாருடைய வாசிப்புத் தரமுமே மற்ற படைப்பாளிகளின் படிப்புத் தரத்தினை எடை போடத் தகுதியற்றது என்று தான் நினைக்கிறேன். படைப்பின் விமர்சனத்துக்குப் படைப்பாளியின் படிப்புத் தரம் பற்றி அறிவதோ, அது பற்றிக் கருத்துக் கொள்வதோ, இன்னும் இது போன்ற படிப்புப் பரப்பு சார்ந்த எந்த விதக் குறுக்கீடும் பயனற்றது என்பதே என் கருத்து. டால்ஸ்டாயையும், தாஸ்தாவ்ஸ்கியையும், ஷேக்ஸ் பியரையும் படிக்காத படைப்பாளிக்கு தனிப்பட்ட முறையிலான இழப்பு எனினும், படைப்பாக்கத்தின் சிறப்புக்கு நேரடியாக இதனால் ஏதும் இழப்பு இருக்க வேண்டியதில்லை, நீ இதைப் படித்திருக்கிறாயா, இல்லையென்றால் நீ எழுதவே தகுதியில்லாதவன் என்றெல்லாம் மிரட்டுகிற தொனியில் நான் எழுதத் தயாரில்லை,

ஆனால் ‘புதிய தரிசனங்கள் ‘ பற்றிய என் கருத்தைத் தெரிவிக்க இது இன்னுமொரு வாய்ப்பாய் அமைந்துள்ளது. பொதுவாகத் தமிழில் கீழ்த் தட்டு மக்களைப் பற்றிய படைப்பிலக்கியப் பார்வைகளில் மத்தியதர வர்க்கத்து ஒழுக்கப் பார்வையும், விமர்சனப் பார்வையுமே தொக்கி நின்றுள்ளன. அதனாலேயே அதன் சித்தரிப்புகளில் ஒரு அதீத ‘அனுதாபம் ‘ மேலோங்கி இருக்கிறது. அல்லது அவர்களின் ‘கீழ்மை ‘ பற்றிய விமர்சனமாய் வெளிப்படுகிறது. இதன் உச்சம் (இதை உச்சம் என்று சொல்லமுடியுமா என்று தெரியவில்லை அடி மட்டம் என்று வேண்டுமானால் சொல்லலாம் ) க நாசு வின் ‘பொய்த் தேவு ‘ . இதில் கதை ஆசிரியனே சேரி வாழ் மக்களை நாயென்றும் பேயென்றும் வசை பாடுதல் போக , பிராமணிய விழுமியங்களை ஏற்று இவர்கள் உய்வு எய்த வேண்டும் என்ற ஒரு விருப்ப நிறைவேற்றமும் உள்ளது.

இந்தப் பார்வைக்கு நேர் எதிரிடையான பரிவும் , புரிதலும் கொண்டு அவர்களின் வாழ்க்கை முறையை விமர்சனமற்று அர்த்தமுள்ள மெளனத்துடன் -அல்லது சற்றுப் பெருமிதத்துடன் கூட – சித்தரித்த படைப்புகள் தமிழில் உண்டு. ஜெய காந்தனின் ‘உன்னைப் போல் ஒருவன் ‘, ‘வாழ்க்கை அழைக்கிறது ‘, சிவகாமியின் ‘பழையன கழிதலும் ‘ (குறிப்பாக முதல் 120 பக்கங்கள்) , ‘ஆனந்தாயி ‘ , கி ராஜ நாராயணனின் ஆரம்ப காலக் கதைகள், விழி பா இதய வேந்தனின் கதைகள், சி எம் முத்துவின் ‘கறிச் சோறு ‘, குமார செல்வாவின் கதைகள், பொன்னீலனின் ‘கரிசல் ‘ , ஜி நாக ராஜனின் ‘குறத்தி முடுக்கு ‘ , பூமணியின் ‘பிறகு ‘ , பாமாவின் ‘கருக்கு ‘ , நாஞ்சில் நாடனின் ‘தலை கீழ் விகிதங்கள் ‘ முதலிய பல படைப்புகளைச் சொல்லலாம். ஜி நாக ராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே ‘ நாவலையும் இதில் சேர்க்கலாம். ஆனால், அதில் எதிரிடை விமர்சனமாய், மத்திய தர வர்க்கத்தின் விழுமியங்கள் கேலி பண்ணப் படும் போது மெளனம் குலைகிறது.

துரதிர்ஷ்ட வசமாக இந்த மெளனம் , வெறும் யதார்த்த வாதம் எனப் புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப் படுகிறது. சம்பிரதாயமான மார்க்சியப் பார்வையில் இது ‘நேசுரலிசம் ‘ என்று குறிப்பிடப் பட்டு தீர்வை அளிக்க வில்லை என்று சொல்லப் பட்டது. மற்ற விமர்சகர்கள் வெறும் யதார்த்தம் தான் இது, தகவல் பதிவு என்று விமர்சனம் செய்கிறார்கள் , அது மட்டுமல்லாமல் , இந்த விமர்சனத்தின் வெளிப்பாட்டில் யதார்த்தத்தை மீறிய எதிர்பார்ப்பு ஒன்று உள்ளது. அந்த எதிர்பார்ப்புத் தான் இதைத் தட்டையான நாவல் என்று கணிக்கிறது. அந்த எதிர்பார்ப்பின் எதிரொலி இலக்கியமல்லாத வேறு தளத்தில் சில ஆண்டுகள் முன்பு ஜெய மோகனிடம் எழுந்தது. நடிகர் ரஜனி காந்த் திமுக-த மா க முன்னணிக்கு ஆதரவு தெரிவித்த போது ரஜனி ரசிகர்கள் போன்ற லும்பன்கள் இனி அதிகாரம் செலுத்துவார்கள் என்று அபாய அறிவிப்புச் செய்தார் ஜெய மோகன் . ஒரு குறிப்பிட்ட கருத்தாக்கத்தின் சார்பாக நின்று கொண்டு, வாழ்வின் போக்குகள் அதன் திசையில் கொண்ட ஆற்றொழுக்கினை அங்கீகாரம் செய்யாத பார்வை இது.

மிக மிகக் கொச்சையான ஒரு கேள்வியை எழுப்பி இந்தப் பிரசினையை இன்னும் தெளிவு படுத்தலாம் என்று நினைக்கிறேன். தமிழ் வாழ்வின் அசலான அறிமுகம் ‘புதிய தரிசனங்களி ‘ல் கிடைக்கிறதா அல்லது ‘ஜே ஜே சில குறிப்புக ‘ளில் கிடைக்கிறதா ? தமிழ் வாழ்வின் அன்றாட வாழ்வின் உயிர்ச் சித்திரம் ‘புதிய தரிசனங்களி ‘ல் கிடைக்கிறதா ? (இது வெறும் உதாரணக் கேள்வி தான் படைப்பின் தரத்தை நிறுவுவதற்கு அல்ல, வாழ்வின் அன்றாடத்துவம் எப்படி ‘புதிய தரிசனங்களி ‘ல் பதிவு கொண்டுள்ளது என்பதைச் சொல்லத் தான். எனவே இந்த வாதத்தை எடுத்து வைத்துக் கொண்டு யாரும் சிலம்பாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.)

ஆனால் ஜெய மோகன் போன்றோரின் தரிசனம், உலகப் பார்வை எல்லாம், வாழ்வின் அன்றாடத்துவத்திடமிருந்து பெறப் படாமல் , உயரத்தில் எங்கேயோ தொங்கிக் கொண்டிருக்கிறது. இது இலக்கியத்தின் பிரசினை மட்டுமல்ல இரு வேறு சமூக அணுகல்களின் பிரசினையும் கூட.

‘புதிய தரிசனங்கள் ‘ குறைபாடற்ற நாவல் அல்ல. பொன்னீலனின் ‘கரிசல் ‘ ‘புதிய தரிசனங்களை ‘ க் காட்டிலும் கூட உருவக் கட்டுக் கோப்பு உள்ள நாவல் தான். ஆனால் ‘புதிய தரிசனங்கள் ‘ அதன் வீச்சினால் முக்கியத்துவம் பெறுகிறது. பொதுவாக தமிழில் editor என்று எவரும் இல்லை. எழுத்தாளர்களும் தம்மைத் தாமே edit செய்து கொள்வதில்லை என்று தோன்றுகிறது. பிரசுரத்திற்கு முன்பு இப்படி edit செய்யப்பட வேண்டிய அவசியம் ஜெய மோகன், எஸ் ராம கிருஷ்ணன், கோணங்கி போன்ற பலருக்கும் இருக்கிறது. ஆனால், எழுத்தாளனின் சுயம்புவான எழுத்து ஏதே தெய்வீக வரம் அதில் மானுடத் தலையீடு இருக்கக் கூடாது என்பது போல் ஒரு பார்வை தமிழில் உருவாகி விட்டது. பொன்னீலனின் நாவலில் , ஆசிரியரே உபயோகிக்கும் நைந்து போன வார்த்தைத் தொடர்களும், உணர்ச்சி வெளிப்பாட்டில் மிகப் பழமைச் சித்தரிப்புகளும் நாவலைப் பலவீனமடையச் செய்கின்றன. ஒரு முறையான , சீரமைப்பை நோக்கிய மறு வாசிப்பு (editing-க்கு என் தோராயமான மொழியாக்கம்) இந்த நாவலை இன்னமும் சிறப்படையச் செய்திருக்கும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

என்னை இடது சாரி என்று சொல்லிச் செல்கிறார் ஜெய மோகன். இது ஒரு அர்த்தமில்லாத பொத்தாம் பொதுவான சொல். இன்றைய நிலையில் எல்லாவிதமான இடது சாரி இயக்கங்களும் , இடது சாரிப் பார்வையாளர்களும் பொதுவான ஒரு தளத்தில் கூட நிற்பதில்லை. சோஷலிச சமுதாயத்தில் நம்பிக்கை கொள்கிற ஒரு சிலரில் தொடங்கி, பெண் விடுதலை, அராஜகம் தோய்ந்த எதிர்ப்புத் தன்மை , பசுமைக் கட்சி என்றெல்லாம் பல திசைகளில் இடது சாரிகள் போய்க் கொண்டிருக்கும் போது , பொதுவாய் இடது சாரி என்று, ஆதாரமோ , தொடர்ந்த விளக்கமோ இல்லாமல் குறிப்பிடுவதில் பொருளில்லை.

மேலும் இடது சாரி பற்றிய ஜெய மோகனின் மனப் பதிவு ஜே ஜே சில குறிப்புகளில் வரும் முல்லைக் கல் மாதவன் நாயரின் குணச் சித்திரத்திலேயே தேங்கிப் போனது என்று நினைக்கிறேன். 1950-களில் பரவலாய்ச் சித்தரிக்கப் பட்ட இந்த மாதிரி வறட்டு சித்தாந்திகள் இடது சாரிகளைத் தாக்குவதற்காக ஏடுகளில் கேலி செய்யப் பட்டவர்கள். இந்தியாவிலும் கூட இது போன்ற இடது சாரிகள் இப்போது மிக மிகச் சொற்பமானவர்களே இருக்கிறார்கள். கட்சி சார்ந்த இடது சாரிகள் கூட இப்போது பல விதத்தில் பரவலான திறந்த செயல்பாட்டிற்குத் தயாராகி விட்டார்கள். எனவே இடது சாரி என்ற தாக்குதல் லேபிளை வீசுவது பொருளற்றது; பயனற்றது.

தமிழின் மிகச் சிறந்த நாவலாசிரியராய் நான் தி ஜானகிராமனை முன் வைப்பேன் அவருடைய சுவாரஸ்யமான கதைப் போக்கு, அவருடைய ஆழ்ந்த அக்கறைக்கும் , மறுப்பு மனப் பாங்கிற்கு ஒரு போர்வையாகிப் போவதால் அவர் சரியாய்க் கணிக்கப் படாமல் இருக்கிறார் என்பது என் கருத்து. இவர் இடது சாரி இல்லை. தமிழ் மொழியின் சாத்தியக் கூறுகளை மிகப் பிரதானமாய் முன் நகர்த்தியவர்கள் என்று லா ச ரா -வையும், சுஜாதாவையும் நான் கருதுகிறேன். இவர்கள் இடது சாரிகள் அல்ல. கிருத்திகாவோ, ஆ மாதவனோ இடது சாரிகள் என்று குறிப்பிட முடியாது. ஜெய காந்தனும் , பொன்னீலனும் தான் என் பட்டியலில் இடது சாரிகள் என்று சொல்லத் தக்கவர்கள் இவர்களும் கூட இடது சாரிகளாய் இருக்க நேர்ந்து விட்ட நாவலாசிரியர்கள் என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, தம் கருத்துகளுக்கேற்ப தம் கதா பாத்திரங்களை அச்சுப் பிடித்து உலவ விடுபவர்கள் என்று எளிமையான வாசகன் கூட இவர்களைப் பற்றிச் சொல்ல மாட்டான். பின் நான் எப்படி ஜெய மோகனின் பார்வையில் இடது சாரியானேன் ?

கருத்துகளை முற்றுமாக விலக்கி விட்டு எந்த விமர்சனமும் செய்ய முடியாது. ஜெய மோகனாலும் முடியவில்லை. அப்பட்டமாய் மனிதாபிமான விரோத இலக்கியங்கள் என்னதான் கலையழகு பெற்றிருப்பினும் , பீடத்தில் ஏற்றப் படலாகாது. க நா சு-வின் ‘பொய்த் தேவு ‘ பற்றிய என் நிராகரிப்பு கருத்துகளால் ஏற்பட்ட பார்வையே என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்தக் கூச்சமும் இல்லை. இத்தனைக்கும் க நா சு-வின் இந்த நாவல் ஒரு விதத்தில் தமிழின் முதல் நவீன நாவல் என்று சொல்ல வேண்டும். உருவச் சிறப்பு மட்டுமே என்றால் இந்த நாவலை நானும் சிறப்பென்று ஒப்புக் கொண்டிருப்பேன். ஆனால் நாவல் சொல்லும் ‘செய்தி ‘யும் எனக்கு முக்கியம் தான். அதில்லாமல், க நா சு -வின் ‘ஒரு நாள் ‘, ‘அசுர கணம் ‘ குறிப்பிடத் தக்க நாவல்களே.

தமிழவனைப் பற்றிய அவருடைய பார்வையும் கூட தவறு தான். உண்மையில் லத்தீன் அமெரிக்க எழுத்தின் உருப்படியான பாதிப்பு தமிழவனின் இரண்டு நாவல்களில் தான் உள்ளது. தமிழில் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தினால் பாதிப்புப் பெற்றோம் என்று எழுதுபவர்கள் பெரும்பாலும் அரை வேக்காட்டையே தந்திருக்கிறார்கள்.

ஆக ஜெய மோகனின் முக்கிய அக்கறை பொன்னீலன், தமிழவன் ஆகிய இருவரைச் சேர்த்ததும் ஜெய மோகனை விலக்கியதும் பற்றியது தான் என்றால் தொடர்ந்து, . சுந்தர ராமசாமி, க நா சு பற்றிய என் பார்வைகளை அவர் ஒப்புக் கொண்டாரா என்பது பற்றியும் , ஒப்புக் கொண்டார் என்றால் அந்த ஒப்புதலைப் பதிவு செய்து அவர் தன் பட்டியலைத் திருத்தியமைப்பாரா என்பது பற்றியும் தெரிந்தால் பயன் உண்டு.

Series Navigation