நாளை
தேவமைந்தன்

நல்லதே நடக்கும் என்று
நம்புவோர்க்கு எல்லாம்
நம்பிக்கை தரும் ஒரேவாய்ப்பு.
சும்மா இருக்கும் சுகம்
வந்தே தீரும் என்ற
வள்ளலாரின் எதிர்பார்ப்பு,
மெய்யாகக் கனிந்த
அன்றைய நாள்.
இன்றைய ஜெனீவா போனாலும்
இன்னொரு நாள் மீண்டும் வரும்
என்று ஈழம் மறுவாசிக்கும்
நம்பிக்கை புதுப்பித்த வாக்குறுதி.
“இந்த இரவுக்குப் பின்னாலும்
ஒருவைகறை இருக்கிறது, ஐயா!”
என்று நம்தீபம் பார்த்தசாரதி
‘நித்திலவல்லி’யில் தொடுத்த முத்து.
கவிதையில் மட்டுமே எனக்கு
அறிமுகமான கவிஞர் ஞானம்பாடி
வீசிய மெய்யுணர்வு வெளிச்சத்தில்
நெஞ்சப்பாறைமேல் கீறிய வரிகள்:
“நாளைவரும் ஞான வைகறையில் – என்
பாதைமிகத் தெளிவாகிவிடும்.”
karuppannan.pasupathy@gmail.com
நாளை
கோகுல கிருஷ்ணன்

நாளைய
விருட்சம் நோக்கிய
விதைகளின் சேகாிப்பில்
விரல்களிடையே
நழுவிக்கொண்டிருக்கின்றன
நிகழ்க் கனிகள்.