:நான்கு ஹைக்கூ கவிதைகள்:

This entry is part [part not set] of 44 in the series 20090813_Issue

கி.சார்லஸ்* * * * * * *
பசியோடு குழந்தை
பாலூட்டாத தாய்
வெறிக்கும் பார்வைகள்.
* * * * * *
தாயிருந்தும்
அனாதையாகின்றன
தாலாட்டுப்பாடல்கள்.
* * * * * * *
புதுமெத்தையில்
உறக்கமில்லை
தரையில் அம்மா.
* * * * * * * *
இருக்கும்போது பட்டினி
இறந்தபின்பு
சலவைக்கல்லில் சமாதி.
* * * * * * * *
* கி.சார்லஸ் *
காரப்பிடாகை
ckicharles@yahoo.com

Series Navigation