வாழ்க்கை நினைவுகளின் எச்சம்
வே பிச்சுமணி
நினைவு தெரிந்த நாள்
யாதென யாருக்கு தெரியும்
உடனே நினைவில் வருவது
அடம் பிடித்து
அட்டை போட வைத்திருந்த
பழுப்புதாள் கற்றையை
ஒன்றாம் வகுப்பு ஆசிரியை
எடுத்து கொண்டது
அம்மாவை பெத்த தாத்தா
இறந்த விட்ட பொழுது
ஐந்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு
தனியே பேரூந்தில் சென்றது
தனி பயிற்சிக்கு செல்லாது
மாட்டிகொண்டு
அம்மாவிடம் அடிவாங்கியதென
சின்ன சின்ன நினைவு திட்டுகள்
நினைவுகள் மங்கும் நாளில்
நினைவுகளில் நிற்கும் நினைவுகள்
பத்து பக்கம் கூட தேறாது
மற்றவர்கள் நினைவுக்கு
விட்டு செல்லபோவதென்னவோ
பெயரும் தோற்றமும் மறைவும்
ஆக்கிரமிப்பு அகற்றலிலோ
சாலை விரிவாக்கத்திலோ
அதுவும் கூட அகற்றபடலாம்
எள்ளுபெயரன் காலத்தில்
என்னை பற்றிய
எல்லாமும் போய்விடும்
வாழ்க்கை நினைவுகளின் எச்சம்
எச்சமும் சொச்சமில்லை
சொச்சமில்லை யென்றாலும்
சொர்ககம் தான் வாழ்க்கை
v.pitchumani@gmail.com