நாஞ்சிலனின் பார்வைக்கு

This entry is part [part not set] of 30 in the series 20060707_Issue

எச்.முஜீப் ரஹ்மான்


எனது கடிதம் ஒன்றுக்கு பதில் எழுதிய நாஞ்சிலனின் பலவீனம் ஈனக்குரலாக ஒலித்திருக்கிறது.வெறுனே விவாதம் என்ற பேரில் குரான்,ஹதீதுகளை மேற்கோள் காட்டுவது பெரிய விஷயமல்ல. இஸ்லாத்தின் பெயரில் அர்த்தமற்ற பரபரப்புகளுக்கு நான் முக்கியத்துவம் அளிப்பதும் இல்லை.புரிதல் சம்பந்தமான விஷயத்தை எடுத்துக்கொண்டால் சில விஷயங்கள் புரியும் சில விஷயங்கள் புரியாது இந்த முரண்பாடில் சிக்காதவர் எவருமில்லை.புரியாமல் இருக்கிற விஷயங்களை அதிக சிரத்தை எடுத்து முயற்சி செய்து படிக்கும் போது புரியும்.ஒருவருக்கு புரியவில்லை என்பதற்க்காக சொல்லும் விஷயத்தை சொல்லாமல் இருக்க வேண்டியதில்லை.குறைந்த பட்சம் ஆர்வமுடையவர் நாளை புரிந்து கொள்ளமுடியும்.வெகுஜன பத்திரிக்கைகளை படிப்பவருக்கு பெரும்பாலும் புரிவது இல்லை.தீவிரமான வாசிப்புள்ளவர்களுக்கு எதுவும் எளிதில் புரிந்து விடும்.உதாரணமாக ஒரு வகுப்பில் பயிலும் நாற்பது மாணவர்களில் பாதி விழுக்காடு மாணவர்கள் எப்படித்தான் ஒருவிஷயத்தைச் சொல்லிகொடுத்தாலும் புரிவது இல்லை.காரணம் அவர்களுக்கு அதில் ஈடுபாடு இல்லாததே ஆகும்.மற்றவர்கள் எழுதுவதெல்லாம் புரிகிறது நீங்கள் மட்டுமே தெரிந்ததை எல்லாம் கொட்டி புரியாமல் செய்கிறீர்கள் என்ற உங்கள் வாதம் அபத்தமானது.தத்துவ செறிவுள்ள விஷயங்களை விவாதிக்கும் போது தத்துவ அடிப்படையிலே சொல்லவேண்டியிருக்கிறது.எனவே தத்துவ சொல்லாடல்களை பயன்படுத்துகிறேன்.ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தமும்,தத்துவசெறிவும்,ஆழ்ந்த பார்வையையும் கொண்டு தான் எதையும் நான் அணுகுவேன்.எனது அந்த கடிதம் கூட வாசிப்புகளை பற்றி சொல்லியது. ஒற்றைவாசிப்புக்கு பதிலாக பன்முக வாசிப்பு தேவை என்பது தான் அதன் சாரமாகும்.அந்த கடிதத்தில் நான் பின்வருமாறு சொல்லியிருந்தேன்.” இறுதியாக ஒருவிஷயத்தை சரியாக வாசித்து புரிந்து கொண்டு பேசட்டும்.அது தான் நல்ல வாசகருக்கு அழகு.அப்படி நிகழாது என்பதே இக்கடிதம் சொல்லும் விஷயமும் ஆகும். பொறுத்திருந்து பார்ப்போம்.”நாஞ்சிலன் நான் சொன்ன விஷயத்தையே ஊர்ஜித படுத்தியுள்ளார்.அப்போது புரியாமை,விளங்காமை ,தெரியாமை, வாசிக்காமை,முயற்சிக்காமை போன்ற பல ஆமைகள் உருவாகும். ” புரியாததை தெரிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்” என்பது அரிஸ்டாடிலின் புகழ்மிக்க வாசகமாகும்.நாஞ்சிலன்கள் போன்றோர் புரிதல்,அறிதல்,அறிவு போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள கீழ்கண்ட நூல்களை பரிந்துரைக்கிறேன்.அதன் பின்னர் புரியாமை என்ற பேச்சு எழாது.
Friedman, Michael (1974 ) “Explanation and Scientific Understanding.” Journal of Philosophy 71
Harman, Gilbert (1965) “The Inference to the Best Explanation.” Philosophical Review, 74
Holland, John; Holyoak, Keith; Nisbett, Richard; Thagard, Paul (1986) Induction: Processes of Inference, Learning, and Discovery. Cambridge: MIT Press
Hume, David (1977) An Enquiry Concerning Human Understanding. Indianapolis: Hackett
Kitcher, Philip (1981) “Explanatory Unification.” Philosophy of Science 48
Lehrer, Keith (1990) Theory of Knowledge. Boulder: West View Press.
எச்.முஜீப் ரஹ்மான்

Series Navigation

எச்.முஜீப் ரஹ்மான்

எச்.முஜீப் ரஹ்மான்