நல்லவர்கள் = இஇந்தியர்கள்

This entry is part [part not set] of 36 in the series 20030815_Issue

மீ.வசந்த்,லாஸ் ஏஞ்சல்ஸ்.


நாங்கள் இஇந்தியர்கள்,
எங்கள் காலடித்தடங்கள்
உலக வரைபடத்தின்
விழிம்புகளிலும் பதிந்திருக்கும்!!.

உலகெலாம் சுற்றி
ஊரெல்லாம் பார்த்தாலும்,
நாகரிக விடுதிகளில்!! ?,
ஆடையின்றி நடனமாடும்
பாவப்பட்ட பெண்களிடம்,
தப்பெதுவும் செய்ததில்லை! ?.
பாரதப் பண்பாடு.

மங்கிய வெளிச்சத்தில்,
மண்டை பிழக்கும் சத்தத்தில்,
குடித்து மதியிழக்கும்
நண்பர்களின் மத்தியில்,
மெளனமாய் அமர்ந்திருப்போம்
ஒரு டின் கோக்கோடு.
உள்ளக் கட்டுப்பாடு.

ஆடு தின்று
ஆக்டோபஸ் மென்று,
சுத்த கார்னிவோர்
என்றான பின்னும்
மனம் வலிக்கும்
மாடு தொடும்போது.
கடவுள் பயம்!.

திருமணமில்லா தாம்பத்யம்
இஇங்கே சாதாரணம்!,
துனை விட்டுப் பிரிவதும்
வெகு சீக்கிரம்!,
எங்களுக்கு போதும்
வருபவளைப் பற்றிய
வெறும் கனவுகளும்…,
எதிர் பார்ப்புகளும்.
வீட்டு வளர்ப்பு.

வங்கிக் கணக்கில்
வந்து விழும் சம்பளம்,
அப்பா பட்ட கஷ்டத்தை
மெதுவாய் சொல்லும்.
கண்ணோரம் துளிநீர்
மெல்ல வந்து
எட்டிப் பார்க்கும்.
நன்றிக் கடன் + ….

எல்லோரும்
உண்டு வாழ்ந்து
கல்வி கற்க…,
எல்லாமே இஇலவசம்
என்றிங்கே இஇருக்க…,
இன்னும் ஏன்
என் நாட்டில் வறுமை ?
சமுதாய சிந்தனை.

அனாவசிய செலவுகள்
அளவு மீறும்போது…,
மனச்சாட்சி குத்தும்,
உன் நாட்டில்
எத்தனையோ எழைகளின்
வயிற்றுப்பசி தீர்க்கலாமே.
சிக்கனத்தில் இரக்கம்.

எங்கள் பாரதம்,
திட்டுவதென் பிறப்புரிமை!.
அதே நேரம்…,
அயலவன் எவனும்
இகழ்ந்து பேச
விட மாட்டோம்.
தேசப்பற்று.

உடல் நடுங்கும் குளிரிலும்,
இரத்தம் கொதிக்கும் வெயிலிலும்,
நடந்து கொண்டிருப்போம்,
எங்கள் காலடித்தடங்கள்
உலக வரைபடத்தின்
விழிம்புகளிலும் பதிந்திருக்கும்.

MSV001@MAERSKCREW.COM

Series Navigation