நண்பர்கள்

This entry is part [part not set] of 37 in the series 20090312_Issue

நடராஜா முரளிதரன் (கனடா)நண்பர்கள் வர
மறுத்தார்கள்
எதிரிகளாகப்
பிரகடனப்படுத்தப்பட்டவர்கள்
வந்து கொண்டிருந்தார்கள்

வர மறுத்தோர்
தங்கள் சுயத்தினை
அறைகூவுவதற்கான வெளியாக
அது அமையாது
என்று நினைத்தார்களோ

இலைகள் உதிர்ந்த மரங்கள்
நெடிதே உயர்ந்து நிற்கின்றன
இன்னும் இறக்காமல்
அதனூடே மொட்டையாக
வானை எட்ட முனையும்
கட்டிடக்காடுகள்

அடிவானைத் தொட்டு
அலையும் எனக்கு
புத்துயிர்ப்புத் தர
எந்த வண்ணங்களும்
குழைந்த காட்சி
எழுதப்படவில்லை அங்கு


Series Navigation

நடராஜா முரளிதரன் (கனடா)

நடராஜா முரளிதரன் (கனடா)