நட்சத்திரங்களோடு பேசாதீர்கள்…

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

இளங்கோ


*
விசும்புங்கள்
விசும்புங்கள்
உங்கள் விசும்பல் ஒலி பரப்ப
கோரிக்கையோடு
ஆண்ட்டெனாவாக
முளைக்க நேரும்
உங்கள் இரவில்
நட்சத்திரங்களோடு பேசாதீர்கள்
சிகப்பாய் மின்னுமது
உங்களுக்கானதல்ல
தாழப் பறக்க நேரிடும்
ஒரு
விமானத்துக்கான
சமிக்ஞை

*****

Series Navigation