நகைச்சுவை துணுக்குகள்

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

வைஷாலி


***

குப்பைவண்டிக்குப்பின்னால் என் மனைவி ஓடிக்கொண்டே கேட்டாள், ‘குப்பைக்கு நான் லேட்டாயிடிச்சா ? ‘

அவள் பின்னாலே ஓடிக்கொண்டே சொன்னேன். ‘இல்லை.. ஓடிப்போய் குதி உள்ளே ‘

***

ஆசிரியை: ஜார்ஜ் வாஷிங்டன் அப்பாவின் செர்ரி மரத்தை வெட்டிவிட்டு, அப்படி வெட்டியதை மறைக்காமல் தன் தந்தையாரிடம் சொன்னார். இப்போது தெரிகிறதா, ஏன் அவரது அப்பா வாஷிங்டனை தண்டிக்கவில்லை என்று ?

ஒரு மாணவன்: வாஷிங்டன் கையிலேயே அந்த கோடாலி இருந்தது காரணமாக இருக்கலாம்

***

ஆசிரியர்: குழந்தைகளே, ஒருவன் ஒரு கழுதையை அடிப்பதைப்பார்த்து அவனை தடுக்கிறேன். இந்த நல்ல குணத்தின் பெயரென்ன ?

மாணவன்: சகோதர பாசம்

***

ஆசிரியர்: சாப்பாட்டுக்கு முன்பு, பிரார்த்தனை செய்கிறாயா ?

மாணவன்: இல்லை. என் அம்மா நன்றாக சமையல் செய்வார்கள்

***

*நான் வசதியாக உட்கார்ந்திருக்கும்போது ஒரு பெண் நின்றுகொண்டிருந்தால் என்னால் பார்க்க முடியாது.

*என்ன செய்வாய் ?

*என் கண்களை மூடிக்கொள்வேன்

**

Series Navigation

தமிழில்: வைஷாலி

தமிழில்: வைஷாலி