நகரத்து மரங்களும் பொந்துப் பறவைகளும்

This entry is part [part not set] of 18 in the series 20011007_Issue

வ.ந.கிாிதரன்


இந்தக் காற்றையும்
இடியுடன் கூடிய
மழையையும்
உள்வாங்கி
உயர்ந்து
மெளனித்துக் கிடக்கும்
நகரத்து மரங்கள்.

பொந்துகளைத் தாங்கிய
மரங்கள்.
மரங்களைத் தாங்கிய
காடுகள்!

கண்டம் விட்டுக்
கண்டம்
கடந்து வந்து
காலம் தள்ளும்
புள்ளினங்களைத்
தாங்கும்
பொந்துகள்
பூத்திட்ட
நகரத்து
விருட்சங்கள்.

தவளைகளிற்குப்
பதில்
பட்சிகள்.
கிணறுகளிற்குப்
பதில்
பொந்துகள்.

பொந்து விட்டுப்
பறக்காத
பொந்துப் பட்சிகள்.
பொந்துப் பட்சிகளே!
பொந்துப் பட்சிகளே!
பொந்தை விட்டு
புறப்படுவதெப்போ ?
பறப்பதெப்போ ?

Series Navigation