1)ச் இந்தியா 2)கருகும் நினைவுகள்
தி. கோபாலகிருஷ்ணன்

ச் இந்தியா
மாக்களாட்சித் தலைவர்
மாண்டுவிட்டார்.
மகன்தான் இனி
குவாலியர்
மஹாராஜாவாம்.
மாக்களால்,
மாக்களுக்காக…
கருகும் நினைவுகள்
அன்று
இரண்டு நகரங்கள்
இன்றும்
இரண்டு
அன்று
லட்சம் மக்கள்
இன்று
ஆயிரங்கள்
தீவிரவாதிகள்
நல்லவர்கள் போலும்
அணுகுண்டு போடவில்லை
அமைதியாய்
இருந்த குளங்களில்
அவ்வப்போது
கல்லெறிந்துகொண்டிருந்தவன்
தலையில் விழுந்ததொரு கல்.tm