நகரத்துப் புறாக்களுக்கு மத்தியில் நான்

This entry is part [part not set] of 26 in the series 20010910_Issue

வ.ந.கிாிதரன்


காலதாினூடு புறாக்களிரண்டு
முன்மாடத்திலிருந்து
இந்த இரவு நேரத்திலும்
குலாவும் சிணுங்கல்…மெல்லிய
இரவின் அமைதியைக் கிழித்துக்
கொண்டு வரும்.
ஞாபகம் வருகிறது…………….
போன வருடமும் இதே சமயம்
இதே இரவில் இவற்றின்
குஞ்சுகளின் கீச்சுக் குரல்கள்.
ஒருவேளை அந்தக் குஞ்சுகள் தானோ
இவை.இருக்காது.
பத்துவருடங்களாக
தொடரும் பழக்கமல்லவா ?
எப்படி மறந்து போகும் ?
உறவிழந்து,ஊாிழந்து,
உறைபனிக்குள் ஒதுங்கிய
உறவிற்குதுணையாக
இவ்வனத்தில் இப்படியும் சில
பட்சிகளும்
இல்லையென்றால்
இங்கிருப்பிற்குமோரர்த்தமுண்டோ ?
அலைந்து திாிந்துவிட்டு
அந்திக் கருக்கலில் இவை
வந்துவிடும் என்னைப் போல்
எனக்குத் துணையாக.
அவற்றின் சிணுங்கல்கள், அசைவுகள்
எனக்கு ஆறுதலைத் தருகின்றதைப்
போல் அவற்றிற்கும்
எனது இருப்பு ஒருவேளை
ஆறுதலைத் தருமோ ?
சில வேளைகளில்
நகரத்து இரவு வானத்திலும் இவை
பறந்து விட்டு வருவதைப்
பார்த்தால்..
புறாக்கள் எவ்விதம்
வெளவால்களாக மாறினவோயென்றிருக்கும் ?
மா(ற்)றிய சூழலை இவை எதிர்கொள்ளும் விதம்
ஆச்சர்யத்தைத் தரும். உயிாினமெப்படியும்
தப்பிப்பிழைத்துவிடும் என்பதற்கு இவையே
சாட்சி என்னைப் போல்.

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்