பசுபதியின் கவிதை படித்து…
அலமேலு மணி. கானடா.

மறைகள் தவழ்ந்திடும் மாசென்னை தாயாகும்
பாறையாய் பனிஉறையும் கானடா தந்தையென
உரைத்திட்டார் பசுபதியும் அறைந்தது ஓருண்மை
உறவுகள் விலக்கித்தான் வாழ்கிறோம்நாமென்று.
உழைத்துக்களைத்தத் தாயைத் தவிக்கவிட்டு
செழித்துக் கொழிக்கும் தந்தையின் நிழல் வந்தோம்
ரத்தான விவாகத்தில் கூறாகும் பிள்ளைகள்போல்
வத்தாத சுயநலத்தின் பிரம்மாண்ட பிம்பம் நாம்.
அலமேலு மணி. கானடா.