தொழில் தெய்வம்..

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

தேனம்மைலெக்ஷ்மணன்


*******************************

வியாபார யுத்தத்தில்
வாள் வீசும்
போர்வீரா..

வெற்றிபெறும் ஆவேசத்தில்
வீறு கொண்டு
வார்த்தை வீசி
உன்னையே துண்டாக்கி..

நாணயம் காக்காமல்
நூல்கண்டுச் சிக்கலுக்குள்
கழுத்து இறுகிக் கிடக்கிறாய்..

அதிகப் பற்று வைத்ததனால்
அதிகப் பத்தாகி

அடகுக் கடையே
அனுபவ பாத்யதையாய்

வங்கி இருப்பும்
தங்க இருப்பும்
மங்கிய இருப்பாகி

கடன் முளைத்து மரமாகி
உனை நீராய் உறிஞ்சுவதற்குள்

விட்டுவிட்டு வெளியேறு..
வேறு களம் புகுந்துவிடு..

இட்ட கடன் முடித்திடுக..
திட்டமிட்டு தொழில் செய்க,..

தொழில் விட்டு தொழில் மாறல்
தோல்வியல்ல தோற்று(ம்)வழி..

தொழில் தெய்வம் என்றுணர்ந்தால்
தோன்றும் எங்கும் வெற்றியதே

— தேனம்மைலெக்ஷ்மணன்

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்