தேனீ – சாதீய கட்டமைப்பு

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

Dr.இரா.சீனிவாசன்,Ph.D, தைவான்


தேனீக்கள்!

கேட்ட உடனே சிலருக்கு ‘இனிப்பது ‘ போல் இருக்கும். வெகு பலருக்கோ எங்கோ ‘கொட்டுவது ‘ போல் இருக்கும். ஆம்! நம்மில் நிறைய பேர் தேனீயிடம் கொட்டு வாங்கி இருப்போம். எனவே அது அவரவர் அனுபவத்தைப் பொறுத்தது. என்ன இருந்தாலும், இந்த பூச்சிகளின் வாழ்க்கைமுறை வெகு சுவையானது மட்டுமல்ல – சுவாரசியமானதும் கூட.

தேனீ ஒரு சமுதாய பூச்சி (Social insect) ஆகும். ஏன் அப்படி அழைக்கிறோம் எனில், அவை ஒரு முறையான கட்டமைப்பைக்

கொண்டிருக்கின்றன. ஒரு தேனீக்கூட்டத்தில் இராணித்தேனீ, ஆண்தேனீ மற்றும் பணித்தேனீ என மூன்று வகை இருக்கும்.

எந்தவொரு கூட்டிலும் இராணித்தேனீ ஒன்று மட்டுமே இருக்கும். ஒன்றுக்கு மேல் இருக்கும்பட்சத்தில் அது தனக்கென ஒரு கூட்டத்தைப் பிரித்துக் கொண்டு போய்விடும். (ச்சே! இந்த மனிதர்களைவிட மோசமாக இருக்கிறதே ?). எனவே, எந்தவொரு இராணித்தேனீயும் தன் கூட்டத்தில் இன்னொரு இராணித்தேனீ வளர்ந்து விடாமல் பார்த்ிதுக்கொள்ளும். அப்படியே வளர்ந்து விட்டாலும், அவை வெளியில் வரும்முன்பே கொன்று விிடும். மேலும், அனைத்து தேனீக்களும் இராணியின் உத்தரவிற்குக் கட்டுப்பட்டே நடக்க வேண்டும்.

அடுத்து வருவது இந்த ஆண்தேனீக்கள். எந்தவொரு தேனீக்கூட்டத்திலும், இவற்றின் எண்ணிக்கை ஒரு சில நூறுகளே இருக்கும். ஆண்தேனீக்களின் வாழ்க்கை ரொம்பவும் ஜாலியானது. சாப்பிட்டுவிட்ிடு ‘ ?ாயாக ‘ ஒரு பாட்டு வேறு பாடிக் கொண்டு தேன்கூட்டினுள் வளைய வருவதுதான் வேலையே! எப்போதாவது இராணிக்கு ‘அந்த மூடு ‘ வருமானால், இராணியுடன் கலவி செய்வதுதான் ஆண்தேனீக்களின் உருப்படியான வேலை. ஆனால் அந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்குமா என்றால், அதுதான் இல்லை. ஒரே ஒருவருக்குதான் அந்த வாய்ப்பு அமையும். அப்படியானால் யார் அந்த அதிர்ஷ்டசாலி ? எப்படி அவரைத் தேர்ந்தெடுப்பது ? இதற்கென்றே இராணித்தேனீ ஒரு பிரத்யேக ‘டெஸ்ட் ‘ வைத்திருக்கின்றது. அதில் யார் ‘பாஸ் ‘ ஆகிறாரோ, அவரே கலவிக்கு அனுமதிக்கப்படுவார்.

அது சரி, என்ன ‘டெஸ்ட் ‘ அது ?

அதாவது இராணித்தேனீ கூட்டைவிட்ிடு வெளியில் வந்து வானவெளியை நோக்கி உயரே உயரே பறக்க ஆரம்பித்துவிடும். இதற்கு Nuptial flight என்று பெயர். உடனே இந்த ஆண்தேனீக்களும் இராணியைத் தொடர்ந்து பறக்க ஆரம்பித்துவிடும். ஆனால் எல்லா ஆண்தேனீக்களாலும் இராணியைப் பின்தொடர இயல்வதில்லை. (நன்றாக சாப்பிடவில்லை போலும்!) இறுதியில் ஒரே ஒரு ஆண்தேனீ மட்டும் வெற்றிகரமாகப் பின்தொடரும். ( ‘ஜிம் ‘ பாடியோ என்னவோ ?) அந்த ஆண்தேனீயுடன்தான் இராணி கலவி செய்யும். இதிலுள்ள சூட்சுமம் என்னவென்றால், வலிவான ஆண்தேனீயைத் தேர்ந்தெடுத்து கலவி செய்வதால், அடுத்து வரும் சந்ததிகள் முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் என்பதாகும். ஆனால் இதற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய சோகம் இருக்கிறது. இராணியுடன் கலவி செய்யும் ஆண்தேனீ கலவி முடிந்ததும் இறந்துவிடும். ஏனெனில், கலவி முடியும் தருவாயில் ஆண்தேனீயின் இன உறுப்பு அறுந்துவிடும். எனவே, உடலிலுள்ள நீர் முழுதும் வெளியேறி இறந்துவிடும். மேலும், தேவை இல்லை என கருதப்பட்டால், இந்த ‘வெட்டி ஆபிசர்கள் ‘ (ஆண்தேனீக்கள்) விரட்டி அடிக்கப்படுவர். குறிப்பாக, குளிர்காலத்தில், உணவுப்பற்றாக்குறை ஏற்படும்போது, சும்மா சும்மா தின்று தீர்த்துவிடுவார்கள் என விரட்டி அடிக்கப்படுவார்கள்ி. (ஐயோ பாவம்!)

ஆண்தேனீ இராணித்தேனீ பணித்தேனீ

அடுத்து வருவது இந்த பணித்தேனீக்கள். இவைகளும் இராணியைப் போல பெண்தேனீக்களே! ஆனால் இவை மலட்டுத்தன்மை வாய்ந்தவை. எனவே, ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே ‘ என்று இராணி, ஆண் மற்றும் இளம் தேனீக்களுக்குச் சேவை செய்தே தங்கள் வாழ்க்கையை ஓட்டும். எந்தவொரு தேனீக்கூட்டத்திலும், இவற்றின் எண்ணிக்கையே அதிகம். சுமார் 50,000 முதல் 60,000 வரை இருக்கும். இவற்றின் வாழ்நாள் 28 முதல் 35 நாட்கள் ஆகும். பிறந்த சில நாட்கள் இந்த பணித்தேனீக்கள் கூட்டிலுள்ள வேலைகளைச் செய்யும். உதாரணமாக, இளம் தேனீ, ஆண் மற்றும் இராணி தேனீக்களுக்கு உணவு கொடுக்கும் ‘செவிலி ‘ தேனீயாகக் கொஞ்ச காலம் பணியாற்றும். பிறகு கொஞ்சம் ‘புரமோஷன் ‘ வாங்கி கட்டிடப் பொறியாளராகிவிடும். புதிய அடைகளைக் கட்டுதல், பழுதடைந்த கூட்டினைச் சரிசெய்தல் என பிசியாகிவிடும். பிறகு ‘இராணுவ வீரனாக ‘க் கொஞ்சநாள் அவதாரம் எடுக்கும். அதன்பிறகு வயல்வெளிக்குச் சென்ிறு மகரந்தம் மற்றும் பூந்தேன் கொண்டுவந்து தேனாக மாற்றும்.

அது சரி, மகரந்தம் மற்றும் பூந்தேன் இருக்கும் இடத்தைக் கண்டுபிிடித்தவுடன் சக பணித்தேனீக்ிகு எப்படி தெரிவிக்கும் ? அதற்கென்றே ஒருசில நடனங்களை கொண்டுிள்ளது. இதைக் கண்டுபிிடித்ததற்காகவே ஒருவர் நோபல்பரிிசு வாங்கினார்.

அது அடுத்த வாரம்!!

Series Navigation