தேனீ – கட்டுப்பாடும் கலகமும்

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

Dr.இரா.சீனிவாசன்,Ph.D, தைவான்


மகரந்தம் மற்றும் பூந்தேனை எடுத்துக்கொண்டு அடைக்குத் திரும்பிவரும் பணித்தேனீக்களை, பாதுகாப்பு பணியில் உள்ள பணித்தேனீக்கள் சோதனை செய்யும். அதாவது ஒவ்வொரு குறிப்பிட்ட தேன் அடைக்கும், அதில் உள்ள தேனீக்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வாசனை உண்டு. எந்தவொரு தேனீ, அடைக்குள் புக முற்பட்டாலும், பாதுகாப்பு பணியில் உள்ள பணித்தேனீக்கள் உடனே அவற்றை சோதனை செய்யும். அப்போது குறிப்பிட்ட அந்த வாசனை அந்த தேனீயின் மீது இருந்தால் மட்டுமே அதை

உள்ளே அனுமதிக்கும். இல்லையேல் அதை விரட்டிவிடும்.

நான் முன்பே குறிப்பிட்டது போல், எந்தவொரு கூட்டிலும் இராணித்தேனீ ஒன்று மட்டுமே இருக்கும். இராணித்தேனீயும், பணித்தேனீக்களும் பெண் தேனீக்கள் ஆகும்ி. இருப்பினும் இராணித்தேனீ மட்டுமே கலவிக்குத் தகுதியானது. ஏனெனில், பணித்தேனீக்கள் மலட்டுத் தன்மை கொண்டவை. ஆனால் அவை பிறப்பால் மலடு அல்ல. வளர்ப்பால்தான் மலடு ஆகின்றன.

எப்படி தெரியுமா ? சற்று விரிவாகவே பார்ப்போம்.

ஒரு தேன் அடையில் கீழே, அடிமட்டத்தில் உள்ள அறைகள் அனைத்து அறைகளையும் விட பெரிதாக இருக்கும். அவைதான் இராணித்தேனீக்களுக்கான முட்டை வைக்கும் அறைகள். இவை எண்ணிக்கையில் குறைந்தே காணப்படும். அவற்றுக்கு மேலே இருப்பவை நடுத்தர அளவிலான அறைகள். அவை ஆண்தேனீக்களுக்கான முட்டை வைக்கும் அறைகள். இவை எண்ணிக்கையில் மிதமாக காணப்படும். அவற்றுக்கு மேலே இருப்பவை மிகச்சிறிய அளவிலான அறைகள். அவை பணித்தேனீக்களுக்கான முட்டை வைக்கும் அறைகள். அவைதான் எண்ணிக்கையில் அதிக அளவில் இருக்கும். கலவியை முடித்தபின் இராணித்தேனீ அந்தந்த அறைகளில் முட்டை வைக்கும். கலவியின்போது சுமார் 8 மில்லியன் விந்தணுக்கள் இராணிக்குள் அனுப்பப்படுகின்றன. இராணி மற்றும் பணித்தேனீக்களுக்கான முட்டை வைக்கும் அறைகளில் முட்டை வைக்கும்போது மட்டுமே இந்த விந்தணுக்களைப் பயன்படுத்தும். இங்கு மட்டுமே விந்தணுக்களும் சினைமுட்டைகளும் சங்கமம் ஆகும்ி. அதாவது, பெண் தேனீக்களின் பிறப்பில் மட்டுமே விந்தணுக்களும் சினைமுட்டைகளும் சங்கமம் ஆகும்ி. மற்றபடி, ஆண்தேனீ பிறப்பளிதல்லாம் வெறும், கருவுறாத, தாயின் சினைமுட்டையில் இருந்து மட்டுமே!!! எனவே ஆண்தேனீக்கு தந்தை கிடையாது; தாய்வழி பாட்டனார் மட்டுமே உண்டு.

சுமார் 3 நாட்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். ஆண் மற்றும் பணித்தேனீயின் புழுக்களுக்கு, முதல் 3 நாட்கள் Royal Jelly எனப்படும் அரச உணவு கிடைக்கும். பிறகு, மகரந்தமும்ி தேனும் கலந்த தேன் ரொட்டி (Bee Bread) மட்டுமே கிடைக்கும். ஆனால் இராணித்தேனீ புழுக்களுக்கு எல்லா நாட்களுக்குமே, அரச உணவுதான். பிறகு எல்லாப் புழுக்களும் அதனதன் அறையில் கூட்டுப்புழுவாகிவிடும். குறிப்பிட்ட காலக்கெடுவின் முடிவில், முழு இராணித்தேனீ வெளுயில் வரும். அவ்வாறு வந்தவுடன், அந்த இராணித்தேனீ, சக இராணித்தேனீ அறைக்குமுன் சென்று ஒருவித ஒலி எழுப்பும். அதன் சதியை அறியாத, இன்னும் கூட்டுப்புழுவில் இருந்து வெளுயில் வராத இராணித்தேனீக்கள் பதில் ஒலி எழுப்பும். உடனே இந்த இராணித்தேனீ அவற்றையெல்லாம் தாக்கிக் கொன்று விடும். தப்பி தவறி, ஒரு இராணித்தேனீ வந்து விட்டால் கூட, அது தனக்கென ஒரு கூட்டத்தைப் பிரித்துக் கொண்டு போய்விடும். எனவே, எந்தவொரு இராணித்தேனீயும் இந்த விசயத்தில் மிகக்கவனமாக இருக்கும்.

அது சரி, சக இராணித்தேனீக்களை சமாளித்தாயிற்று. இந்த பணித்தேனீக்களும் பெண் தேனீக்கள் ஆயிற்றே! அவற்றை எப்படி சமாளிப்பது ?

இதற்கென்றே இராணித்தேனீ, தன் உடலிலிருந்து Queen substance எனப்படும் ஒருவித பிரத்யேக சுரப்பினைச் சுரக்கும். இந்த சுரப்பினை எல்லா பணித்தேனீக்களும் கட்டாயமாக குடிக்க வேண்டும். அவ்வாறு குடிக்ிகும்பட்சத்தில் அவை மலடு ஆகிவிடும். அதுமட்டுமல்ல…. கட்டளைக்குக் கீழ்ப்படியும் குணமும் வந்துவிடும். ஒருவேளை, எதிர்பாராதவிதமாக இராணித்தேனீ இறந்துவிட்டால், என்ன செய்வது ?

உடனடியாக எல்லா பணித்தேனீக்களும் ஒன்றுகூடி, பணித்தேனீக்களுள் ஒன்றை தற்காலிக இராணியாக தேர்வு செய்யும். மேலும், உடனடியாக இராணித்தேனீ அறைகளில் உள்ள முட்டைகளை, நிரந்தர இராணியாக மாற்றும் பணிகளையும் தொடங்கிவிடும். இராணித்தேனீக்கு முதுமை வரும்போது, Queen substance சுரப்பின் அளவும் குறைந்துவிடும். இந்த Signal கிடைத்தவுடன், இராணித்தேனீக்கு முதுமை வந்துவிட்டது என பணித்தேனீக்கள் தொுந்துகொள்ளும். அப்போதும் இராணித்தேனீ அறைகளில் உள்ள முட்டைகளை, புதிய இராணியாக மாற்றும் பணிகளை தொடங்கும். அப்போதும், முதலில் வெளுயில் வரும் இராணித்தேனீ, சக இராணித்தேனீ கூட்டுப்புழுக்களையும், வயதான தாய் இராணித்தேனீயையும் கொன்று விடும். அது சரி, ஆடாத அருங்கூத்து ஆடினாலும் காீுயத்தில் கண்ணாக இருக்க வேண்டுமல்லவா ?

எவ்வளவுதான் கட்டுப்பாடுகள் இருந்தாலும், ஒரு கட்டத்தில் கலகம் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. ஏதோ கவனக்குறைவால் இன்னொரு இராணி வந்துவிட்டால் அல்லது அடைக்குள் தேனீக்களின் கூட்டம் அதிகரித்துவிட்டால், புதிய இராணியுடன் சேர்ந்துகொண்டு ஒரு பகுதி ஆண் மற்றும் பணித்தேனீக்கள் கலகம் செய்ய தொடங்கிவிடும். அடைக்கு முன்னால் நின்ிறு கொண்டு பயங்கர சத்தம் செய்யும். 10-15 நிமிடங்களில் இந்தக்

கூட்டம் தற்காலிகமாக ஒரு இடத்தைத் தேர்வு செய்து தங்கும். பிறகு இந்தக் கூட்டத்திலிருந்து ஒரு சில நிபுணர்கள் நல்ல பாதுகாப்பான இடத்தைத் தொுவு செய்வார்கள். பிறகு மொத்தக் கூட்டமும் அந்த இடத்திற்கு இடம்பெயர்ந்து தங்கும்.

அந்த புதிய இடத்தில், ஆயிரம் தச்சர்கூடி அமைப்பார்கள் புதிய கூட்டை! அதைப் பற்றியும், அந்த கூட்டிற்கு ஒரு ஆபத்து எனும்போது தற்காத்து, தற்கொலை செய்து கொள்ளும் பணித்தேனீக்களைப் பற்றியும்…. அடுத்த வாரம்!!

—-

amrasca@yahoo.com

Series Navigation

இரா. சீனிவாசன்

இரா. சீனிவாசன்