This entry is in the series 20110508_Issue

இரவி ஸ்ரீகுமார்


புகழ் தேடும் உள்ளங்கள்
புகழைத் தேடும்!
பணம் தேடும் உள்ளங்கள்
பணத்தைத் தேடும்!
அன்பு தேடும் உள்ளங்கள்
அன்பைக் காணும்!
அறிவுத் தேடும் உள்ளங்கள்
அறிவை ஈர்க்கும்! ஆக,
தேடாத உள்ளங்கள் உலகில் இல்லை!
மூடாது இரகசியங்கள் எங்கும் இல்லை!
மனம் தோண்டிப் பார்த்திட்டால்
எல்லாம் தெளியும்!
தெளிந்த உள்ளத்தில் தேடலில்லை!
மனம்,
தேடா(த) நிலை வந்தால் ..
தெய்வம் அங்கே!
—–

Series Navigation