துணையை தேடி

This entry is part [part not set] of 22 in the series 20020707_Issue

மு.புகழேந்தி


நேசிக்கப்படுபவர்களே
நேசிப்பார்கள்

குருதியும் சதையும் சேர்ந்த
சதைப்பிண்டம் அல்ல மாந்தர்கள்
உணர்வுகளாலும் உணர்ச்சிகளாலும்மான
உயிர்ப்பிண்டமே மாந்தர்கள்
எல்லோரும் மனிதர்களே
நேசிக்கப்பட பிறந்தவர்கள்

யாவரும் கேளிர்
என்றான் கணியன்

ஆனால்
ஓர் துணையெடுக்க
ஆயிரம் கேள்விகள்
ஆயிரம் முற்றுக்கட்டைகள்

உயரம், அகலம், நீளம்
சாதி, மதம், சாதகம்
மொழி, இனம், குலம்
கிளை, வயது, பணம்
பதவி, பட்டம், அழகு……………….

அறிவே
எது பொருந்தி
என்ன பயன்
நேசிக்கும் எண்ணம் இலாவெனில்

நேசிப்பவர்களே
நேசிக்கப்படுவார்கள்
என்பதுவும் நியதியே

***
pugazhendi@hotmail.com

Series Navigation

மு.புகழேந்தி

மு.புகழேந்தி