திருகுர் ஆன் மொழிபெயர்ப்பும்,புரிதலும்

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

எச்.முஜீப் ரஹ்மான்



பொதுவாக வரிக்குவரி செய்யப்படும் மொழிப்பெயர்ப்புக்கும் சாரம்சத்துடன் மொழியாக்கம் செய்யப்படுவதற்கும் பல வித்தியாசíகள் உண்டு.ஆனால் இரண்டு விதமான மொழிபெயர்ப்பும் சரியான மொழியாக்கத்தை தருமா என்பது சந்தேகமே.ஒரு பிரதியை உருவாக்கியவரே பிரதியின் மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்யும் போது கூட சரியான மொழியாக்கம் நிகழ்வதில்லை.மேலும் இருமொழி புலமை கொண்டவர் பேசவும்,எழுதவும் தெரிந்தவர் மொழிபெயர்க்கும் போது ஒரளவுக்கு மொழிமாற்றம் செய்யப்படும்.ஆனால் முழுமையானதன்று.பேச்சு வழக்கு மொழியறிவை பெறாமல் வெறுமனே மொழியறிவு பெற்று ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்க்கும் போது அநேக தவறுகள் நிகழ்கின்றன.அல்லது இரு மொழியில் புலமையுள்ளவர்களிடம் சரிபார்க்கப்பட்டு அல்லது பேசும் மொழியறிவு பெற்றவரிடம் சரிபார்க்கப்பட்டு மொழிமாற்றம் செய்யப்பட்ட பிரதி ஒரளவுக்கு தவறுகள் இல்லாமல் இருக்கும்.இருந்த போதிலும் எழுபது சதமான மொழிபெயர்ப்புக்கு சாத்தியமே இல்லை.ஏனெனில் மொழி என்பது வெறுமனே தகவல் பரிவர்த்தனைக்கான கருவியல்ல.அது மொழி பெசுபவரின் சமூகம்,பண்பாடு,வரலாறு,உளவியல்,இலக்கியம் போன்ற பல்வேறு விஷயíகளின் சாராம்சத்தை தகவமைத்து கொண்டிருக்கிறது.எனவே தான் மொழியியல் என்ற துறை மொழியை ஆய்வு செய்யும் துறையாகவும்,சமூகத்தை வாசிக்கும் வாசிப்பாகவும் அமைந்திருக்கிறது.இரு மொழியையும் அறிந்து மொழியியலறிவையும் அறிந்தவர்கள் மொழியாக்கம் செய்யும் போது தவறுகள் குறைகின்றன.மேலும் மொழியில் வழக்கு சொற்களும்,திசைச் சொற்களும்,பழ்மொழிகளும்,பண்பாடு சார்ந்த உருவக,உருவ,குறியியல் மொழிகளும் என பல்வேறு மொழி அமைப்புகள் பல பொதிந்து கிடக்கின்றன.இவை எல்லாம் அறிந்து கொண்டு மொழி பெயர்ப்பது அவ்வளவு எளிதானதன்று.ஆனால் இவை எல்லாம் ஒரளவுக்காவது தெரியாமல் மொழிபெயர்த்தால் பிழைகள் தான் உருவாகும்.

மொழியில் பேச்சும்,இசையும் பல்வேறு செயல்பாடுகளில் இணைந்தே இருக்கிறது.சமூக அமைப்பில் தெளிவான பேச்சு முறை இருந்த போதிலும் வரலாற்றின் வளர்ச்சியோடு இயைந்த திசைமொழியும்,வட்டரா வழக்குகளும் காணப்படுகிறது.ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு இலக்கண அமைப்பு உண்டு.ஆனால் அனைத்து மொழிகளும் பொதுவான சில அமைப்பு கோட்பாடுகளை கொண்டிருக்கின்றன.இத்தகைய கோட்பாடுகள் தருக்கவியல் கோட்பாடுகளோடு தொடர்பு கொண்டதாக இலக்கண ரீதியில் அமைந்த வாக்கியத்தின் பெருக்கமும் சுருக்கமும் தருக்கவியல் பரப்பின் பெருக்கத்தோடும்,சுருக்கத்தோடும் இணைந்தவையாகும்.மொழி சமூகத்தோடு நெருíகிய தொடர்புடையதாகும்.எனவே மொழியியல் மொழியை சமூகத்தின் விளைபொருளாக [product of society] கருதுகிறது.மேலும் மொழி வரலாற்றின் விளை பொருள் [product of history] என்றும் மனித மனத்தின் விளைபொருள் [product of human mind] என்றும் கூறப்படுகிறது.மொழியும் சமூகமும் நெருíகி பின்னிப் பிணைந்தவை.தொல்குடி மக்களின் பண்பாட்டை மானுடவியல் படி ஆய்வது போல பண்பாட்டு கூறுகள் அதிகம் நிறைந்த மொழியை ஆய்வதும் முக்கியமாக இருக்கிறது.வரலாற்றின் விளைபொருள்களான புனித நூற்கள் குறித்து அதிகம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மேலும் வரலாற்று விளைப்பொருளான புனித நூலை இலக்கிய பிரதியாக அணுகப்படாததின் குறையும் இருக்கிறது.இந்த நிலையில் திருக்குர் ஆன் என்ற புனித நூலின் இலக்கிய தன்மையை சாதாரணமாக கருதிவிட முடியாது.திரு குர் ஆன் போன்ற பன்முக ஆளுமை நிறைந்த நூலை மொழிக்கலை நூலாகவே கருத முடிகிறது.எனவே மொழியியல் நோக்கில் திரு குர் ஆன் இலக்கிய நூலாகவும் இருக்கிறது என்பதை சுட்டிகாட்டியாக வேண்டியிருக்கிறது.மொழியே இலக்கியத்தின் ஊடகம் என்ற வகையில் இலக்கியம் மொழியியலின் ஆய்வு பரப்புக்குள் அடíகிவிடுகிறது.

ஒருவர் பேசும் குறிப்பிட்ட மொழி மரபணுபாரம்பரியத்தால் மட்டுமல்ல அம்மனிதர் வாழும் சமூக சூழலின் பண்பாட்டு பாரம்பரியத்தாலும் கிடைக்கிறது.இதனால் மொழி தானே பெறப்படுவதில்லை.கற்கப்படுகிறது என்லாம்.ஆகவே மானுடவியலாளர்[anthropologists] மொழியையும் பண்பாட்டு காரணமாக வரும் நடத்தையோடு இணைக்கின்றனர்.மொழியில் கருத்து பரிமாற்றம் முக்கிய இடம் பெறுவதால் ஒருவர் பேச மற்றவர் புரிந்து கொள்ளுவதாகிய மொழிதல் மூன்று படிகளுடன் திகழ்கிறது.அவை
1] குறி ஆக்கம் [encoding]
2] பரப்புதல் [transmission]
3] குறி அவிழ்ப்பு [decoding]
எனலாம்.இதை சற்று விளக்கமாக சொன்னால்
1] பொருட்குறி ஆக்கம்[semantic encoding]
2] இலக்கண குறியாக்கம் [grammatical encoding]
3] ஒலிக்குறியாக்கம் [phonological encoding]
4] அனுப்புதல்
5] பரப்புதல்
6] ஏற்றல்
7] ஒலிக்குறி அவிழ்ப்பு
8] இலக்கண குறியவிழ்ப்பு
9] பொருட்குறி அவிழ்ப்பு
என வகைப்படுத்தலாம்.

மொழியியல் பன்முக ஆய்வுகள் நிரம்பிய மாபெரும் துறையாகும்.மொழியின் ஒலிப்பு,ஒலியின் குறிகள் ஆகியவற்றை ஒலியனியலாக [phonology/phonemics] என்ற வகையிலும் பேச்சுறுப்புகளின் செயல்பாடு[articulartory/phonetics] என்ற வகையிலும் கேட்பவர் தன் காதில் இவ்வொலிகள் பதிவாகுதல் [auditory phonetics] குறித்தும் பேசும் போது காற்றில் ஏற்படும் ஒலியலைகள் [acoustic phonetics] என்ற வகையிலும் ஆய்வு பரப்புகள் நிறைய இருக்கின்றன.இத்துடன் பொருண்மை குறி பற்றிய ஆய்வாக சொற்பொருளியல்[semantics] இருக்கிறது.நில மொழியியல் அல்லது மொழி புவியியல் [linguistic geography]இடவேறுபாடு காரணமாக மொழியில் அமையும் மாற்றíகளை ஆய்வு செய்கிறது.மரபு நிலையில் சமுதாய மொழியியலில் தான் சமூக மொழியியல்[socio linguistics] உட்படுத்தப்பட்டிருக்கிறது.வெவ்வேறு சமூக அடுக்கின் மொழிப்பயன்பாடு,வேறுபாடு,மொழிமாற்றம்,உறவு ஆகியவை முக்கியமானவை.மேலும் ஒத்தகால/ஒரே கால மொழியியல்[synchronic linguistics] மற்றும் காலíகளுக்கிடையேயான மொழியியல்[diachronic linguistics] ஆகியவை உள்ளன.இவைகள் மூலம் காலம்,சூழல்,இடம் ஆகியவை மொழியை பாதிக்கும் காரணíகளாக இருப்பது தெளிவாக்கப்பட்டிருக்கிறது.மேலும் வரலாற்று மொழியியல் [historic linguistics] வரலாற்றில் பல்வேறு இனக்குழுக்களிடம் ஒரே மொழி பலவிதமான மாற்றíகளை கொண்டிருப்பதை விளக்குகிறது.அது போல ஒப்பு மொழியியல் [comparative liguistics] ஒரு மொழிக்கும் இன்னொரு மொழிக்குமான பொதுவான இணக்கíகளையிம் விலகல்களையும் சுட்டிக்காட்டுகிறது.மேலும் ஒரு மொழியில் வேறோரு மொழி ஏற்படுத்தும் பாதிப்புகளையும் சுட்டுகிறது.மேலும் மானுட மொழியியல்[anthropological linguistics] மனிதன் மொழியை பயன்படுத்த கற்றுக்கொண்டது பற்றி விவரிக்கிறது.உளமொழியியல் மொழி ஏற்படுத்தும் உள ஒருமையையும்,வேறுபடுதலையும்,பொதுபுத்தி கட்டமைப்புக்கு மொழி செய்யும் பாதிப்பகளையும் விவரிக்கிறது.கணித மொழியியல் மொழியில் கணித அடிப்படையில் இலக்கண வாக்கிய மொழியமைப்பு எப்படி அமைகிறது என்றும் கணித அடிப்படையில் செயற்க்கையான கம்பியூட்டர் மொழியை உருவாக்குவதையும் காட்டுகிறது.இந்த மொழியியலின் வகைபாடுகள் மூலம் திருகுரான் வசனíகளை ஆயும் போது அதன் புரிதலும்,மொழிமாற்றத்துக்கான வாசல்களும் பன்முக பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.

மொழியியல் வகைகள்
திருக்குரான் அத்தியாயíகள்
உதாரணíகள்
நில மொழியியல் تﺎﻳراﺬﻟا
புழுதியைக் கிளப்பும் காற்றுகள்
சமூக மொழியியல் ﺶﻳﺮﻗ
குறைஷிகள்
ஒத்தகால/ஒரேகால மொழியியல் باﺮﺣﻻا
சதிகார அணியினர்
காலíகளுடேயான மொழியியல் ﻟا ﺺ
வரலாறுகள்
வரலாற்று மொழியியல் موﺮﻟا
ரோமானிய பேரரசு
ஒப்பு மொழியியல் ﻦﻣﺆﻤﻟا
ஈமான் கொண்டவர்
விளக்க மொழியியல் ﺔﻋرﺎﻘﻟا
திடுக்கிடச்செய்யும் நிகழ்ச்சி
மானுட மொழியியல் ﻞﻳءﺁﺮﺳا ﻰﻨﺑ
இஸ்ராயீலின் சந்ததிகள்
அமைப்பு மொழியியல் جرﺎﻌﻤﻟا
உயர்வழிகள்
கணித மொழியியல் ﻦﻴﻔّﻔّﻄﻤﻟا
அளவு,நிறுவையில் மோசம் செய்தல்
உள மொழியியல் ﺲﺒﻋ
கடுகடுத்தார்

உதாரணமாக ஒத்தகால அல்லது ஒரேகால மொழியியல் தன்மையை விளக்கும் வகையில் அமைந்த சூரத்துர் ரூம் ஆரம்பவசனíகளை பார்க்கிற போது மொழிப்பெயர்ப்பு ஆíகிலத்திலும் தமிழிலும் காலமாற்றத்தை கவனத்தில் கொள்ளாததினால் துண்டாடப்பட்ட விவரணைகளாக மாறி போவதை காண்கிறோம்.ஒவ்வொரு மொழிக்கும் அதன் அடிப்படையில் அமையும் இலக்கணத்தின் பேரில் காலமாற்றíகள் குறித்த அளவுகோலின் படி மொழிமாற்றம் நிகழுமேயானால் தவறிருக்காது.

﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَـنِ الرَّحِيمِ ﴾
In the Name of Allah, the Most Gracious, the Most Merciful.
﴿الم – ذَلِكَ الْكِتَابُ لاَ رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ – الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلوةَ وَمِمَّا رَزَقْنَـهُمْ يُنفِقُونَ – وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَآ أُنزِلَ إِلَيْكَ وَمَآ أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالأْخِرَةِ هُمْ يُوقِنُونَ – أُوْلَـئِكَ عَلَى هُدًى مِّن رَّبِّهِمْ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ – إِنَّ الَّذِينَ كَفَرُواْ سَوَآءٌ عَلَيْهِمْ ءَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لاَ يُؤْمِنُونَ – خَتَمَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَعَلَى سَمْعِهِمْ وَعَلَى أَبْصَـرِهِمْ غِشَـوَةٌ وَلَهُمْ عَذَابٌ عظِيمٌ ﴾
Alif Lam Mim.) (2. The Romans have been defeated.) (3. In the nearest land, and they, after their defeat, will be victorious.) (4. In Bid`i years. The decision of the matter, before and after is only with Allah. And on that day, the believers will rejoice) (5. With the help of Allah. He helps whom He wills, and He is the All-Mighty, the Most Merciful.) (6. A promise from Allah, and Allah fails not in His promise, but most men know not.) (7. They know only the outer appearance of the life of the world, and they are heedless of the Hereafter.)
இதை சரியான தமிழில் மொழிபெயர்க்கும் போது
வல்ல இறைவனின் திருநாமம் போற்றி
மனிதர்கள் உலக வாழ்வின் புறதோற்றத்தில் மயíகி கிடப்பதால் மறுமை அலட்சியமாக தெரிகிறது. இறைவனிடமே வெற்றி தோல்விகள் இருக்கின்றது.ரோம் அருகில் உள்ள இடத்தில் தோல்வியடைந்து விட்டது.ஆனால் சில வருடíகளுக்குள்ளே அவர்களுக்கு நிச்சயம் வெற்றி உண்டு.. சர்வ வல்லமையும் கிருபையும் கொண்ட இறைவனின் உதவியால் இது நடைபெறும் ஆனால் மனிதர்களில் பெரும்பாலனோர் இதை அறிவதில்லை.ரோமர்கள் வெற்றி பெறும் வேளையில் விசுவாசிகள் மகிழ்ச்சியடைவார்கள்.இது இறைவனின் வாக்குறுதியாகும்.அவன் வாக்குறுதியை தவறமாட்டான்..
மொழியடிப்படையில் அதுவும் தமிழ் மொழியடைப்படையில் மொழிமாற்றம் இப்படி இல்லை என்றால் அர்த்தம் திரிபு பட்டு விடும்.இதற்கு மேற்சொல்லப்பட்ட கால அடிப்படை முக்கியமானதாகிறது.ஆனால் வாக்கியத்துக்கு வாக்கியம் மொழிமாற்றம் செய்வதால் ஏற்படும் குளறு படிகளை மேற்சொன்ன வசனíகளை மொழிபெயர்த்த ஹாஜி முஹம்மது ஜான் மொழி பெயர்ப்பை பார்க்கிற போது தெளிவாகிறது.

ஆíகிலத்தில் இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிப்பெயர்ப்புகள் வெளி வந்திருக்கின்றன.ஆனால் ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறு பட்டு நிற்கிறது இதற்க்கு காரணம என்ன என்று பார்க்கிற போது மொழியாற்றலும் மொழிபெயர்பாற்றலும் வேறு பட்டு இருக்கிறது என்பது தெளிவாகிறது,

ஆíகிலத்தில் திருகுரான் மொழிமாற்ற அட்டவணை

எண் ஆண்டு மொழிமாற்றம் செய்தோர்
1 1649 அலெக்ஸாண்டர் ரோஸ்
2 1734 ஜார்ஜ் சேல்
3 1861 ரெவறண்ட் ஜெ.எம்.ரோட்வெல்
4 1880 எட்வர்ட் ஹென்றி பால்மர்
5 1905 முகமது அப்துல் ஹ்க்கிம் கான்
6 1912 மிர்ஸா அபுல் பசல்
7 1912 மிர்ஸா கைராத் டெலவி
8 1917 முகமத் அலி
9 1920 ஹாபிஸ் குலாம் சர்வார்
10 1930 முகமத் மர்மடுக் பிக்தால்
11 1934-37 அப்துல்லா யூசுப் அலி
12 1937 ரிச்சார்டு பெல்
13 1941-57 அப்துல் மஜீத் தர்யாபதி
14 1955 ஸேர் அலி
15 1955 எ.ஜே.ஆர்பெர்ரி
16 1956 என்.ஜே.தாவூத்
17 1960 சலாகுதீன் பீர்
18 1962 அலி அகமத் கான் ஜ்லுந்திரி
19 1964 மிர் அகமத் அலி
20 1964 ஹாதிம் ரஹ்மான் நூரி
21 1966 அப்துரஹ்மான் தாரிக் & ஜியாவுதீன் ஹிலானி
22 1969 செயத் அப்துல் லத்திப்
23 1969 மாலிக் குலாம் பரீத்
24 1970 ஜப்ருல்லா கான்
25 1970 முகமத் அலி இஸ்மாயில் ஹபீபி
26 1974 ஹாசிம் அமீர் அலி
27 1977 தக்வுதீன் அல் ஹிலாலி & முகமத் மாஹீன் கான்
28 1979 முகமத் முபாசிர் அகமத்
29 1980 முகமத் ஆஸாத்
30 1980 முகமத் ஒய்.ஸயீத்
31 1981 ஷேக் முகமத் ஸரூர்
32 1981 டாக்டர் ரஸாத் கலிபா
33 1982 எம்.ஹெச்.சாஹிர்
34 1984 அஹமத் அலி
35 1985 டி.பி.இர்விí(அல்ஹாஜ் தாலிம் அலி)
36 1986 எம்.எம்.ஹதீப்
37 1991 கியூ.அராபாத்
38 1991 அகமத் ஸ்தான் & டினா ஸ்தான்
39 1992 அலி ஒசேக்
40 1993 மாக் படான்
41 1993 தோமஸ் கிளேரி
42 எம்.பாத்மி
43 அபு முகமத் மசீக்

மொழியியலின் பரந்து பட்ட ஆய்வுகள் பிரமாண்டமானதாக இருக்க இலக்கியமாகவும்,பண்பாடகவும்,ஒரு கால சூழலாகவும்,வரலாறாகவும்,புனிதமாகவும் திகழுகின்ற திருகுர் ஆன் என்னும் பிரதி தரும் மொழி எளிதில் புரிந்து விடக்கூடியதும்,ஒற்றை தன்மை மிக்கதும் என்று எதிர்பார்ப்பது சரியானதல்ல.திருக் குர் ஆன் இலக்கியமாக இருக்கின்ற காரணத்தால் உவமை,உருவகம்,குறியீடு,யாப்பு,சந்தம், போன்றவை அதை கவிதை போலவும்,கதைப்பாடல் போலவும்,உரைநடைப்போலவும் இருந்தாலும் இலக்கியத்துக்கான மொழி அதிகம் திருக்குரானில் இருப்பதால் ஒரு முழுமையான,தன்னிறைவைடைய ஒரு தனி மொழி அலகாக அது இருக்கிறது,.
குறிப்பான்,குறிப்பிடு,சொல்லாடல்,வார்த்தையாடல்,கதையாடல் போன்றவை தரும் பொருளும் இலக்கிய படைப்பாக அவை தரும் பொருளும் வேறுபாடுமிக்கதாக,இருதள அமைப்புடையதாக செயல்படுகிறது.இவ்வகையில் குர் ஆனின் மொழியமைப்பு இலக்கியமொழி,நேர் மொழி என இருதள அமைப்புகள் இருப்பதை அறிய முடிகிறது.இலக்கியம் மொழியாலே ஆக்கப்படுகிறது.ஒலியன்,உருபன்,சொல்,சொற்றொடர்,வாக்கியம் என்ற கூறுகளை உடையது மொழி.இவற்றை மொழியின் வடிவ கூறுகள் எனலாம்.இந்த வடிவ கூறுகள் மூலமே தொடர்புதகவல் அல்லது பொருண்மை வெளிப்படுத்தப்படுகிறது.மொழி அர்த்தமுள்ள ஒரு சமூக செயற்பாடாக மாறுகிறது.ஒரு இலக்கிய படைப்பில் மொழி சாதனíகள் ஒழுíகமைக்கப்பட்டு இருக்கின்றன.இவ்வாறு உருவாக்கப்படும் வடிவம் வாக்கியíகளின் பொருண்மையை தருவது மட்டுமல்லாது இலக்கிய பிரதியின் பொருண்மை சார் உள்ளடக்கத்துக்கு ஒரு புதிய பரிணாமத்தையும் சேர்க்கிறது.

பெர்டினட் டி சசூர், மொழியை குறிகளின் ஒரு ஒழுíகமைப்பாக விளக்குவார்.அவ்வகையில் மொழியியலை குறியியலின் ஒரு பிரிவாக கருதலாம்.ஆக குர் ஆன் என்ற பிரதி குறிகளால் ஆன ஒரு பிரதி என விளíகலாம்.மொழியால் கட்டமைக்கப்படும் மொழி என்பதும்,குறிகளால் ஆன குறி என்பதும் அமைப்பு ரீதியான சுயாதீனமான மொழிக்கூறுகளேயாகும்.இந்த அமைப்பு பல்வேறு பொருள்தள விரிவுக்கு வழிவகுக்க கூடியது ஆகும்.ரோமன் யாக்கபசன் என்ற மொழியியலாளர் மொழியின் ஆறுவகை செயல்பாடுகளை கூறுகிறார்.அவை

1] சுட்டு செயற்பாடு [Referential function]
2] உணர்ச்சி செயற்பாடு [Emotive function]
3] தூண்டல் செயற்பாடு [Conative function]
4] உரைத்தொடர் செயற்பாடு [Phatic function]
5] கருவிமொழி செயற்பாடு [Metalingual function]
6] கவித்துவ செயற்பாடு [ Poetic function]

யாக்கப்சன் இந்த ஆறு மொழி செயற்பாடுகளுக்கும் இடையே ஒரு படிநிலை உறவை காண்கிறார்.மொழி தொடர்பியலின் அடிப்படை கூறுகளான பேசுவோர்,கேட்போர்,பேச்சு சூழல்,தகவல்,தொடர்பு,குறி ஆகியவை இந்த ஆறு செயற்பாடுகளோடும் தொடர்பு கொண்டிருக்கிறது.மொழியின் கவித்துவ செயற்பாடு மொழிகலையின் ஒரே செயல்பாடு அல்ல.மாறாக அது தீர்மானிக்கும் ஆதிக்க செயற்பாடு மட்டுமே.ஏனைய எல்லா மொழி நடத்தைகளிலும் அது ஒரு துணை உறுப்பாக செயல்படுகிறது.மொழியின் பிரச்சனைகளை தொடாமல் செயல்பாடுகளை ஆராய முடியாது.ஒரு தகவலின் மொழியமைப்பு பிரதானமாக அதன் முதன்மை செயல்பாட்டில் தíகியுள்ளது.இவ்வாறாக மொழிகலை பற்றிய பிரதியான திரு குர் ஆனை மொழியின் செயல்பாடுகள் வழியே ஆராயும் போது அதன் சரியான விளக்கம் கிடைக்கும் என்பது தெளிவாகிறது.

திருக்குரானின் மொழி பயன்பாட்டை சொல்லாடல் ஆய்வினால் விளíகிக்கொள்ளலாம்.சமூக தொடர்பாகவும்,குழு வழக்காகவும்,இலக்கியமாகவும் சொல்லாடல் குரானில் அதிகமாக திகழ்கிறது.நேர் சொல்லாடலாகவும்,இலக்கிய சொல்லாடலாகவும் திருகுரான் மொழியின் செயல்பாடுகள் நிகழ்ந்தேறியுள்ளது.நேர் சொல்லாடல் மொழிக்குறிகளின் நேர்பொருளில் மொழியின் சுட்டு செயல்பாடாகிறது.அது போல இலக்கிய சொல்லாடல் எல்லாவகையான சொல்லாடல்களுடனும் நேர் சொல்லாடலின் பொருண்மை அமைப்பிலிருந்து விலகி சொல்லுக்கும் பொருளுக்குமான நேரடி தொடர்பை துண்டித்துக்கொண்டு வெளியே சஞ்சரிக்கிறது.இதை நோம் சாம்ஸ்கி கூறும் போது இலக்கணம் பொருண்மையில் இருந்து சுயாதீனமானது என்றார்.ஏனெனில் நேர் சொல்லாடல் என்பது இலக்கணம் தழிவியது ஆகும்.எனவே தான் திருக்குரான் தரும் விளக்கம் ஆளுக்கு ஆள் வேறுபாடுடையதாக மாறிக்கொண்டிருக்கிறது.

இலக்கியத்தில் நேர் சொல்லாடல்களும் உண்டு.அவற்றின் பொருள் அவை இடம் பெறும் சந்தர்ப்பத்தை பொறுத்தது.நேர் சொல்லாடலில் அர்த்தமற்றதாக தெரியும் வார்த்தை கோவைகள் இலக்கிய சொல்லாடலில் அவை இடம்பெறும் சந்தர்ப்ப சூழலை பொறுத்து பொருள்தரும்.இவ்வாறு ஒரு மொழி கூற்றானது அது இடம் பெறும் மொழி சந்தர்ப்பம்,உரைநடை சந்தர்ப்பம் என்பவற்றை பொறுத்து பொருளேற்றம் பெறும்.இதனை சந்தர்ப்பமயமாக்கல் என்பனர்.இந்த விஷயத்தை திருகுரான் மொழியில் எப்படி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை அறியாமல் வெறுமனே விளíகவோ,புரிய வைக்கவோ முடியாது.திருகுரானின் மொழியமைப்பை சில உதாரணíகளோடு புரிய முற்படுவோம்.

“நன்மையை கொண்டே தீமையை தடுத்து கொள்ள வேண்டும்” (41:34)

இது நேரடி சொல்லாடல் ஆகும்.பொருள் குழப்பமின்றி நேரடி தகவலை தருகிறது.

“இரவை பகலுக்குள் புகுத்தினோம்.
பகலை இரவுக்குள் புகுத்தினோம்”(3:27)

இது இலக்கிய சொல்லாடல் ஆகும்.இரவை பகலுக்குள் புகுத்தவோ அல்லது பகலை இரவுக்குள் புகுத்தவோ என்பது குழப்பமிக்க சொல்லாடல் ஆகும்.ஆனால் இது ஒரு இலக்கிய சொல்லாடலாக இருப்பதால்.மொழி குறிகளின் ஒழுíகமைப்பாக இருப்பதால் பல்வேறு அர்த்தíகளை தோற்றுவிக்கிறது.

“மேலும் நாமே ஒரு பாதுகாப்பான விதானத்தை அமைத்து வானத்தை படைத்தோம்”(21:32)

இந்த சொல்லாடல் நேர் சொல்லாடலாகவும் அதே சமயம் இலக்கிய சொல்லாடலாகவும் இருக்கிறது.இதனால் ஒற்றை அர்த்தம் பற்றிய வேறுபாடு இíகு முக்கியமானதாகிறது.இவையனைத்தும் தமிழ் மொழிபெயர்ப்பில் இருந்து கிடைக்க கூடிய குரானிய மொழியாகும்.

“சந்திரன் பிளந்து விட்டது இறுதி நேரம் நெருíகிவிட்டது” என்ற வசனம் இலக்கண ரீதியில் சரியாகவும் பொருண்மை ரீதியில் அர்த்தமற்றதாகவும் இருக்கிறது.

“உíகளுக்கு உíகளுடைய மார்க்கம்.எனக்கு என்னுடைய மார்க்கம்”(அத்தியாயம் 109) எனும் வசனம் உரையாடல் சந்தர்ப்பத்தை தெளிவாக்குகிறது.

“தீனில் யாதொரு நிர்பந்தமும் இல்லை.தவறான வழியிலிருந்து நேரான வழி தெளிவாக பிரிக்கப்பட்டு விட்டது”(2:256)

இந்த வசனம் கால சூழலையும் மொழி சந்தர்ப்பத்தையும் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

தமிழிலில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த அரபு மொழி அமைப்பு கூறுகளில் மொழிகளை வகைப்படுத்தும்[Typology] வகையில் தொன்மை[Proto] வடிவு,உள ஒருமை [Psychic unity] போன்ற அடிப்படை கூறுகளுடன் பொருள் விளக்கம் கொள்ளுகிறது.இவை மொழியின் அடிப்படை அம்டíகளாக இருக்கிறது.மொழி அதன் இலக்கண கூறுகளுடன் தனித்தல்,ஒட்டுதல்,திரிதல் போன்ற அடிப்படை கூறுகளை கண்டுணாரததின் பட்சம் மொழி அர்த்தமற்றதாக ஆகிவிடும்.ஆகவே தான் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட அனைத்து குரான் பிரதிகளும் பல்வேறு மொழிபெயர்ப்புகளாக திகழ்கிறது.மேலும் திரு குரான் இலக்கியமாகவும் இருப்பதால் அதன் மொழிகலை முக்கியமானதாகும்.

சசூர் கூறும் மொழிக்குறியும்(Lingustic sign] , அகமொழியும்,புற மொழியும் [Langue and Parole] விரிவான புரிதல்களை தருகிறது.சசூர் ஒவ்வொரு சொல்லையும் ஒரு குறியாக கருதினார்.ஒரு குறிக்கு இரண்டு பகுதிகள் உண்டு.ஒன்று குறிப்பான்[Signifier] மற்றது குறிப்பீடு[Signified] இவற்றுக்கு இடையில் உள்ள உறவு இடுகுறிதன்மை வாய்ந்த்து.சொல்லுக்கும் பொருளுக்கும் இடையில் இடைவெளி இருக்கிறது.இதை மற்ற சொல்லாடல்கள் சமனபடுத்துகிறது.ஒரு குறி இடுகுறிதன்மை வாய்ந்ததினால் அதன் குறிப்பீடு மீண்டும் குறிப்பானையே உருவாக்குகிறது.சசூர் குறிகளுக்கிடையே இருவகையான உறவு இருப்பதை விளக்குகிறார்.ஒன்று கிடைநிலை உறவு[Syntagmatic relation],மற்றது அடுக்கு நிலை உறவு[Paradigmatic relation] ஆகும்.இவை தான் மொழியாக ஒழுíகமைவு பெற்றிருக்கிறது.


mujeebu2000@yahoo.co.in

Series Navigation