தியா: முஸ்லிம் மடோனா

This entry is part [part not set] of 33 in the series 20051125_Issue

ஆசாரகீனன்


27-வயதிலேயே சர்வதேசப் புகழ்பெற்று விட்ட முஸ்லிம் பெண் பாடகர் தியா (Deeyah). இவருடைய பெற்றோர் ஆசியாவிலிருந்து நார்வேயில் குடிபுகுந்தவர்கள். தம் பதின்ம வயதிலேயே இரு ஆல்பங்களை வெற்றிகரமாக வெளியிட்டவர் தியா. இவர் தற்போது லண்டன் நகரைத் தம் சொந்த ஊர் என்று சொல்லிக்கொண்டாலும், தற்போதைய ஆல்பம் தயாரிப்பு வேலை காரணமாக பாதி நாட்களை அமெரிக்காவிலேயே கழிக்கிறார்.

ஏழு வயதில் சங்கீதம் கற்றுக் கொள்ளத் தொடங்கிய தியா, எட்டு வயதிலேயே தொலைக்காட்சியில் பாடினார். இந்திய செவ்வியல் இசையை பதினான்கு ஆண்டுகள் கற்றுக் கொண்டுள்ள தியா, உஸ்தாத் ஃபதே அலி கான் மாணவியாக ஏற்றுக்கொண்ட ஒரே பெண் ஆவார். இவரிடம் ஆறு ஆண்டுகள் சங்கீதம் பயின்றார் தியா. மேலும், உஸ்தாத் சுல்தான் கானிடம் சங்கீதம் கற்ற மிகச் சிலருள் இவரும் ஒருவர். இன்று வரை உஸ்தாத் சுல்தான் கானே தியாவினுடைய இசைக்கு வழிகாட்டியாக இருக்கிறார்.

பாரம்பரிய சங்கீதத்தில் ஆழ்ந்த பின்னணி இருந்தாலும், இவர் பலதரப்பட்ட நவீன இசை வகையறாக்களைக் கேட்பதில் ஆர்வம் கொண்டவர். ஸ்காண்டிநேவியாவில் வசிக்கும் போது பாப் இசையை விரும்பிக்கேட்ட தியாவை மடோனா, மைக்கேல் ஜாக்ஸன் மற்றும் ப்ரின்ஸ் ஆகியோர் மிகவும் கவர்ந்தனர். பின்னர் ஹிப்-ஹாப், ராக் இசைகளை இவர் விரும்பிக் கேட்டார். இவை அனைத்துமே தம் இசை வெளிப்பாட்டுத் திறனை பாதித்திருப்பதாகச் சொல்கிறார் தியா.

பதினைந்தாவது வயதில் தம் முதல் ஆல்பத்தை இந்திய, ஜாஸ், நாட்டார் (folk) இசை வடிவங்களின் கலவையாக தியா வெளியிட்டார். இளம் வயதிலேயே அவர் பெற்ற வெற்றிகள் மற்றும் விருதுகள் காரணமாக, ஆசியாவிலிருந்து வந்து குடியேறிய இளைஞர்களில் நார்வே சமூகத்தில் ஒருங்கிணைந்தவர்களுக்கு ஓர் சிறப்புச் சின்னமாக (Poster child) தியா ஆனார்.

ஐந்து மொழிகளைப் பேசும் திறனுடைய தியா, புகழ்பெற்ற பெரிய இசைப் பதிவு நிறுவனமான பிஎம்ஜி (BMG)-க்காக, தம் 16-வது வயதில் ஒரு பன்மொழி பாப் இசை ஆல்பத்தை உருவாக்கினார். இந்த ஆல்பத்தில் இடம்பெற்றிருந்த ஒரு காட்சி இவருடைய முதுகு தெரியும்படி அமைந்திருந்ததால், பழமைவாத முஸ்லீம்களின் ஆத்திரத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளானார். தியாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மிரட்டல் விடுத்தனர். ஓர் இசை நிகழ்ச்சியின் போது தியாவை மேடையிலேயே தாக்கியதோடு, அவர் படித்துக் கொண்டிருந்த கல்வி நிறுவனத்திலிருந்து அவரைக் கடத்திச் செல்லவும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முயற்சித்தனர். இதன் காரணமாக 1996-ல் தம் பதினெட்டாவது வயதில் தியா நார்வேயை விட்டு லண்டனில் குடியேறிய நேர்ந்ததோடு, சில காலம் தம் இசை முயற்சிகளையும் நிறுத்த வேண்டியதாயிற்று. இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் இத்தகைய அத்துமீறல்கள், வன்முறைகள் அனைத்துக்கும் பல-பண்பாட்டியம் என்ற போர்வையில் இடதுசாரிகள் கருத்துத் தளத்தில் ஆதரவு தருவார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

லண்டன் வாழ்க்கை தந்த புத்துணர்வு காரணமாக, 1998-ஆம் வருடம் மீண்டும் தம் இசை முயற்சிகளைத் தொடங்கினார் தியா. புகழ்பெற்ற இசைத்துறை நிர்வாகியான ஸ்டாவ் ஃபார்க்நொலி (Steve Fargnoli)-யுடன் சேர்ந்து கொண்டு ஒரு புதிய ஆல்பத் தயாரிப்பில் இறங்கினார். 1999-ல் வார்னர் பதிவு நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார். ஆனால், எதிர்பாராத விதமாக ஸ்டாவ் ஃபார்க்நொலிக்கு ஏற்பட்ட புற்று நோய் காரணமாக இந்த முயற்சி முழுமை பெறவில்லை.

பின்னர் 2002-ஆம் ஆண்டு இசை நிர்வாகிகளான ராய் எல்ரிட்ஜ் (Roy Eldridge) மற்றும் மைக் ஆண்ட்ரூஸ் (Mike Andrews) ஆகியோருடன் கூட்டு சேர்ந்தார். அத்தோடு, தம் அமெரிக்க தயாரிப்பாளருக்காக அட்லாண்டா நகரிலும், லண்டன் நகரிலும் ஆல்பம் தயாரிக்கும் வேலையைத் தொடங்கினார். மேலும், இசை ஆல்பத் தயாரிப்பிலும் தொழில்நுட்பத்திலும் தேர்ந்தவரான டேரின் ப்ரிண்டில் (Darin Prindle) என்பவருடனும் கூட்டணி அமைத்துள்ளார்.

இந்தக் கூட்டு முயற்சி காரணமாக உருவாகியுள்ள புதிய ஆல்பம் ‘என் சொந்தத் திட்டம் ‘ (Plan Of My Own) என்ற தலைப்பிலானது. தியாவின் திறனையும், உறுதியையும், கலை அர்ப்பணிப்பு உணர்வையும், அவருடைய இசை அடையாளத்தை உண்மையாகப் பிரதிபலிக்கும் விதத்திலும் இந்த ஆல்பம் உருவாகியுள்ளது. தனித்திறமை பொருந்திய இசையமைப்பாளரும், பாடலாசிரியருமான தியா இந்த ஆல்பத்திலுள்ள எல்லாப் பாடல்களையும் எழுதுவதிலும், உருவாக்குவதிலும் சம பங்கு வகித்திருக்கிறார். ஹிப்-ஹாப் மற்றும் ராக் நயத்துடன் கூடிய, இந்திய இசையின் வேர்களைக் கொண்ட அருமையான பாப் இசைப் பாடல்களின் தொகுப்பாக இந்த ஆல்பம் அமைந்துள்ளது.

மூளைச்சலவை பதிவு நிறுவன (Brainwash Records)-த்தின் தயாரிப்பாளர் ‘மிக்ஸ்ஜொ ‘ (Mixzo), லாஸ் ஏஞ்சல்ஸ் நகர ராப் பாடகர் ‘யங் மேலே ‘ (Young Maylay), ஹ்யூஸ்டன் நகரின் ‘க்ராஃப்ட்பீட்ஸ் ‘ மைக் ஜோன்ஸ் உள்ளிட்ட பலரும் இந்த ஆல்பத்தில் பங்கு பெற்றுள்ளனர்.

இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள ‘What Will It Be ‘ என்ற பாடல் பற்றி தியா சொல்வதாவது:

‘இதன் மூலம் நாம் சொல்ல வருவது என்னவென்றால், ஒரு பெண் தன்னுடைய வழியைத் தானே நிர்ணயித்துக் கொள்வதும், வன்முறை பற்றியோ அல்லது சொந்தப் பண்பாட்டிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு விடுவோமோ என்ற எவ்வித அச்சமும் இல்லாமல் தம் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையைப் பற்றியே. ஒரு முஸ்லிம் பெண் கலைஞராக நான் எதிர்கொண்ட பிரச்சினைகளைப் பற்றி இந்தப் பாடல் வழியாகவும், அதன் காட்சிப் பதிவின் மூலமும் முதன் முறையாக வெளி உலகுக்குத் தெரிவித்திருக்கிறேன். இஸ்லாம் என்பதை ஒரு போர்வையாகப் பயன்படுத்திக் கொண்டு, ‘வேசி ‘ என்றும், ‘பிசாசு ‘ என்றும், ‘வெட்கக் கேட்டைக் கொணர்பவள்’ என்றும் என்னை பல ஆண்டுகளாக ஏசியவர்களுக்கு உரிய பதிலை என் சார்பில் இந்தப் பாடல் கொடுக்கிறது.

‘குலப்பெருமை ‘ (honor) என்ற சாக்கில் கொல்லப்பட்ட முஸ்லிம் பெண்களின் முகங்களை இந்தப் பாடல் காட்சியில் என் திறந்த முதுகில் காட்டியுள்ளேன். அத்தகைய வெறுப்புக் குற்றங்களை (hate crimes) இழைத்தவர்களின் பார்வையில் இத்தகைய சிறு அங்க-வெளிப்பாடும் நிர்வாணமும், இந்தப் பெண்களைக் காட்டுவதும் தண்டனைக்குரிய பாவம். நம் இஸ்லாமிய பண்பாட்டில் காணப்படும் பொய்மை (hypocrisy), அதைப் பற்றி பேசியே தீர வேண்டிய ஒன்றாக பொறுக்க முடியாத அளவுக்குப் போய்விட்டது. முஸ்லிம் பெண்ணின் உடலில் ஒரு துளி வெளியே தெரிந்தால் கூட அதைப் பற்றி கூச்சலிடுபவர்கள், இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம் பெண் ஒருவர் அடித்து நொறுக்கப்பட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ கூட வாயைத் திறப்பதில்லை. நிதர்சனத்தில் நம் கலாச்சாரத்தை சிறுமைப்படுத்துவது இந்தப் போக்குதான். முஸ்லிம்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவது மாறாத இந்த மனப்பாங்குதானே தவிர திறந்து கிடக்கும் தோள் பகுதியோ அல்லது முதுகுப் பகுதியோ அல்ல. இந்த பாடல் காட்சியில் அவர்கள் இழைத்த குற்றங்களை வெளிப்படுத்தும் ஒரு திரைச்சீலையாக (canvas) என்னுடைய நிர்வாணம் அமைகிறது.

சதை என்பதை ஒரு பாவம் என்று அவர்கள் கூறினாலும், அவர்கள் என்னைப் பார்க்கவே செய்வார்கள். ஆனால், அம்மணத்தை மட்டுமே பார்ப்பார்களே ஒழிய அதில் பிரதிபலிக்கும் அவர்களுடைய குற்றங்களைப் பார்க்க மாட்டார்கள். அவர்களுடைய நம்பிக்கையில் இருக்கும் அடிப்படையான இரட்டை வேடம் இதுதான். அவர்களால் பார்க்க முடிந்தாலும், தங்களுடைய பாவம் ‘கொலை மற்றும் காமம் ‘ என்ற இரண்டு பக்கங்களையும் கொண்டது என்பதை அவர்களால் அறிய முடியாது. யார் உண்மையான குற்றவாளி – ‘வேசி ‘ என்று அழைக்கப்படும் நானா அல்லது ‘நெறியாளர்கள் ‘ என்று சொல்லிக்கொள்ளும் அவர்களா ? ‘

Does the truth only come from the top of a holy man’s spire ?
From three paces back, covered head to toe ?
Are the rules just for the masses and written just for show ?
[‘புனிதர்களின் மினார்களில் இருந்து மட்டும்தான் உண்மை வெளி வருமா ?
அதுவும் மூன்று அடிகள் பின்னே நடந்து, முடி முதல் பாதம் வரை முக்காடிட்டா ?
விதிகளெல்லாம் பாமரருக்கு மட்டும்தானா ? நாடகமாய் காட்டத்தான் எழுதப்பட்டனவா ?’]

– என்று தொடங்கும் இந்தப் பாடல் காட்சியின் போது உடலை முழுவதும் மறைக்கும் உடை அணிந்த முஸ்லிம் பெண் ஒருவர் சாலையில் நடந்து சொல்கிறார். வாய் கட்டப்பட்ட நிலையில் பல முஸ்லிம் பெண்களும், ஆண்களும் தியாவின் திறந்த முதுகுப் பகுதியிலும், தொலைக்காட்சியிலும் காட்டப்படுகின்றனர். அவர்களுள் கனடாவின் முஸ்லிம் பெண் எழுத்தாளர் இர்ஷத் மஞ்ஜியும் ஒருவர். இவர் ‘Trouble with Islam ‘ என்ற புத்தகத்தை எழுதிய காரணத்தால் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கொலைப் பட்டியலில் இருப்பவர். இந்தப் புத்தகத்தின் இந்தியப் பதிப்பு (ImprintOne; பக்கங்கள் 258; விலை ரு.Rs 295) நவம்பர் மாதத் தொடக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Where the beat goes – nobody knows
Where the street goes – nobody knows
– என்று தொடங்கும் கோரஸ்,

Do you stand up, lay down or follow ?
What will it be ?
Will it all be the same again tomorrow ?
What will it be ?
You can claim it but the words are hollow
Do you stand up, lay down or swallow ?
What will it be ?
– என்று தொடருகிறது.

இந்திய நகர்ப்புறக் காட்சிகள் – மாட்டு வண்டி, ஆட்டோ ரிக்ஷாகள், குரங்காட்டி போன்றவை காட்டப்படுகின்றன.

Thug life, street life – both sides of the world
Not a bit of glamour – no one listens to the words
Survival of the fittest – or maybe how you’re born
The kids bear the burden when there’s no shelter from the storm

Where the children go – nobody knows
Where the money goes – nobody Knows
– என்று பாடல் வரிகள் தொடரும் போது பேச்சுரிமை மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட பலரும், நிராதரவான குழந்தைகளும் காட்சிப்படுத்தப்படுகின்றனர். பாடலின் தொடக்கத்தில் நடந்து வரும் முஸ்லிம் பெண் ‘D ‘ என்று எழுதப்பட்டுள்ள முழுவதும் மறைக்கப்பட்ட கருப்பு நிற வேன் வண்டி ஒன்றில் ஏறிக்கொள்கிறார்.

கருப்பினத்தவரான ராப் பாடகர் யங் மேலெ பின்வருமாறு பாடலைத் தொடர்கிறார்:

We don ‘t take it lightly when you threatinin women,
how you have so much hate and faith in religion ?
Fake in the system, need to take a break wit the dissin,
before you end up in the lake where they fishin.
Hearin bout the Muslim Madona, Asian J Lo, lookin for drama
ok if you say so. If you that religious and not wit trendy clothes,
then what you doin even watchin videos

பிற காட்சிகளுக்கு நடுவே கருப்பு நிற வேன் சாலைகளில் செல்வதும் காட்டப்படுகிறது.

பின்னர், கோரஸ் தொடர்கின்றது:

Do you stand up, lay down or follow ?
What will it be ?
Will it all be the same again tomorrow ?
What will it be ?
You can claim it but the words are hollow
Do you stand up, lay down or swallow ?
Do you stand up, lay down or follow ?
What will it be ?
Will it all be the same again tomorrow ?
What will it be ?
You can claim it but the words are hollow
Do you stand up, lay down or swallow ?
What will it be ?
– இந்த வரிகளின் போது வாய் கட்டப்பட்டுள்ள பலரும் தங்கள் கட்டுகளை அவிழ்த்து எறிகின்றனர். கருப்பு நிற வேன் நவீன அமைப்பு கொண்ட கட்டிடம் ஒன்றின் முன் நிற்கிறது. இந்திய பாணியிலான இசை ஸ்வரங்கள் பாடப்படுகின்றன.

வேனிலிருந்து இறங்கி கட்டிடத்தினுள் நுழையும் முஸ்லிம் பெண் அதில் இருக்கும் நீச்சல் குளத்தை அடைகிறார். உடலை மறைக்கும் தன்னுடைய உடையைக் கழற்றி எறிந்துவிட்டு, நீச்சல் உடையுடன் குளத்தில் இறங்குகிறார். மேலும் பலர் தம் வாய்க் கட்டுகளை அவிழ்த்து எறிகின்றனர்.

இந்த பாடலின் சில பகுதிகளை www.brainwashproductions.com என்ற இணையதளத்தில் இலவசமாகக் பார்க்கலாம்.

பாடலை மட்டும் கேட்க விரும்புபவர்களுக்கான சுட்டி: WWIBwebaudioedit.mp3

மேற்கண்ட பாடலை சற்றுத் திருகலாக மொழிபெயர்த்து அனுப்பினால் எந்த ஒரு தமிழ் சிறு-பத்திரிகையின் கவிதைப் பக்கங்களில் வெளியிடப்படும் வாய்ப்புள்ளது. பாப்லோ நெருடா, தஸ்லிமா நஸ்ரின், பாலஸ்தீனக் கவிதைகள் என்று புல்லரித்துக் கொண்டிருக்கும் மொழிபெயர்ப்புக் கவிஞர்கள் தியாவையும் கொஞ்சம் கவனிப்பார்களா ?

தியா பற்றிய மேலதிக விவரங்களுக்குப் பார்க்க: www.deeyah.com

பி.பி.சி.யில் தியாவுடனான நேர்காணல்: deejah.ram

aacharakeen@yahoo.com

Series Navigation