தாகூரின் கீதங்கள் – 8 உன்னோடு ஐக்கியம் !

This entry is part [part not set] of 33 in the series 20071220_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



உன்னைத்தான் எப்போதும்
நேசித்திருப்பதாய்
இன்று நான் உணர்கிறேன்
எல்லா இன்னல்களுக்கும் இடையே !
யுக யுகமாகப்
பொதுக் குழுவினரோ டிணைந்து
நீயும் நானும்தான்
நேசர்களாய் இருந்தோம் !

உலகில் எப்புறம் நோக்கினும்
உயிர் வாழ்வில்
நினைவுக்கு வருகிறது;
நீயும், நானும்
எல்லையற்ற வடிவங்களில்
ஐக்கிய மானது
எனக்குத் தெரிகிறது
ஒவ்வொரு பிறப்பிலும் !

காலவரை கடந்து
வான்வெளி அரங்கிலே நான்
வாசம் செய்ததை
நான் மறந்து போனேன் !
விண்மீன்களின்
மினுமினுப் பொளியில் தாவித் தாவி
ஊஞ்சலாடி இருந்திருப்போம்
ஒன்றாக நீயும் நானும் !

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 17, 2007)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts