தாகூரின் கீதங்கள் – 25 ஏற்கும் இதயம் எனக்கு !

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


எதையும் நிராகரிக் காமல்
மதங்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளும்
இதயம் எனக்கு !
ஏனெனில் வெளியே
என்னைச் சந்திக்கக் காத்திருப்பவன்
நானேதான் நண்பா !
பொன்னான நாளை வீணாய்ப்
போக்குவதும்,
வெறுமனே புழுவைப் போல் வாழ்வதும்
வெட்கக் கேடு !
துடிக்கும் தீச்சுடர்
நிலையான திரி விளக்கில்
கலைந்து
புகையாய்ச் சுருள்கிறது !

இதயத்தைத் துள்ள வைத்து
தன்னிலை மறக்கச் செய்யும்
ஆழ்ந்து அகண்ட
அவலமான
ஒயில் மயமான
உன்னத
இன்னிசையை யார்
உள்ளுருகிப் பாட முடியும் ?
எல்லாப் பந்தங்களும் அறுந்துபோய்
இன்ப மயம் நிலவும் !
புதிய தாளநய முடன்
புதிய கானம் பொங்கும் !
நெஞ்சில் கடல் அலைகளை
மிஞ்சி இழுக்கும்
புதிய இச்சை
முழு நிலவு !

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 8, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா