தலித் முகமதிய-தலித் கிறிஸ்தவ சகோதரர்கள்

This entry is part [part not set] of 34 in the series 20100704_Issue

மலர் மன்னன்


முகமதியரில் தலித்துகள் ஒதுக்கி வைக்கப்படுவதோடு, முகமதிய சமுதாயத்தில் பல்வேறு சாதிப் பிரிவுகள் உள்ளன எனவும் திண்ணையில் அன்பர் எச்.ஜி. ரசூல் பதிவு செய்துள்ள கட்டுரை யினை அவர் சார்பில் ’இஸ்லாம் மனித சமுதாயத்தை வேற்றுமை பாராட்டாமல் ஒரே சமுதாயமாகக் காணும் இணையற்ற மார்க்கம்’ என்று விளக்குவோருக்குச் சமர்ப்பிக்க விரும்புகிறேன். அன்பர் ரசூல் இதற்கு என்னை அனுமதிப்பாராக!

ரசூல் தமது மதம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ள இதே நிலைமைதான் தலித் கிறிஸ்தவர்களிடையேயும் நிலவுகிறது. இவர்கள் அனைவரும் ’எங்கள் மதத்தில் ஏற்றத் தாழ்வு பேசும் சாதியமைப்பு இல்லை’ என்கிற உத்தரவாதம் காரணமாக அதை நம்பியே தமது தாய் மதமான ஹிந்து மதத்தைவிட்டு மாற்று சமயங்களைத் தழுவியவர்களாவார்கள். எப்போது அந்த உத்தரவாதம் வெறும் மாயை என்பது உறுதியாகிவிட்டதோ அதன் பின்னரும் அவர்கள் தமக்கு நம்பிக்கை துரோகம் செய்த மாற்றுச் சமயங்களில் நீடிக்கத் தேவையில்லை. அவர்கள் அனைவரும் தமது தாய் மதமான ஹிந்து மதத்திற்குத் திரும்பி வந்து தமது உரிமையான சலுகைகளைப் பெற்று முன்னேறுவதே அறிவுடைமை. ஹிந்து சமூகத்தில் தலித் அல்லாத ஏராள மானோர் அவர்களின் உரிமைகளுக்காகவும் சுய கெளரவம் காக்கவும் தலித்துகளுடன் தோளோடு தோள் நின்று போராடியுள்ளனர். இன்றும் அவ்வாறு துணை நிற்கப் பலர் உள்ளனர். மேலும் தலித்துகளின் சுய கெளரவம் பேணுவதற்கும் சலுகை கோரவும் சட்டப் பாதுகாப்பும் உள்ளது. தலித்துகள் உரிமைகள் கோரவும் சட்டப் பாதுகாப்புடன் சுய கெளரவம் காக்கவும் இவற்றுக்காகப் போராட உத்தர வாதமும் உள்ள தமது தாய் மதத்திற்கே திரும்பி வருவார்களாக.

Series Navigation