தம் ஆலூ (உருளைக்கிழங்கு)

This entry is part [part not set] of 26 in the series 20010910_Issue


தேவையான பொருட்கள்

6 பெரிய உருளைக்கிழங்குகள்

1 மேஜைக்கரண்டி புது பச்சைப்பட்டாணிகள்

1 அரிந்த பச்சை மிளகாய்

1/2 பெரிய வெங்காயம்

உப்பு, எலுமிச்சை சாறு – ருசிக்கு

குழம்புக்கு தேவையான பொருட்கள்

4 தக்காளிகள்

1 பெரிய வெங்காயம்

1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்

1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்

ருசிக்கு உப்பு, எலுமிச்சை சாறு

3 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய்

செய்முறை

உருளைக்கிழங்கை பாதியாக வெட்டி மத்தியில் இருக்கும் கொஞ்சம் கிழங்கை நோண்டி எடுங்கள்.

பட்டாணியை நசுக்கி அதனுடன் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் உப்பு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்குக்குள் நோண்டிய பகுதிக்குள் இந்த கலவையை அடைத்து உருளைக்கிழங்கை பழையபடி சேர்த்து மெல்லிய குச்சிகளால் குத்தி சேர்த்துக்கட்டுங்கள்.

ஒரு வாணலியில் எண்ணெய் மேலாக எண்ணெய் ஊற்றி, அதில் இந்த உருளைக்கிழங்குகளை போட்டு லேசான பொன்னிற நிறம் வரும்வரை வறுத்து எடுத்து, உருளைக்கிழங்கிலிருந்து எண்ணெயை வடி கட்டி வையுங்கள்.

இன்னொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதனுடன் வெட்டிய வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வறுங்கள். பிறகு அதில் தக்காளி எலுமிச்சைச்சாறு, உப்பு போட்டு குழம்பு செய்துகொள்ளவும்.

இந்தக்குழம்பில் வறுத்த உருளைக்கிழங்குகளைப்போட்டு, ஒன்றரை (1 1/2) கோப்பை தண்ணீர் ஊற்றி, வேகவைக்கவும். மூடி போட்டு மூடி, நீராவியில் வேகவைத்து, மெதுவாகும்வரை வைத்து பிறகு எடுக்கவும்.

****

Series Navigation

(இருவருக்கு தேவையான அளவு)

முதல் வகை

(இருவருக்கு தேவையான அளவு)

முதல் வகை