தமிழ்பற்று டமாஸ்…

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

வரதன்


தமிழகத்தில் நல்லா சேல்ஸ் ஆவாது தமிழ் பற்று. வியாபாரம். சக்ஸஸ் ஆனால், அமெரிக்கா வரை தமிழ் சங்கங்கள் கெளரவிக்கும்.

ஒரு தமிழ் மொழி காக்கும் விழா சென்னையில் நடந்தது. அதில் , தலித் விடுதலைக்கு அமைப்பு என்றும், பா.ம.க- அராஜகத்திற்கு எதிராக போராடுவேன் என்றும் சொன்ன திரு.திருமாவளவன், கும்பிட்டார் இராமதாஸைப் பார்த்து.

பல வருடங்கள் முன் இவரை மேலூரில் அடையாளம் கண்டதே இராம்தாஸ் தான் என்றார்.

அவரும் பொன்னாடைப் போர்த்தினார்.

இவர்கள் இருவர் தூண்டுதலிலும் பாதிக்கப்பட்ட கடலூர் வன்னியர், தாழ்த்தப்பட்டவர்கள் ‘ஐயோ பாவம் ‘.

இவர்களின் தமிழ்பற்று பற்றிப் பார்ப்போம்.

உலகத்தில் ஆப்பிரிக்கா கண்டம் வரை சென்று தமிழ் பெயர் சூட்டும், திருமாவளவன், மேடையில் இருந்த, டாக்டர்.இராமதாஸிற்கு, மருத்துவர்.இராமதாசு என்று பெயர் சூட்டியிருக்கலாம்.

அப்புறம் MBBS க்கு தமிழ் மாற்று சொல்லியிருக்கலாம்.

மேலும், விழா நடைப் பெற்ற இடத்திலிருந்து நடை தூரத்தில் இருந்த, சன் டி.வி. சென்று, ‘ஞாயிறு தொலைக்காட்சி ‘ என்று பெயர் சூட்டலாம்.

தமிழரில்லா, சென்னப்ப நாயக்கர் பெயரில் விளங்கி வரும் பெயரை ‘சென்னை ‘ என்பது மாற்றி ‘வெண்ணை ‘ என்று வைக்கலாம்.

இதில் சூப்பர் காமெடி, வடமொழி கூடாது என்பவர்கள், பச்சைத்தமிழன் தலித் தலைவர் இரட்டைமலை சீனிவாசன் விடுத்து, அம்பேத்காரை தங்கள் அடையாளமாக காண்பிப்பது. நல்ல கோமளிக்கூத்து இது.

திமுக-வின் வெற்றியின் மூலத்தைத் தவறாக புரிந்து ஏதோ, தமிழ் மொழிப்பற்று பாவலாக் காட்டினால் , தேர்தலில் வாக்கு விழும் என நம்புகிறார்கள்.

இதில் அறிவுமதி வேறு அவன் , இவன் என்று தரக்குறைவு விமர்சனம் செய்வதை ரசிக்கிறார்கள். தமிழ் கலாச்சாரம் பற்றி பேசும் அறிவுமதி, மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்தது எந்த தமிழ் நாகரீகமோ… ? அதனால் தான் இராமனைக் கண்டால் செருப்பெடுக்கிறார்களோ… ?

அப்புறம், இந்த தங்கர், சீமான், தமிழ் படத்திற்கு ஆங்கில தலைப்பு வைப்பது பற்றி பிதற்றினார்கள்.

ஆட்டோகிராப் என்ற ஆங்கிலத் தலைப்புடன் வந்த ஒரு படம், பல தமிழ் பெயருடன் வந்த படங்களை விட தரத்தில் அதிக உச்சத்தில் இருந்தது நாம் அறிவோம்.

கூட்டம் முடிந்து வெளிவந்ததும், ‘டேய் டிரைவரை எங்கடா.. ? காரை எடுக்கனும் ‘ என்றார்கள். வந்த கூட்டமோ ‘எங்கடா பஸ் ஸ்டாப் இருக்கு .. ‘ என்றார்கள்.

இவர்களுக்கு ஒரு கேள்வி, நீங்கள் ‘எடிட்டிங் ‘, ‘காமிரா ‘ ‘Song compsoing ‘ ‘double positive ‘ என்ற வார்த்தைகள் இல்லாமல் சினிமாக்காரர்களுடன் பேச முடியுதா. இல்லை சினிமா – என்ற வார்த்தையைத் தான் யூஸ் பண்ணாமல் இருக்கிறீர்களா… ?

இதையும் தாண்டி ஒரு வெடி போட்டார்கள்,

‘சினிமா படப்பிடிப்பு கட்டணத்தைக் குறைக்க வேண்டுமாம் ‘

அறிவுமதி பாஷையில் சொல்வது என்றால், ‘ஏண்டா, மக்கள் என்ன கேனைங்களா.. ? தமிழக அரசின் கட்டணப்படி, தமிழகத்தில் சூட்டுங்கு எடுக்க, அதிகபட்சம் ஒரு படத்திற்கு 28 லட்சம் ஆகுமா… ? 13 கோடி பட்ஜெட்டில் கோடி கோடியாய் டைரக்டர், நடிகர் சம்பளம் வாங்க ( அதில் வருமானவரி அல்வா வேறு கதை ) . 28 லட்சம் அரசாங்கத்திற்கு போனால் என்ன.. ? ‘ ஒரு ரோடு செட் போட 1 கோடி செலவழிப்பீர்கள் ஆனால் எல்லா காட்சியும் வெளியில் எடுக்க, 28 லட்சம் தர மாட்டார்களா.. ? தூத்தேறிகளா.. ‘

தமிழக மக்கள் தலையைக் காண்பிக்கும் வரை இந்த சினிமாக்காரர்கள் மிளகாய் அரைக்கத் தான் செய்வார்கள். சினிமாக்காரர்கள் மாயையில் இருந்து மக்களை விடுவிக்க சபதம் எடுத்துள்ள, இராமதாசு, திருமாவளவன் இருக்கும் மேடையிலேயே, அல்வாவா.. ?

சரி இந்தத் தமிழ் பற்று புண்ணியவான்கள் வேஷம் கட்டி தேர்தலுக்கு வருகிறார்கள். மக்கள் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ யார் அறிவார்.

உங்களுக்குத் தான் வாக்கு சீட்டே ஒரு டமாஸ் மேட்டர் ஆச்சே…!!!

வரதன்

varathan_rv@yahoo.com

Series Navigationரவி சுப்பிரமணியன் கவிதைகள் >>