தமிழினி வெளியீடாக

This entry is part [part not set] of 32 in the series 20030710_Issue

ஜெயமோகனின் பத்து நூல்கள்


தமிழிலக்கிய வரலாற்றில் முதல்முறையாக ஒரு பதிப்பகம் ஓர் எழுத்தாளரின் பத்து நூல்களை ஒரேசமயம் வெளியிடுகிறது! ஜெயமோகனின் பத்து நூல்கள் தமிழினி வெளியீடாக வரவுள்ளன

1] காடு [நாவல்] பக்கம் 450

மனித வாழ்வில் இளவெயிலின் மென்மையுடனும் ஒளியுடனும் வந்து பார்த்திருக்கவே கரைந்து கண்ணீராகவும் கனவுகளாகவும் தங்கிவிடும் குறிஞ்சிப்பருவம் குறித்த நாவல்

2] வடக்கு முகம் [நாடகங்கள்] பக்கம் 120

மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட பதுமை, வடக்குமுகம் என்னும் இரு நாடகங்கள். மனித உணர்வுகளின் கவித்துவம் உச்சத்தில் வெளிப்படும் கவியுலகம்

3] நிழல் சென்ற பாதை – தமிழ் நவீனத்துவத்தின் தடங்கள் [கட்டுரைகள் ] பக்கம் 250

மெளனி, புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, நகுலன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், அசோகமித்திரன், ஆ.மாதவன், பூமணி, கலாப்பிரியா, ஆகியோரைப்பற்றிய விரிவான விமரிசன ஆய்வுக் கட்டுரைகள். தமிழ் சூழலில் விரிவான விவாதங்களை உருவாக்கிய முன்னோடி ஆய்வுகள் இவை

4]நிழல் தொடா மரங்கள் – தமிழ் நவீனத்தின் விலகல்களும் மீறல்களும் [கட்டுரைகள் ] பக்கம் 250

ப.சிங்காரம், மு.தளையசிங்கம், அ.முத்துலிங்கம், எம் எஸ் கல்யாணசுந்தரம் ஆகியோரைப்பற்றிய விமரிசன ஆய்வுக்கட்டுரைகள்

5] தருக்கத்தின் தடத்தில் – தத்துவம் வரலாறு அரசியல் [கட்டுரைகள் ] பக்கம் 200

6] ரசனையின் தடத்தில் – இலக்கிய எதிர்வினைகள் [ கட்டுரைகள்] பக்கம் 200

சுஜாதா, நாஞ்சில்நாடன், பிரமிள் , சுந்தர ராமசாமி போன்றவர்கள்மீதான மதிப்புரைகள், பல்வேறு எதிர்வினைகள், மற்றும் தனிக்கட்டுரைகள்.

7] நேர்முகங்கள் [பேட்டிகள் ] பக்கம் 250

ஜெயமோகன் எடுத்த பேட்டிகள் புகழ்பெற்றவை. கடந்த காலத் தமிழ்ச்சூழலில் பெரிய விவாதங்களை உருவாக்கியவை. பின் நவீனத்துவ சிந்தனைகளை தமிழ் சூழல் உள் வாங்கிக் கொள்ள உதவியவை. இசையியல் செவ்விலக்கியம் போன்ற பல தளங்களை தமிழ் வாசகர்கள் அறிய உதவியவை. டி.ஆர்.நாகராஜ், கெ.சச்சிதானந்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், இசை ஆய்வாளர் நா.மம்முது, பேராசிரியர் ஜேசுதாசன், சுந்தர ராமசாமி, நீல பத்மநாபன், அ.முத்துலிங்கம், எம்.யுவன், பாவண்ணன் ஆகியோரின் பேட்டிகள்.

8]தமிழில் மொழிபெயர்ப்புநாவல்கள் [கட்டுரைகள் ] பக்கம் 100

தமிழில் வெளிவந்த முக்கியமான மொழிபெயர்ப்பு ஊல்கள் பற்றிய அறிமுகமும் விமரிசனமும் அடங்கிய நூல் இது

9] உரையாடல்கள் [விவாதம்] பக்கம் 100

சொல்புதிது சார்பில் நடத்தப்பட்ட நான்கு இலக்கியக் கூட்டங்களைப்பற்றிய விரிவான விவாதப்பதிவுகள் . முற்றிலும் மாறுபட தரப்புகள் கருத்து ரீதியாக மோதிக் கொள்வத நாடகீய சித்தரங்கள். தமிழில் செயல்படும் கருத்துத் தரப்புகளைதறிய உதவும் நூல்

10] இலக்கிய குறிப்புகள்: டி எஸ் எலியட் [மொழிபெயர்ப்பு] பக்கம் 120

தமிழினி பதிப்பகம்

அவ்வை சண்முகம் சாலை

கோபாலபுரம்

சென்னை

போன் 044 – 28110759

மின்னஞ்சல் tamilini@rediffmail.com

jeyamohanb@rediffmail.com

Series Navigation

ஜெயமோகனின் பத்து நூல்கள்

ஜெயமோகனின் பத்து நூல்கள்