தமிழிசை – ஒரு பின்னோக்கிய பார்வை

This entry is part [part not set] of 30 in the series 20020512_Issue

எஸ். அருண்மொழி நங்கை

பெண்பாற் இயலிசைப் புலவரான காரைக்காலம்மையார் (5-ஆம் நூற்றாண்டு) இயற்றிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இசை உலகில் முக்கியத்துவம் பெறுகின்றன. பதிக மரபிற்குப் புத்துயிரூட்டிய அம்மையார் நட்டபாடை, இளந்தளம் ஆகிய இரு பண்களில் பாடிய பதிகங்களைப் பின்வந்த இய.சைப் புலவர்கள் முன்னோடியாகக் கொண்டனர். நாயன்மார்களும், ஆழ்வார்களும் சைவ-வைணவ சமயங்களைப் பரப்புவதற்கும், இறைவனைத் தலங்கள் தோறும் சென்று வழிபடுவதற்கும் பல்லாயிரக் கணக்கான தேவாரப் பாடல்களையும், திவ்வியப் பிரபந்தப் பாடல்களையும் இயற்றித் தமிழிசையை வளர்த்தெடுத்தனர். இக்கால கட்டங்களில் வாழ்ந்த பல்லவ மன்னர்கள் (7-ஆம் நூற்றாண்டு) இசைக் கலையை வளர்த்தனர் என்பதற்கு மகேந்திரவர்ம பல்லவ மன்னன் புதுக்கோட்டையில் உள்ள குடுமியான் மலையில் பொறித்த இசைபற்றிய கல்வெட்டே சான்று.

இராசராச சோழன் காலத்தில் (கி.பி. 985 – 1014) தேவாரப் பாடல்கள் பாடுவதற்குக் கோயில்களில் 48 ஓதுவார்களுக்கும், உடுக்கை, ‘கொட்டி மத்தளம் ‘ வாசிப்போர் இருவருக்கும் ஆக 50 பேருக்குக் கொடுக்கப்பட்ட நிவந்தங்கள் பற்றிய செய்திகளைத் தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுக்கள் உரைக்கின்றன.

பதின்மூன்றாம் நூற்றாண்டில் சாரங்கதேவர் இயற்றிய ‘சங்கீத ரத்னாகரம் ‘ எனும் வடமொழி இசை இலக்கண நூ.ல், ‘தேவார வர்த்தினி ‘ எனும் அடைமொழியுடன் பல தமிழ்ப்பண்களும், பெயர்களும், இலக்கணங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர், தமிழக இசையின் தாளங்களை விளக்கும் வகையில் பல்லாயிரக்கணக்கில் முருகப்பெருமானின் பெயரில் திருப்புகழ்ப் பாடல்களைச் சந்த நடையில் பாடியருளினார். அவையே தமிழக இசையின் தாளக் கூறுகளுக்கு மூல இலக்கிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன. இன்றைக்கு வழக்கில் உள்ள நூற்றுக்கணக்கான தாளங்கள் திருப்புகழ்ப்பாடல்களின் அமைப்பி.ருந்தே பெறப்படுகின்றன.

சோழர் காலத்தை அடுத்து தமிழகத்தை ஆண்ட விசயநகர, நாயக்கர், மராட்டிய (17, 18, 19ஆம் நூற்றாண்டுகள்) மன்னர்களும், இசையைப் போற்றிப் பேணினர். அம்மன்னர்களின் தாய்மொழிப் பாடல்கள் ஆதரிக்கப்பட்டன. இவை தமிழிசை மரபை ஒட்டிப் பாடப்படும் ‘கர்நாடக சங்கீதம் ‘ எனும் பெயரில் குறிக்கப்பட்டன. இவ்வாறு கோயில்களிலும். அரசவைகளிலும் இருந்து வந்த தமிழக இசை, பொது மக்களுக்காக அரங்குகளில் வேற்று மொழிப் பாடல்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கால கட்டங்களில் முத்துத் தாண்டவர் (1560 – 1640), மாரிமுத்துப் பிள்ளை (1712 – 1787), அருணாச்சலக் கவிராயர் (1711 -1778) முதலானோர் பல்லவி, அனுபல்லவி, சரணம் எனும் பிரிவுகளைக் கொண்ட கீர்த்தனை, பதம் முதலான இசைப் பாடல்கள் இயற்றியிருப்பினும், அவை தமிழல்லாது வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு மன்னர்கள் ஆண்ட காலத்தில் பாடப்பட்டதால் ஆதரிக்கப்படாமல் போய்விட்டன.

இதையடுத்து தஞ்சையில் வாழ்ந்த சங்கீத மும்மூர்த்திகள் என்று போற்றப்பெறும் தியாகராஜ சுவாமிகள் (1767 – 1847), முத்துசுவாமி தீட்சதர் (1775-1834), சியாமா சாஸ்திரிகள் (1762 – 1827) ஆகியோர் தெலுங்கு, வடமொழியில் பல பாடல்கள் இயற்றி கர்நாடக இசையை மேம்படுத்தினர். இம்மூவரும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாதலால் இவர்கள் இயற்றிய பாடல்களின் இசைமரபு தேவாரம் மற்றும் தமிழிசைப் பாடலகளை அடியொற்றியவை எனக் கருதலாம். இவர்களை அடுத்து, கோபாலகிருஷ்ண பாரதியார், வேதநாயகம் பிள்ளை, இராமலிங்க அடிகளார், நீலகண்ட சிவன், ஆகியோர் தமிழ்ப் பாடல்களை இயற்றினர். இருபதாம் நூற்றாண்டில் கோடாசுர ஐயர், பாபநாசம் சிவன், மகாகவி பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் இராம.ங்கம் பிள்ளை ஆகியோர் தமிழ்க் கீர்த்தனைகள் இயற்றித் தமிழிசையை வளப்படுத்திய போதிலும், சங்கீத மும்மூர்த்திகளின் பாடல்களால் செவ்விசை அரங்குகளில் தமிழ்ப் பாடல்கள் பிரபலமடையவில்லை. இந்நிலையில் தமிழ் நாடகங்களில் தமிழ்ப் பாடல்கள் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தின. சங்கரதாஸ் சுவாமிகள், மதுரை மாரியப்ப சுவாமிகள் பாடல்கள் குறிப்பிடத்தக்கன. பின்னர் திரைப்படங்களில் தமிழிசைப் பாடல்கள் இடம் பெறும் காலகட்டம் தொடங்கியது. குறிப்பாக எம்.கே. தியாகராச பாகவதர், ஜி.என்.பாலசுப்பிரமணியம், தண்டபாணி தேசிகர், பி.யூ. சின்னப்பா போன்றோர்கள் செவ்விசையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படப் பாடல்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.

செவ்விசை அரங்குகளில் வடமொழி, தெலுங்குப் பாடல்கள் பாடப்பட்டு வந்த நிலையிலும், தமிழ்ப்பாடல்களுக்குரிய இடம் தரப்படாத நிலையிலும், தமிழ்நாட்டு இசையரங்குகளில் தமிழ்ப் பாடல்கள் முழங்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு, டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் சீரிய முயற்சியில் சென்னையில் 1943ஆம் ஆண்டில் தமிழிசைச் சங்கம் நிறுவப்பட்டது. அங்கு ஆண்டு தோறும் நடைபெற்றுவரும் தேவாரப் பண்ணாராய்ச்சி மாநாட்டில் ஆராய்ந்ததில் 25 பண்களுக்குரிய இன்றைய இராகங்கள் கிடைத்துள்ளன. அவை பாடப்படும் காலங்களுக்கேற்ப பகற்பண்கள், இரவுப் பண்கள், பொதுப் பண்கள் என வகைப்படுத்தியுள்ளனர்.

இத்தகு சிறப்பு வாய்ந்த தமிழிசை சென்ற நூற்றாண்டு வரை செவ்விசையாகவே இருந்தது. பொதுமக்கள் விரும்பி இலயித்துக் கேட்கும், வண்ணமிருந்தது. ஆனால், இந்த நூற்றாண்டில் இந்நிலை மாறியுள்ளது. இன்றைய நிலையில் தமிழிசை என்றாலே, புதுப்புதுக் கவிஞர்கள் இயற்றிய பக்திப் பாடல்களும், திசை இசைப் பாடல்களுமே நினைவுக்கு வருகின்றன. தமிழிசையில் உயிர் நாடியாகத் திகழும் இன்னிசை தன்மை மாறி, ஒத்திசையும் இன்னிசையும் கலந்ததொரு கலப்பிசையாகத் தமிழிசை இன்றைய திரை இசையமைப்பாளர்களால் புதுஉருவம் அடைந்துள்ளது. இப்புது உருவத்தையே மக்கள் விரும்பி மயங்குவதால், தமிழில் செவ்விசைப் பாடல்கள் அருகிவருகின்றன.

நாளைய தலைமுறையினருக்குத் ‘தமிழிசை ‘ சென்று சேருமா என்பதே ஐயம்தான்.

சொல்புதிது இதழ்-9இல் வெளிவந்த கட்டுரை.

Series Navigation