கோ. ஜோதி
தமிழக அரசியல், பொருளாதர, சமூக, வரலாறுகளோடு தமிழக ஆறுகளும், நீர் நிலைகளும் தொடர்பு கொண்டுள்ளன. இன்று அந்த நீராதாரங்கள் அதிக உபயோகம், தட்டுப்பாடு, மாசுபடுதல் போன்றவைகளால் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. இதனால் நீராதாங்களின் வளங்கள் குறைவதோடு மட்டுமன்றி, நீடித்து நிற்கும் சமூக வாழ்க்கைஇ கலாச்சாரம் கோன்ற அடிப்படையானவைகளும் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. இவற்றோடு தொடர்புபடுத்தி இன்று தமிழகத்தில் எழுந்துள்ள தண்ணீர் தேவைக்கான நெருக்கடிகளை ஆராய்வோம்.
தண்ணீர் தேவைக்கான நெருக்கடிகள் பற்றி மனிதன் புரிந்து கொண்டுள்ள செய்திகளும், எண்ணங்களும்:
* குறைந்த மழையளவும், பருவநிலை தவறுதலும்
* அதிக மக்கள் தொகை
* கிடைக்கின்ற நீரைவிட தேவைகள் அதிகம்
* தண்ணீர் சேகரிப்பு முறைகளில் நவீன வழிமுறைகள் பயன்படுத்துவதில்லை
* தண்ணீர் என்பது வியாபாரப் பொருளாகி வருகிறது
தண்ணீர் தேவைக்கான நெருக்கடி பற்றி எழுந்துள்ள பிரச்சனைகளில் ஆராய்ச்சியாளர் களின் அணுகுமுறை:
நீராதாரங்களின் நிர்வாகம் என்பது தண்ணீர் உபயோகத்தையும் அதன் உபயோகிப் பாளர்களுக்கு உள்ள தொடர்பை பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த நிர்வாகம் சமூகப் பொருளாதராம், சுற்றுச்சூழல் மற்றும் வரலாற்றோடு தொடர்புடையது. எனவே தண்ணீர் மற்றும் அதன் தேவையை ஒரு தனிப் பொருளாக மட்டும் பார்க்காமல் அதை சமூக வாழ்க்கையோடு இணைந்து பார்க்க வேண்டும்.
நீர்ப்பாசன மொத்தப் பரப்பு அதிகரித்துள்ளது. நீர்ப்பாசன ஆதாரங்களில் நிலத்தடி நீரின் உபயோகம் (1960க்குப் பிறகு) மிகவும் அதிகரித்துள்ளது. அதே சமயம் ஏரி, கண்மாய்களின் பயன்பாடு மிகப்பெருமளவில் குறைந்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு நீராதாரங்களும் அதன்மூலம் பயன்பெற்ற பாசனப்பரப்பும்
(பரப்பு – லட்சம் ஹெக்டேர்கள்)
ஆதாரங்கள் |
1950-51 லிருந்து 1959-60 | 1990-91 லிருந்து 1997-98 | ||
நீர்பாய்ச்சப்பட்ட நிகர பரப்பு |
சதவிகிதம் | நீர்பாய்ச்சப்பட்ட நிகர பரப்பு | சதவிகிதம் | |
அரசு மற்றும் தனியார் கால்வாய்கள் | 79.2 | 37.52 | 65.29 | 30.01 |
ஏரிகள் | 77.6 | 36.76 | 48.89 | 22.47 |
கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் | 49.7 | 23.54 | 102.05 | 46.91 |
மற்றவை | 4.6 | 2.18 | 1.31 | 0.60 |
மொத்தம் | 211.1 | 100.0 | 217.54 | 100.00 |
(ஆதாரம் : பருவம் மற்றும் பயிர் பற்றிய அறிக்கைகள்)
* தமிழகத்தின் தொன்மை நீராதாரங்கள் – ஆறுகள், ஏரிகள், கண்மாய்கள், ஊற்றுக்கால், கசக்கால் இவற்றின் உரிமையைக் காக்க 1813ல் எழுதப்பட்ட “மாமூல் நாமா”.
* நில உடைமைகளில் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்.
* 1960களுக்குப் பின்னர் விவசாயத்தில் ஏற்பட்ட மாறுதல்கள்
* நிலத்தடி நீரின் உபயோகம் பலமடங்கு பெருகியது. கிணறுகள் போட்டி போட்டு ஆழப்படுத்தப்பட்டன.(Competitiue Deepening)
தற்போது தமிழகத்தில் உள்ள நீர்பாசன வசதிகள் அவற்றின் மூலம் பயன்பெறும் நிலப்பரப்பு:
1. 34 ஆறுகள் மற்றும் ஆற்றுப்படுகைகள் உள்ளன. இவைகளில் 55 நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டு அவகைள் மூலம் பாசன வசதி கிடைக்கிறது.
2. 3900 ஏரிகள் – இவற்றுள் 20 ஏரிகள் மிகப் பெரும் ஏரிகள்.
3. 20 லட்சம் கிணறுகள் மற்றும் ஆழ்குழாய்க் கிணறுகள்
(ஊற்றுகள் மற்றும் கசக்கால் போன்றவைகள் முற்றிலும் அழிந்துவிட்டன)
தமிழகத்தில் தற்போது நிலவும் தண்ணீர்ப் பிரச்சனைக்கான காரணங்கள்:
* பசுமைப் புரட்சி அதிக உற்பத்தி – இதனால் நிலம் மற்றும் தண்ணீரின் அதிக உபயோகம்.
* கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களில் அரசு போதிய கவனம் செலுத்தாததால் கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்புத் தேடி நகரங்களுக்குச் செல்லுதல். இதனால் ஏற்படும் நகர்ப்புற வளர்ச்சி பல நகரங்களில் குடிநீர் தேவையை அதிகப்படுத்தியுள்ளது.
* நிலத்தடி நீரின் அதிக உபயோகம். இதனால் தொன்மையான நீராதாரங்களைப் பராமரிப்பதில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட தொய்வு.
* நகர்ப்புற தொழில் வளர்ச்சி. தொழிற்சாலைகளுக்குத் தேவையான தண்ணீர்.
* ஏராளமான தொழிற்சாலைகளின் கழிவுகள், நகராட்சி கழிவுகள், இறால் பண்ணைக் கழிவுகள் போன்றவை நீராதாரங்கள் மற்றும் நிலங்களில் விடப்பட்டு, நிலத்தடி நீர் மற்றும் ஆற்று நீர், மாசுபடுத்தப்பட்டு அந்த நீர் தற்போது உபயோகத்தில் இல்லாமல் போனது.
* பல ஆறுகளில் நடைபெற்று வரும் மணற்கொள்ளை.
* மாநிலங்களுக்கிடையே ஓடும் ஆறுகளில் (காவிரி போன்ற) எழுந்துள்ள தாவாக்கள்.
* பல நீராதாரங்கள் (ஏரிகள், ஆறுகள் போன்றவை) மணல்மேடிடும், ஆக்ரமிப்புக்களாலும் பாதிக்கப்பட்டு, கொள்ளளவு குறைந்துள்ளது.
* மழைநீர் சேகரிப்பு, நீரைப் பயன்படுத்தும் முறையில் விழிப்புணர்வு போன்றவைகளில் அரசின் அக்கறையின்மை. அரசும் தொலைநோக்குப் பார்வையோடு திட்டங்களை செயல்படுத்தவில்லை. (உ.ம்) சென்னை நகருள் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க ஏற்படுத்தப்பட்ட வீராணம், கிருஷ்ணா திட்டாம் படுதோல்வியடைந்தது. தற்போது புதிய வீராணம் திட்டம் பற்றி பேசப்படுகிறது.
* புதிதாக தோன்றியுள்ள குடிநீர் வியாபாரம். இதில் பன்னாட்டு கம்பெனிகள் (பெப்ஸி, கோகோ கோலா, நெஸ்லே) நுழைதல். இவற்றை முறைப்படுத்த அரசிடம் திட்டங்கள் இல்லை.
* தமிழகத்தில் சென்னை, கடலூர் போன்ற பகுதிகளில் கடல்நீர் நிலத்தடி நீரோடு கலக்கிறது. இது மற்ற பகுதிகளுக்கும் தொடரும் நிலை ஏற்படும்.
பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கிய இந்த தண்ணீர் பிரச்சினை எதிர்வரும் காலங்களில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடும்:
* ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கக் கூடும். மேலும் இதனால் விவசாய உற்பத்தியில் பாதிப்புக்கள் கடுமையாகும்.
* தமிழகத்தின் பல பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
* நிலம், நீர் மாசுபட்ட பகுதிகளில் வாழும் மக்கள் கடும் நோய்களால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. தற்போதே அதன் அறிகுறிகள் உள்ளன.
* கால்நடைகள் மற்றும் இயற்கை வளங்கள் அழியும் வாய்ப்புகள்அதிகம்.
* விவசாய உற்பத்தி குறைந்து போதல்.
இந்த நெருக்கடிகளை எதிர்த்து அவைகளை முறியடிக்க விவசாய மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் போன்ற வெகுஜன இயக்கங்கள் முன்வர வேண்டும்.
* நீர் மற்றும் நீர் மேலாண்மை (விவசாயம்) மற்றும் குடிநீர் பிரச்சினை போன்றவைகளில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துல்.
* தொலைநோக்குப் பார்வைகளோடு திட்டங்களைத் தீட்ட அரசை அரசு இயந்திரங்களையும் வலியுறுத்துதல்.
* தொழில்வளம், வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர்கள் நிலை இவைகள் பாதிக்கப்படாமல், நிலம் மற்றும் நீர் மாசுபடுவதைத் தடுத்தல் மற்றும், மாசுபடுவதைத் தடுக்க அரசை நிர்ப்பந்தித்தல்.
* கிராமப்பகுதிகள் தோறும், கசிவு நீர் குட்டைகள் அமைத்தல். ஏரிகள் மற்றும் நீராதாரங்களை தூரெடுக்க அரசிடம் வற்புறுத்தல் போன்றவைகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துல்.
* நதி நீர் தாவாக்கள் பற்றிய நடவடிக்கைகளை இடைவிடாது மக்களிடமும், மத்திய மாநில அரசுகளிடமும் கொண்டு செல்லுதல். இதேபோல் மணல் கொள்ளை போன்றவைகளைத் தடுக்கவும், அரசினை நிர்ப்பந்தித்தல்
- கடல் அரசனின் கட்டளை!
- உயிர்ப்பு
- ஓடிவா மகளே!
- மழை
- காத்திருக்கிறேன் அம்மாவிற்காக
- மேலாண்மை (management) பற்றிய முதல் பாடம்
- தப்பும் வழி
- எளிமையும் பெருமையும் (எனக்குப் பிடித்த கதைகள் – 44 – நதேனியேல் ஹாதர்ணின் ‘கல்முகம் ‘)
- பிறவழிப் பாதைகள் (சொல்புதிது, புனைகளம், தீம்தரிகிட, காலச்சுவடு, சிறுபத்திரிக்கை இயக்கம்)
- மனம் என்னும் விசித்திரப்புதிர் (ஒரு தலித்திடமிருந்து-ஆங்கிலத்தில் வசந்த் மூன், தமிழில்: வெ.கோவிந்தசாமி, புத்தக திறனாய்வு)
- பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] (1889-1953)
- அறிவியல் துளிகள்-9
- நன்றி
- காதல்..
- ஒரு நாள் = 40 மணி நேரம்.
- அனுபவம்
- பாம்பு பற்றிய பயங்கள்.
- பறவையும் பெரு முட்டையும்!
- எல்லைகளைப் போடாதீர்!
- பூவின் முகவரி
- என்னென்ன செய்யலாம் ?
- இந்த வாரம் இப்படி (ஜனவரி 19, 2003) (சாலமன் பாப்பையா, மணிரத்னம், கருகும் விவசாயிகள், ஜெயா-மோடி, புர்கா கொலைகள், கிரிஸ்தவ பிரச்சார
- அன்புள்ள கலைஞர் அவர்களுக்கு
- பிறவழிப் பாதைகள் (சொல்புதிது, புனைகளம், தீம்தரிகிட, காலச்சுவடு, சிறுபத்திரிக்கை இயக்கம்)
- கழிப்பறைகளும் விழிப்புணர்வும்
- ஸ்வாமி விவேகானந்தர், பாபா சாகேப் அம்பேத்கர் : சமுதாய கருத்துகள்
- தமிழகமும் தண்ணீர் நெருக்கடியும்
- கடிதங்கள்
- திரைக்கடலோடியும் –