தப்பித்தலின் கணங்கள் -லியோ டால்ஸ்டாயின் அன்னா காினீனா குறித்து

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

எச். பீர் முஹம்மது


வாழ்வின் நீண்ட பயணங்கள் முடிவுறும் போது தப்பித்தலின் கணம் ஆரம்பமாகி விடுகிறது. சுய இன்பமும், தற்கொலையும் இந்த தப்பித்தலுக்கான கணங்களே. வாழ்க்கை குறுக்கீடுகளாலும், சுழிவுகளாலும் ஆனது. அம்மாதிாியான கோடுகளை தாண்டுவது ஒருவனின் சாகசமாகிறது. ஒரு விதத்தில் கடலின் அலைகளை தாண்டுவது மாதிாி இம்மாதிாியான தாண்டுதல்களின் கோர்வைகளாக, அதன் கோர்ப்பை கதை வெளிக்குள் கொண்டு வந்திருக்கிறார் டால்ஸ்டாய். அன்னா காினீனா நாவல் முழுவதும் உறவுகளின் தாண்டல்களாகவே இருக்கிறது. ஸ்டாவா என்கிற ஒரு இளைஞூனின் மனைவி டாலி. இவர்களின் வாழ்க்கை ஆரம்பங்களின் குதூகலமாக இருந்து இறுதியில் ஒருவித வர்க்க போராட்டமாகவே மாறி விடுகிறது. விளைவாக இருவரும் பிாிந்து தனித்து வாழ்கின்றனர். இதில் ஸ்டாவாவின் சகோதாியான அன்னாவை மையமாக வைத்தே இந்நாவல் நகர்கிறது. அன்னாவின் கணவர் அலெக்ஸி. இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள குடும்ப உறவு சீரானதாக இருந்து சீரழிவு நிலையை நோக்கி செல்கிறது. அன்னாவின் சகோதரனின் நண்பர் விரான்ஸ்கி. இவரை காதலிக்கிறாள் அன்னா. அலெக்ஸியுடன் குடும்ப உறவு இருந்து கொண்டே இணையாக விரான்ஸ்கியை மோகிக்கிறார். அவாின் மீதான பாிவிரக்கம் இயல்பாகவே வந்து விடுகிறது. இந்த இணைகர வாழ்க்கை அலெக்ஸிக்கு நெருடலாக இருக்கிறது. எல்லா காலங்களிலும் மனிதனின் இணைகர உறவு சாத்தியமானதாக இருந்ததில்லை. சில நேரங்களில் சாத்தியபாடுகளின் மீறலாக இருந்திருக்கிறது. அம்மாதிாியான நகர்தலோடு சென்ற அன்னாவின் வாழ்க்கை கணவர் அலெக்ஸியை விவாகரத்து செய்யும் சூழலுக்கு கொண்டு போய் நிறுத்தியது. அதிகாரத்தில் உயர்ந்த பதவயில் இருந்த அலெக்ஸிக்கு அன்னாவின் இந்த முடிவு மனத்தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. விரான்ஸ்கியின் மீதான மோகமே அவள் மீது மிதந்தது. இதற்கிடையே பிாிந்து சென்ற டாலி மீண்டும் சமரசம் செய்து கொண்டு கணவர் ஸ்டாவாவுடன் இணைகிறாள். மனைவி தன் மீது விரக்தியுற்ற போதும் வெறுப்புறாத அலெக்ஸியின் மனத்தை அவரால் கூட வெற்றி கொள்ள முடியவில்லை. அன்னா விரான்ஸ்கி மீது மோகம் கொள்ள, கொள்ள விரான்ஸ்கியால் அதனை பதிலீடு செய்ய முடியவில்லை. எதிர்மறையாகவே விரான்ஸ்கி நடந்து கொண்டார். பால்ய கால கனவுகள் நிரம்பிய மனத்தோடு இருந்த விரான்ஸ்கியின் நகர்தல் அன்னாவை கொண்டு ஏற்பட்ட இடைவெளியை இட்டு நிரப்ப முடியாமல் இருந்தது. இம்மாதிாியான சூழலில் தான் அன்னாவின் வாழ்க்கை நகர்வு அதன் இயல்பான வேகத்துக்கு முன்பாக செல்ல முடியாமல் பின்னுக்கு நகர்ந்தது. புறவயச் சூழலின் அழுத்தம் அன்னாவை தப்பித்தலுக்குள் கொண்டு சென்றது. தன்னையே மா;பித்தல்களும் இம்மாதிாியே கொண்டு போய் விடுகின்றன. குடும்ப வாழ்க்கையின் இயல்புகள் அதன் நெடி, வீச்சு இவற்றோடு நகரும் இந்நாவல் நம்மை விறுவிறுப்பான காதல் கதைக்குள் கொண்டு போய் விடுகிறது. கதை வெளி முழுவதும் குடும்ப வாழ்க்கையின் விதியொழுங்கு வலியுறுத்தப்படுகிறது. மரபு ாீதியான ஒழுங்கு முறைக்குள் செல்லும் குடும்பத்தின் உறவு கோடுகள் விலகி செல்கின்றன.

லியோடால்ஸ்டாய் சோவியத் ரஷ்யாவின் முன்னணி படைப்பாளி. இவாின் போரும் அமைதியும், கஸாக்குகள் மற்ற குறிப்பிட்ட நாவல்கள். மரபான பாட்டாளி வர்க்க பிரதிபலிப்பை இவருடைய படைப்புகள் வெளிப்படுத்தாத காரணத்தால் ஸ்டாலின் காலத்தில் இவர் புறக்கணிப்பதற்கும், அவதூறுகளுக்கும் உள்ளானார். கோர்ப்பசேவ் காலத்தில் தான் இவாின் படைப்புகள் பிற மொழிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டது. குடும்ப உறவுகளின் தர்க்கமாக விாியும் அன்னா காினீனா தப்பித்தலின் கணங்களை பிரதிபலிப்பதாக இருக்கிறது.

peer13@asean-mail.com

Series Navigation