தண்ணீர் : பொலிவியாவில் எதிர்ப்புகள்

This entry is part [part not set] of 35 in the series 20021124_Issue

மாட் பார்லோ / டோனி க்ளார்க்


1998-ல் உலக வங்கி பொலிவிய அரசுக்குத் தெரிவித்தது : கொச்சகம்பா என்ற நகரின் தண்ணீர் வினியோகம் தனியார் கைகளில் சென்றால் தான் 25 மில்லியன் டாலர் கடன் கிடைக்கும். பெக்டெல் என்ற அமெரிக்கக் கம்பெனிக்கு பொலிவியா ஒப்பந்தம் அளித்தது. உடனே கம்பெனி தண்ணீரின் விலையை இரண்டு மடங்காக்கி விட்டது. பொலிவிய மக்களுக்கு இதன் விளைவு : உணவை விடவும் தண்ணீரின் செலவு அதிகம். இந்த தனியார் மயமாதலை எதிர்த்து ஆஸ்கார் ஒலிவேரா என்ற தொழிலாளி தலைமையில் மக்கள் அணி திரண்டனர், ‘தண்ணீர் மற்றும் வாழ்க்கைப் பாதுகாப்பு இயக்கம் ‘ பிறந்தது.

2000-ம் ஆண்டு தொடக்கத்தில் கொச்சகம்பாவிற்கு பேரணியாய்த் திரண்டு சென்றனர். பொது வேலை நிறுத்தமும், போக்குவரத்து நிறுத்தமும் நகரை ஸ்தம்பிக்கச் செய்தது. பெருவாரியாய் மக்கள் கைது செய்யப் பட்டனர். வன்முறை ஏவப்பட்டது. சிலர் இறக்கவும் நேர்ந்தது. பெக்டெல் கம்பெனி பொலிவியாவை விட்டு ஓடியது. தண்ணீர் வினியோகத்தை எடுத்து நடத்த யாருமில்லாத நிலையில், இந்த மறுப்பு இயக்கத்தின் தலைவர்களே ஒரு கம்பெனியைத் தொடங்கினர். நகரின் மிக ஏழைப்பட்ட பகுதிகளுக்கு நீர் வழங்குவது அவர்களுடைய முதல் வேலையாய் இருந்தது. பெக்டெல் கம்பெனி உலக வங்கியிடம் முறையிட்டுள்ளது. பொலிவியா 25 மில்லியன் டாலர் தரவேண்டுமென்று வழக்குத் தொடர்ந்துள்ளது.

************

Series Navigation

மாட் பார்லோ / டோனி க்ளார்க்

மாட் பார்லோ / டோனி க்ளார்க்