தண்ணீர் தண்ணீர்

This entry is part [part not set] of 14 in the series 20010129_Issue

ஸயன்டிஃபிக் அமெரிக்கன் சமீபத்திய இதழின் இந்தக் கட்டுரை தமிழ்நாட்டுக்குத் தகுந்தாற்போல மாற்றப்பட்டிருக்கிறது

அணுகல் :1 : புதிய நீர் உற்பத்திகளைத் தேடுதல்

கடல்நீரிலிருந்து குடிதண்ணீர் எடுக்கும் பழங்காலத்திய முறை இன்று நவீனப்படுத்தப்பட்டு வருகிறது

அணுகல் :2 : புதிய நீர் வினியோக முறைகள்

பிளாஸ்டிக் பைகளில் தனி நபர்களுக்கு நீர் வினியோகம் தமிழ்நாட்டு பஸ் நிலையங்களில் நடக்கிறது. இதே போல, இந்திய ஆறுகள் கடலில் கலக்குமிடங்களில் குடி தண்ணீர் எடுக்கப்பட்டு லாரிகள், ரயில்களில் பெரிய பிளாஸ்டிக் பைகளில் அனுப்பி லாரிகள் ரயில்கள் செல்லுமிடங்களில் அதிக விலைக்கு விற்கப்படலாம்.

அணுகல் 3. தேவையை குறைத்தல்

வீணடிக்காமல் இருந்தால் தேவையும் குறையும்.

அணுகல் 4. மறு உபயோகம்

உபயோகப்படுத்தப்பட்ட நீரை சுத்தம் செய்து மறு உபயோகம் செய்வது நீர் பற்றாக்குறையை குறைக்கும்

நீர் சூழ்ந்த பூமியில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது முரண்தொடையாகத் தெரியும். ஆனால் இன்று உலகத்தில் இது உண்மை. 97 சதவீத பூமியின் தண்ணீர் உப்பாக கரித்து மனித தாகத்தையோ, அல்லது பயிர்களின் தாகத்தையோ தணிக்க இயலாமல் இருக்கும் பூமியில் ஆச்சரியமானதல்ல.

தமிழ்நாட்டில் இருக்கும் நீர்நிலைகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. வீடுகள் கட்டவும், குப்பங்கள் கட்டவும் ஏரிக்கரைகளும் ஏரிக்குள்ளும் குடிசைகள் கட்டவும் ஏழைகளாலும், பணக்கார கட்டட காண்ட்ராக்டர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது ஆபத்தானது என்பதை திடார் வெள்ளம் வரும்போது பார்க்கலாம். அப்போது இந்த ஏரியின் கரைகள் அங்கு வாழும் மக்களால் உடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது.

இவ்வாறு இருந்த இயற்கை நீர் நிலைகள், ஏரிகள் மீண்டும் காப்பாற்றப்பட வேண்டும். அங்கு குடியேறியிருக்கிற மக்களுக்கு பணம் கொடுத்தாவது அந்த நீர்நிலைகள் காப்பாற்றப்பட்டு ஏரிகள் மீண்டும் தோன்றவேண்டும். அந்த ஏரிகளை ஆழப்படுத்தி அந்த ஏரிகளைச் சுற்றி தோட்டம், பூங்கா போன்றவற்றை அமைப்பதன் மூலம்

தண்ணீர் தட்டுப்பாட்டை தணிக்க மத்தியக்கிழக்கு நாடுகளான அரேபியா, அரபு கூட்டமைப்பு நாடுகள், போன்றவற்றிலும், மத்தியகடல் நாடுகளான இத்தாலி, லிபியா போன்ற நாடுகளிலும் கடல் தண்ணீர் நல்ல தண்ணீராக மாற்றப்பட்டு உபயோகப்பட்டு வருகிறது. தண்ணீர் தேவை மற்ற நாடுகளிலும் அதிகமாக அதிகமாக அமெரிக்கா போன்ற நீர் வளம் மிகுந்த நாடுகளிலும் கடலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

பெரிய கடல்தண்ணீர்லிருந்து உப்பு நீக்கும் தொழிற்சாலைகள் நீர் வளம் மிக்க அமெரிக்காவில் தோன்றிக்கொண்டிருக்கின்றன. நிலத்தடி நீரை அதிகம் உபயோகிக்கக்கூடாது என்று ஃப்ளோரிடா மாநிலத்து தண்ணீர் நிர்வாகிகள், ஒரு நாளைக்கு 1 கோடி லிட்டர் கடல்தண்ணிரிலிருந்து உப்பெடுத்து குடிதண்ணீர் தரும் தொழிற்சாலைகளை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அருகே டெக்ஸாஸ் மாநிலத்து ஹவ்ஸ்டன் மாநகரம் மெக்ஸிகோ வளைகுடாவிலிருந்து தண்ணீர் எடுக்க திட்டமிட்டு வருகிறார்கள்.

பல நூற்றாண்டுகளாக கடல் தண்ணீரிலிருந்து குடிதண்ணீர் எடுக்க ‘ஆவியாதல் ‘ முறையை உபயோகப்படுத்தி வந்திருக்கிறார்கள். உப்புக்கடல் தண்ணீர் பல முறைகள் கொண்டு ( பெரும்பாலும் பெட்ரோல் கொண்டு) சூடாக்கப்படுகிறது. ஆவியாகும் தண்ணீர் குளிரவைக்கப்பட்டு தண்ணீராக வடிக்கப்படுகிறது. குவாய்த் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இருக்கும் விலைகுறைந்த பெட்ரோல் எண்ணெயால் இந்தமுறையில் தண்ணீர் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இந்த முறை பெரும் பணக்கார நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த முறையை இன்னும் விலைகுறைக்க, ஆவியாதல் சமயத்தில் வரும் வெப்பத்தை மறு உபயோகம் செய்கிறார்கள்.

விலை அதிகமாகாத தொழில்நுட்பம் ‘வடிகட்டி மூலம் உப்பு நீக்கும் ‘ முறை (membrane desalination). இதற்காக ஒரு தனி ரகமான வடிகட்டும் பிளாஸ்டிக்குகள் இருக்கின்றன. ஆனால் மேலே தண்ணீரை போட்டதும் கீழே நல்ல தண்ணீர் வந்து விடாது. அதற்கு ஒரு குறிப்பிட்ட அழுத்தம் தேவை. கடல் தண்ணீரை நன்றாக அழுத்தினால் மறு பக்கம் நல்ல தண்ணீர் வரும். இதற்கு Reverse-osmosis என்று சொல்வார்கள். ஆனால் இதன் மூலம் வரும் தண்ணீர் நூற்றுக்கு நூறு சுத்தமானது. (சாதாரணமாக நாம் எந்த தண்ணீரைப் பெற்றாலும் அதில் ஆயிரத்தில் ஒரு பங்காவது தண்ணீர் அல்லாத வேறு பொருட்கள் இருக்கும்)

இதில் முன்பு உபயோகப்பட்ட வடிகட்டிகள் அவ்வளவு சிறப்பானவை அல்ல. விலையும் அதிகம். முன்பு இந்த வடிகட்டிகள் சுமார் 3 வருடம் தாக்குப்பிடித்தாலே ஆச்சரியம். நுண் கிருமிகள் நுண்ணிய ஓட்டைகளை அடைத்துவிடும். உப்பு வடிகட்டிகளை கெடுத்துவிடும். கடல்நீரில் இருக்கும் குளோரின் போன்ற வேதிப்பொருள்கள் வடிகட்டிகளை கெட்டியாக்கி நாசமாக்கிவிடும்.

இப்போது சில புதுமாதிரி வடிகட்டிகள் வந்திருக்கின்றன. இவை விலையும் மலிவு அதே நேரம் சுமார் 10 வருடங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்கும்.

இந்த தொழில்நுட்பம் ஒன்றும் அமெரிக்க நிறுவனங்களின் ஏகபோக சொத்தாக இல்லை. இது சம்பந்தமாக எல்லா அறிவியல் புத்தகங்களிலும் ஆராய்ச்சிக்கட்டுரைகள் வந்திருக்கின்றன. இதில் முக்கியமாக பயன்படும் வடிகட்டிகளை குறைந்தவிலைக்கு தர நிறைய அமெரிக்க, இஸ்ராயலிய, ஐரோப்பிய நிறுவனங்கள் தயார். ஆனால் மற்ற பாகங்களையாவது இந்தியாவில் தயாரித்தால் தான் இந்திய முனிசிபாலிட்டிகளுக்கு குறைந்த விலையில் தர முடியும்.

இந்த தொழில்நுட்பத்துக்கு பல முனிசிபாலிட்டிகள் ஆதரவு தெரிவித்தால்தான் இந்த தொழில்நுட்பம் வளர்ந்து நிறையப் பேர் இந்த இயந்திரங்களை விற்க முன்வருவார்கள். அப்போதுதான் இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் சுயமாக முன்னேறும். அப்போது இன்னும் விலை குறையும். அதற்கு திருச்சி, மதுரை, சென்னை போன்ற பணக்கார முனிசிபாலிட்டிகள் பரிசோதனை முறையிலாவது ஆதரவு அளித்தால்தான் அது பெருகி இன்னும் மற்ற முனிசிபாலிட்டிகளுக்குச் செல்லும்.

இந்த உப்பு நீக்கும் இயந்திரங்கள், ஒரு நாளைக்கு சுமார் இருபது முப்பது லிட்டர் குடிநீர் கொடுப்பதிலிருந்து பல கோடி லிட்டர் குடிநீர் வழங்கும் அளவுக்கு தயாரிக்கப்படுகின்றன. இருபது முப்பது லிட்டர் கொடுக்கும் மிகவும் விலை குறைவான இயந்திரங்கள் கடலோரம் வசிக்கும் பல கிராமங்களிலும், அல்லது கிணற்றில் உப்புத்தண்ணீர் வரும் சில இடங்களிலும் குடிநீருக்காகப் பயன்படுத்தப்படலாம். சில கிராமங்களின் பஞ்சாயத்துகள் இதுபோன்ற இயந்திரங்களை வாங்கி கிராமமக்கள் குடிநீருக்காக பொதுவாகப் பயன்படுத்தலாம். கோடிக்கணக்கில் குடிநீர் தரும் இயந்திரங்கள் கடலருகே இருக்கும் நகரங்களில் (சென்னை, கடலூர் போன்ற இடங்களில்) குடிநீருக்காக பயன்படுத்தப்படலாம். இதையே கடலோர அமெரிக்க நகரங்களில் செய்து கொள்ள திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரு சில நிறுவனங்கள், தண்ணீர் தயாரித்துக் கொடுக்க நீண்டகால ஒப்பந்தங்களை செய்து கொள்கின்றன. இன்னும் இருபது வருடத்துக்கு ஒரு லிட்டர் இவ்வளவு விலைக்கு நாங்கள் கட்டாயமாக உங்களுக்குத் தருவோம் இல்லையெனில் நாங்கள் தராத ஒவ்வொரு லிட்டருக்கும் இவ்வளவு ரூபாயென்று முனிசிபாலிட்டிக்கு தந்துவிடுவோம் என்ற முறையில் நீண்டகால ஒப்பந்தங்கள் இரண்டு பக்கத்துக்கும் சாதகமாய் முடியும்.

Top

கேரளா மாநிலத்தில் ஏராளமான அளவு தண்ணீர் கடலில் கலந்தாலும் அவர்கள் அந்த ஆறுகள் தோன்றும் மலைகளிலிருந்து தண்ணீரை தமிழகத்துக்குத் திருப்பி விட தயங்குகிறார்கள். இது நியாயமல்ல என்று தமிழர்களுக்குத் தோன்றினாலும் கேரளர்களைப் பொறுத்தமட்டில் அது நியாயமானதாக இருக்கலாம். தமிழ்நாட்டுக்கு எல்லா நதி நீரும் திருப்பி விடப்பட்டுவிட்டால் கேரளா காய்ந்து போய்விட்டால் என்ன செய்வது என்று அவர்கள் யோசிக்கலாம். தமிழ்நாட்டாரை தமிழர்கள்தானே காப்பாற்றிக்கொள்ள முடியும் ? அதே போல கேரளர்களை கேரளர்கள்தானே காப்பாற்றிக் கொள்ள முடியும் ?

ஆனால் இதற்கு இன்னொரு வழி இருக்கிறது. கேரளாவின் நதி நீர் கடலில் கலக்குமிடத்திலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டால் என்ன பிரச்னை ? கேரள நதி கடலில் கலப்பதற்குப் பதில், அந்தத் தண்ணீர் பெரிய பைகளில் அடைக்கப்பட்டு ராமநாதபுரத்தில் வினியோகம் செய்யப்படலாம். இது நடக்க இயலாத விஷயம் என்று நினைக்காதீர்கள். பெரிய பெரிய பெட்ரோல் கப்பல்களில் தண்ணீர் கொட்டப்பட்டு தண்ணீர் இல்லாத இடங்களில் வினியோகம் செய்கிறார்கள் ஐரோப்பியர்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று சமீபத்தில் ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பையில் தண்ணீரை கொட்டி அதை கடலில் இழுத்துக்கொண்டு போய் இன்னொரு நாட்டில் வினியோகம் செய்தார்கள் டென்மார்க் தேசத்தினர்.

இன்னும் நதி நீர் கடலில் கலக்குமிடத்தில் பைப்புகள் போடப்பட்டு அந்த நீர் வரண்ட பகுதிகள் வரை வரும்படிக்கு பைப்புகளை போட்டு தண்ணீர் விநியோகம் செய்யலாம்.

நியூயார்க் நகரம் ஆடம்பரத்திலும் அலங்காரத்திலும் மிதமிஞ்சியது. ஆனால் தண்ணீர் உபயோகத்தில் அது மிகவும் சிக்கனமானது. ஒழுகும் குழாய்களையும் தண்ணீர் வீணடிப்பையும் தேடித்தேடி கண்டுபிடித்து சரி பண்ணி இப்போது முன்பைவிட கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை மிச்சம் செய்கிறது.

1990இல் நியூயார்க்கில் தண்ணீர் பஞ்சம் வந்தது. ஒவ்வொருவரும் பல்விளக்கும்போதும் முகம் கழுவும்போதும் அந்த பற்றாக்குறை அதிகமானது. ஒவ்வொருவருடமும் நியூயார்க் நகரத்துக்குள் வரும் புதியவர்கள் எங்கும் செல்வதில்லை. சென்னையைப் போல அங்கேயே தங்கிவிடுகிறார்கள். அப்படி நகரத்துக்குள் வரும் ஒவ்வொருவருக்கும் தண்ணீர் கொடுத்தாக வேண்டும். நகரத்துக்கு அதிகப்படி 5 கோடி லிட்டர் தண்ணீர் ஒவ்வொருநாளுக்கும் தேவை. பக்கத்து கேட்ஸ்கில் மலைகளிலிருந்து கொண்டுவரப்படும் தண்ணீரை இன்னும் அதிகப்படுத்தி கொண்டுவர இன்னொரு பம்ப் நிலையம் அமைக்க சுமார் 1 பில்லியன் டாலர் (சுமார் 4500 கோடி ரூபாய்) ஆகும் என்று கணக்கிட்டார்கள். அதற்குப் பதிலாக தண்ணீருக்கான தேவையை குறைக்க முயற்சி செய்தார்கள்.

ஒவ்வொரு தடவையும் பாத்ரூம் சென்றால் ஒரு 25 லிட்டர் தண்ணீரை கொட்டி சுத்தம் செய்யும் பழைய டாய்லெட்டுகளை மாற்ற மானியம் வழங்க உதவி செய்தார்கள். புதிய வகை டாய்லெட்டுகளில் 5 லிட்டர் தண்ணீரே சுத்தம் செய்ய போதுமானதாக அமைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு, 295 மில்லியன் டாலர்(சுமார் 1200 கோடி ரூபாய்) மானியம் கொடுத்து நகரத்தின் மூன்றில் ஒரு பங்கு டாய்லெட்டுகளை மாற்றினார்கள். இதனால் நகரத்தின் தண்ணீர் உபயோகம் சுமார் 30 சதவீதம் குறைந்தது.

வீடுகளிலும் அபார்ட்மெண்ட் கட்டடங்களிலும் தண்ணீர் பரிசோதனையைக் கொண்டுவந்தார்கள். உபயோகப்படுத்தும் தண்ணீருக்கு ஏற்ப நகரத்துக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கட்டாயம் செய்தார்கள். நகரத்தின் எல்லா குழாய்களையும் ஆராய்ந்து எங்கு தண்ணீர் ஒழுகுகிறது எந்த இடத்தில் தண்ணீர் கணக்கு உதைக்கிறது என்று ஆராய்ந்து உண்மையான குழாய் ஓட்டைகளையும், காசு கொடுக்காமல் தண்ணீர் எடுத்த ஊழல் ஓட்டைகளையும் அடைத்தார்கள். குழாய் ஓட்டைகளை அடைத்ததன் மூலம் சுமார் 500 கோடி லிட்டர் தண்ணீரை வீணாகாமல் தடுத்தார்கள்.

சோனார் என்னும் ஒலிமூலம் குழாய்களில் ஓட்டைகளையும் ஒழுகுதலையும் கண்டுபிடிக்கும் இயந்திரங்களையும் வாங்கி ஓட்டைகளைக் கண்டுபிடித்து ஓட்டை அடைக்கும் வேலையை துரிதப்படுத்தினார்கள்.

நகரத்தின் மக்கள்தொகை வேகமாக வளர்ந்து வந்தாலும், நியூயார்க் நகரத்தின் தனிநபர் உபயோகிக்கும் தண்ணீரின் அளவு 1991இல் 600 லிட்டரிலிருந்து, 1999இல் சுமார் 500 லிட்டராக குறைந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒருவர் உபயோகிக்கும் தண்ணீர் அளவு மிகக்குறைவு என்றாலும், தண்ணீர் கொண்டு செல்லும் தண்ணீர் குழாய்கள், தண்ணீர் லாரிகள் போன்றவற்றை நல்ல முறையில் தொடர்ந்து பழுது பார்ப்பதன் மூலம் வீணாகும் தண்ணீர் அளவை குறைக்க முடியும்.

இரண்டாவது, தண்ணீர் குளங்களை சரியாக பழுது பார்ப்பதும், சாக்கடைகளை நல்ல தண்ணீரில் சேர்க்காமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம். உதாரணமாக மாம்பலம் கோவிலுக்கு முன்னால் இருந்த தண்ணீர் குளம் இன்று சாக்கடைக்குளமாக ஆகிவிட்டது. கூவம் இன்று சாக்கடையாக ஓடுகிறது. சாக்கடைகள் சாக்கடைக்கான குழாய்களில் மட்டுமே செல்வதாக செய்தாலே பெரும்பகுதி சுத்தம் வந்துவிடும். அதே போல் கூவத்தில் கலக்கும் சாக்கடைகளை சாக்கடைக்குழாய்களுக்கு திருப்பிவிட சிறிதளவு பணம் செலவழித்தால், ஒன்றும் பண்ணாமலேயே ஒரு வருடத்தில் கூவம் சுத்தமாகிவிடும். அந்த சுத்தமான கூவநதி நல்ல தண்ணீராக பயன்படுத்தக்கூட இயலும்.

அணுகல் 4: மறுஉபயோகம்

நமிபியா போன்ற நாடுகளில் சாக்கடைத் தண்ணீரைக்கூட தூக்கி எறிய முடியாது. அடிக்கும் வெப்பம், மழை கொடுக்கும் அளவை விட அதிக அளவு தண்ணீரை ஆவியாக்கி விடுகிறது. வருட முழுவதும் தண்ணீர் கொடுக்கும் ஆறுகள் கிடையாது. தலைநகரமான விந்தோக் நகரத்தில் தண்ணீரை கொஞ்சம் கூட விரயம் செய்ய இயலாது. கொஞ்சம் இருக்கும் தண்ணீரையும் அவர்கள் சுத்தப்படுத்தி மறு உபயோகம் செய்து கொள்ளவேண்டிய கட்டாயம்.

30 வருடத்தில் நகரத்தின் மக்கள் தொகை 61000இத்திலிருந்து 230000க்கு அதிகமான போது, அதாவது 1960இலேயே, நிலத்தடி நீர் முழுவதுமாக காலியாகி விட்டது. பக்கத்தில் ஒகோவங்கோ ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்றால் 400 மைலுக்கு குழாய் போடவேண்டும். (ஆறு அவ்வளவு தொலைவு) ஆகவே விலை அதிகம். எனவே மீண்டும் உபயோகிக்கப்பட்ட தண்ணீரையே மீண்டும் உபயோகம் செய்யும் அளவுக்குச் சுத்தப்படுத்தி நகரத்துக்கு கொடுப்பது என்று நகர நிர்வாகிகள் தீர்மானித்தார்கள்.

வருடத்துக்கு சுமார் 1700 கோடி லிட்டர் தண்ணீரை சுத்தப்படுத்தி மீண்டும் நகரத்துக்கு கொடுக்க ஒரு தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை 1968இல் கட்டினார்கள். நகரத்தின் 23 சதவீத தேவையை இது தீர்த்திருக்கும். இதை 50சதவீதமாக உயர்த்த தண்ணீர் நிர்வாகிகள் இப்போது முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த தண்ணீரை குடிக்கும் தரத்துக்கு உயர்த்த அவர்கள் மிகவும் கடினமான சுத்தப்படுத்தும் வேலையை மேற்கொண்டார்கள். கடினப்பொருட்கள் முதலில் நீக்கப்பட்டு, பின்னர் பாக்டிரீயா போன்ற உயிரினங்கள் நீக்கப்பட்டு, பின்னர் அம்மோனியா, கரி, போன்ற வேதிப்பொருட்கள் நீக்கப்பட்டு கரைந்திருக்கும் உயிர்ப்பொருட்கள் நீக்கப்பட்டன. இறுதியில் குளோரின், சுண்ணாம்பு போன்றவை சேர்க்கப்பட்டு தண்ணீர் சுத்தம் செய்யப்படுகிறது. வாரம் ஒரு தடவை தண்ணீர் பரிசோதிக்கப்படுகிறது. நகரத்தில் கிடைக்கும் குடிதண்ணீரை ஒப்பிடும்போது, இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மிக மிகச் சுத்தமானது.

இருந்தாலும், நகர மக்கள் இந்த தண்ணீரை குடிக்க உபயோகப்படுத்த மறுக்கிறார்கள்.( ஞாயந்தானே. நாம் குடிப்போமா ? ஆனால் யோசித்துப் பார்த்தால் எல்லா தண்ணீரும் முன்பு உபயோகப்படுத்தப்பட்ட தண்ணீர்தானே ? ) எனவே இந்த தண்ணீரை தோட்டங்களுக்கும் பூங்காக்களுக்கும் உபயோகப்படுத்துகிறார்கள். சென்றவருடம் தண்ணீர் பஞ்சம் வந்த போது இந்தத் தண்ணீரை நகர மக்கள் குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த நிலை நமக்கு வருவதற்கு முன்னர் பேசாமல், நாம் நீர்நிலைகளையும், ஏரிகளையும் காப்பாற்றிக்கொண்டு, தண்ணீரை சேமிக்கக் கற்றுக்கொண்டு, தண்ணீருக்காக புதிய உற்பத்திகளான கடல் தண்ணீரிலிருந்து தண்ணீர் உற்பத்திச் செய்யும் முறைகளை உபயோகப்படுத்திக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.

Series Navigation