தண்ணீர் இனவெறி

This entry is part [part not set] of 35 in the series 20021124_Issue

மாட் பார்லோ / டோனி க்ளார்க்


உலகில் தென் ஆப்பிரிக்கா நாடு ஒன்றில் தான் சட்ட அமைப்பிலேயே தண்ணீர் அடிப்ப்டை உரிமை என வரையப் பட்டுள்ளது. ஜோகன்ச்பர்க், டர்பன் நகரங்கள் தண்ணீர் உரிமைக்கான போராட்டத்தில் முன்னணியில் உள்ளன. உலக வங்கியின் சொல்லுக்கிணங்கி, தண்ணீர் தருவதற்கான விலையையும் சிறிது லாபத்தையும் மக்களிடமிருந்து பெற வேண்டும் என்று நிபந்தனையைச் செயல் படுத்த முனைந்தது தென் ஆப்பிரிக்கா. இதனால் ஒரு கோடிப் பேர் தண்ணீர் இல்லாமல் அவதிப் படுகிறார்கள். இன வெறி நாட்களில் கூட இபப்டி நடந்ததில்லை. க்வாசுலு- நாடால் பகுதியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்கள் சமீபத்தில் காலராவினால் அவதியுற்றார்கள். காரணம் இவர்களின் தண்ணீர் வினியோகம் ரத்து செய்யப் பட்டது.

இந்த நாட்டின் சச்சரவின் விதைகள் தண்ணீர்ப் பிரசினையில் உள்ளன. இங்கெ பெண்கள் வெகுதூரம் நடந்து தண்ணீர் கொண்டு வரவேண்டியுள்ளது. தண்ணீர் பிரசினையே அரசியல் பிரசினை இங்கே. ஆறு லட்சம் வெள்ளை விவசாயிகள் பாசனத்திற்கான தண்ணீரில் 60 சதவீதத்தை உபயோகிக்கிறார்கள். ஒன்றரைக் கோடி கறுப்பர்களுக்கு குடிநீர் பற்றாக்குறை உள்ளது. தொழிற்சங்கங்கள் நகரின் சமூகப் பணியாளர்களுடன் இணைந்து , பிடுங்கப்பட்ட தண்ணீர்க் குழாய்களை மீண்டும் பொருத்துவதிலும், தண்ணீர் மீட்டர்களை உடைத்து எறிவதிலும் ஈடுபட்டு தம் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். வெளிநாட்டுக் கம்பெனிகளுடன் கைகோர்த்துக் கொண்டு அரசாங்கங்கள் செயல்படும்போது மக்கள் எதிர்த்துப் போரிடத் தயாராய் இருக்கிறார்கள்.

****

Series Navigation