ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தனுக்கு நடந்த பாராட்டு விழாவின் வீடியோ

This entry is part [part not set] of 28 in the series 20050526_Issue

பி.கே. சிவகுமார்


ஏப்ரல் 28, 2005 (வியாழன்) அன்று மாலை ஜெயகாந்தனின் பதிப்பாளர்கள் ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தனுக்கு ஒரு பாராட்டு விழாவைச் சென்னையில் நடத்தினார்கள். ராணி சீதை மன்றத்தில் இவ்விழா நடைபெற்றது. அரங்கம் நிரம்பி, நின்று கொண்டு விழாவை ரசித்தவர்கள் நிறைய பேர். கவிதா, ஸ்ரீசெண்பகா, வர்த்தமானன் பதிப்பகங்களும் ஜெயகாந்தனின் நண்பர் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனும் முன்நின்று நடத்திய விழா இது. விழாவுக்குச் சிற்பி பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஸ்ரீ செண்பகா பதிப்பகம் சண்முகம், கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம், விஜயா பதிப்பகம் வேலாயுதம், வர்த்தமானன் பதிப்பகம் பேராசிரியர் ஜெ. ஸ்ரீ சந்திரன், மீனாட்சி பதிப்பக உரிமையாளர், விஜயா பதிப்பகம் வேலாயுதம், இயக்குனர் பாலசந்தர், டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன், சி.பி.ஐ.யின் ஏ.எம்.ே காபு (தா.பாண்டியன் கலந்து கொள்ள இயலாததால் அவருக்குப் பதில் கலந்துகொண்டு பேசினார்.), இளையராஜா உள்ளிட்டப் பலர் பேசினார்கள். முடிவாக ஜெயகாந்தன் ஏற்புரை நிகழ்த்தினார். அந்தக் கூட்டத்தின் பேச்சுகளை ஒளிவடிவில் பின்வரும் சுட்டிகளில் காணலாம்.

விழா தொடங்குவதற்கு முன்

ஸ்ரீசெண்பகா பதிப்பகம் சண்முகம் அவர்களின் வரவேற்புரையும் சிற்பி அவர்களின் தலைமையுரையும்

வர்த்தமானன் பதிப்பக உரிமையாளர் பேராசிரியர் ஜெ.ஸ்ரீ சந்திரன் மற்றும் மீனாட்சி பதிப்பக உரிமையாளர் உரை

விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் உரையும் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் உரையும்

ஜனசக்தியின் ஆசிரியரும் சி.பி.ஐ.யின் மூத்த தலைவருமான ஏ.எம். கோபுவின் உரை

இயக்குநர் கே.பாலசந்தரின் உரை

இளையராஜாவின் பேச்சு

ஜெயகாந்தன் ஏற்புரை – சுமாரான தரமுள்ள வீடியோ (15.9 MB)

இவ்விழா ஜெயகாந்தனின் பதிப்பாளர்களும் நண்பர்களும் நடத்தியது. அப்பதிப்பகங்களில் பலவற்றுக்கு AnyIndian.com இணையத்தில் முன்னுரிமை பெற்ற விற்பனையாளராக இருக்கிறது. எனவே, அப்பதிப்பகங்களில் ஒப்புதலுடன் இந்த ஒளிப்பதிவை இணைய வடிவில் AnyIndian.com வழங்குகிறது. எனவே, இப்பேச்சுகளின் ஒளி மற்றும் ஒலி வடிவங்களை முழுமையாகவோ பகுதியாகவோ பயன்படுத்திக் கொள்ள விரும்புகிற அன்பர்கள் கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம் அவர்களிடமோ, AnyIndian.com இடமோ முன்அனுமதி பெற்ற பின்னரே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்பேச்சுகளின் வீடியோவைக் கொடுத்து உதவிய விழா நிர்வாகிகளுக்கும் குறிப்பாக கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். இப்பேச்சுகளின் வீடியோவை உலகெங்கும் வாழ்கிற தமிழர்கள் பார்த்தும் கேட்டும் மகிழும் பொருட்டு, தங்கள் தளத்தில் வலையேற்றுவதற்கான இடம் கொடுத்து வலையேற்றுகிற முயற்சிகளையும் எடுத்த AnyIndian.com-ன் மேலாண்மைக் குழுவுக்கு ஜெயகாந்தனின் வாசகனாக என் நன்றிகள்.

pksivakumar@yahoo.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்