ஜென் கதை ஒன்று

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

அவதானி கஜன்


( தமிழில் கதையாகத் தந்த ஐயப்பனுக்கு நன்றி )

மொத்தத்தில் யென்நிலை மூடனாய் என்நாளும்
அத்துமீறும் செய்கைகள் ஆத்திரப் பட்டுவிட்டு
சித்தம் குழைந்து செயலிலும் சொல்லிலும்
எத்தனை பேரை எதிரியாய் ஆக்கினேன்
உத்தமம் இற்று ஊரைப் பழித்து நான்
கத்தித் திரிய கதிகலங்கி நாடினேன்
முத்தியுடை நல்ல முனிவரை ; ஆணிகள்
கொத்தும் பலகையும் கூடக் கொடுத்து
புத்தி கெடுக புதையொரு ஆணியென ;
வித்திட்ட நேரமதில் வேகாத பிழைக்கு
உத்தர வாதமில்லா உன்செயல் என்றாலே
குத்திட்ட ஆணி குழையச் செய்துவிடு.
பத்துத் தினங்கள் பார்த்திடு மூன்றுமுறை
அத்தினம் நோக்கையில் அண்மியென்றார் சாமியவர்
அத்தினமே வந்திடவே அங்கே துறவியிடம்
நித்தம் சினந்தான் நிகழ்விலே மட்டமாய்
செத்திருக்கு ; என்பிழையே தீர்வாகப் பிடுங்கிய
அத்தனை ஆணிகளும் பாருங்கள் என்றிடவும்
ஒத்துவரா ஓட்டதில் ஓட்டைகளால் காயங்களும்
பொத்துகளும் இல்லாத பொருளாய் தாவென்றார்
தத்துவம் உரைக்கும் சாது

avathanikajan@yahoo.ca

Series Navigation