சொல்லாடலும், பிலிம் காட்டுவதும்

author
1 minute, 22 seconds Read
This entry is part [part not set] of 36 in the series 20030815_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


பொதுவாக கலைச்சொற்களைப் பயன்படுத்துபவர்கள்,கோட்பாடு ரீதியான கட்டுரைகள் எழுதுபவர்கள் தாங்கள் எழுதும் கட்டுரையில் தங்கள் கருத்துக்களை தெளிவாக வாசகர் புரிந்துகொள்ளும் வண்ணம் விரிவான விளக்கங்கள், குறிப்புகள் தருவதுண்டு.தங்கள் நிலைப்பாடு/ஆய்வின் வரையரைகளையும் குறிப்பிடுவதுண்டு .(1)இது போன்ற பல கட்டுரைகளை நான் சுட்டிக்காட்ட முடியும்.தமிழில் பிரதி என்பதை text என்ற பொருளில் பயன்படுத்துகிறேன் என்று குறிப்பிட்டால் போதும், தேவையான குறிப்புகள் கொடுத்தால் போதும்.discourse, narrative போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.ஆனால் கட்டுரை/நூற்களில் எந்த context ல் அவைப் பயன்படுத்தப்படுகின்றன என்பது தெளிவாகவே குறிப்பிடப்படும். தான் எழுதும் நூலில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்கள்,அவற்றின் பிண்ணணி,தான் அவற்றை எந்தப் பொருளில் கையாளுகிறேன் என்பதை தெளிவாக எழுதியுள்ள நூலாசிரியர்கள், நூற்களை நான் குறிப்பிடமுடியும்.

இப்போது நான் படித்துக் கொண்டிருக்கும் ஒரு நூலில், சூசன் செல் என்பவர் எழுதியது, சூசன் agent,structure,institutions போன்ற சொற்களை பயன்படுத்துகிறார்(2). அவர் முன்வைக்கும் கோட்பாடுகளின் அடிப்படைகளை, அவை பயன்படுத்தப்படும் துறையில் என்ன பொருளில் கையாளப்படுகின்றன என்பதையும் விளக்குகிறார்.agent என்ற சொல் Law&Economics குறித்த நூல்களிலும் கையாளப்படுகிறது. இவற்றைப் படிக்கும் போது குழப்பம் வருவதில்லை.ஏனெனில் படிப்பவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளும் வண்ணம் அவை விளக்கப்படுகின்றன. அறிவுசார் சொத்துரிமைகள்,சர்வதேச அரசியல் பொருளாதாரம், இணையம் குறித்த ஆய்வுகள்,சூழல் பிரச்சினைகள்,வரலாறு,தத்துவம், அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகள் (science and technology studies) எனப் பலதுறை நூல்களை,கட்டுரைகளை படித்துவரும் எனக்கு கலைச்சொற்கள் எப்படி கையாளப்படுகின்றன என்பதும் தெரியும்,எப்படி கையாளப்படவேண்டும் என்பதும் தெரியும்.இலக்கிய விமர்சனத்திலும் இது போல்தான்.வெறும் வார்த்தைகளால் விபரமறிந்தவர்கள் கட்டுரைகளை நிரப்புவதில்லை.மாறாக தாங்கள் கூற வந்ததை தெளிவாக சான்றுகள்,அடிக்குறிப்புகள்,மேற்கோள்கள் போன்றவற்றைக் கொண்டு விளக்குவார்கள்.ஜெயமோகன் கட்டுரைகளில் அப்படி ஏதும் இல்லை.

உதாரணமாக நனவிலி என்பதைப் பற்றி எழுதும் போது லகானிய கண்ணோட்டத்தில் அதை பயன்படுத்துகிறோமா என்பதை தெளிவாக குறிப்பிடுவது வழக்கம். ஏனெனில் நனவிலி குறித்து வேறு பலரும் எழுதியிருப்பதாலும், நனவிலி என்பது குறித்த பிறர் எழுத்துக்கள்/விவாதங்கள் பொருத்தமாவை என்றால் அவையும் குறிப்பிடப்படும்.உதாரணம் தேவை எனில் தருகிறேன்.இன்று ஒரு தீவிர வாசகன்/விமர்சகன் நனவிலி என்றால் அது குறித்த விவாதப்பிண்ணணியை ஒரளவேனும் அறிந்திருப்பது தேவையாகிறது.ஜாக்குலின் ரோசின் எழுத்துகளில் உளப்பகுப்பாய்வு கோட்பாடுகளை சிறப்பாகப் பயன்படுத்தியிருப்பார். தற்போது நான் படித்துவரும் அவரது நூல் இதற்கு ஒர் நல்ல உதாரணம்.(3).பின் லகானிய கோட்பாட்டாளர்களான கட்டாரி,டெலுஸ்,zizek உளப்பக்குப்பாய்வியல்,அரசியல்,பண்பாடு குறித்து எழுதியுள்ளனர். எனவே இன்று நான் நனவிலி என்பதை எந்தப் பொருளும் தரும் வண்ணம் எழுத முடியாது. மாறாக பிராய்டிய உளப்பகுப்பாய்வில் துவங்கி இன்று வரை நனவிலி குறித்த கோட்பாட்டு புரிதல்களை கணக்கில் கொள்ள வேண்டும்.பிரதி வாசிப்பின் போதும் இது அவசியம். ஜெயமோகன் இந்த அடிப்படையை உள்வாங்க்கிக் கொள்ள மறுக்கிறார். சொல்லின் இறுதிப்பொருள் பற்றியதல்ல பிரச்ச்னை, பிரச்சினை சொல் பயன்படுத்தப்படும் context பற்றியது. context என்று வரும் போது சான்றுகள்,ஆதாரங்கள் தவிர்க்க முடியாதவை.பிரதியைப் பொருள் கொள்ள இவை உதவும். மேலும் இன்று grand narratives, grand theories குறித்து ஏராளமான விமர்சனங்கள் உள்ளன. எழுத்தாளன் – சமூகம்-படைப்பு-ஆழ்மனம் குறித்து ஒருவர் பெரும்

கோட்பாட்டை முன்வைத்தால் அதை கேள்விக்குட்படுத்தாமல் எப்படி ஏற்கமுடியும். நீங்கள் வைத்துள்ள கோட்பாடு சுஜாதா, மகாஸ்வேதா தேவிக்கு பொருந்துமா என்று கேள்வி கேட்பது எப்படி தவறாக முடியும். ஒருவர் கருதுகோள் (hypothesis) ஒன்றை முன்வைக்கலாம், அதை ஒட்டி விவாதம் நடைபெறலாம். கருதுகோள் என்பது ஆய்விற்கும், பின் மாறுதலுக்கும் உட்பட வாய்ப்புண்டு.ஆனால் ஜெயமோகன் முன்வைப்பவை கருதுகோள்கள் அல்ல, assertions, grand claims.எனவே அவை கறாரான ஆய்விற்கும், விமர்சனத்திற்கும் உட்படுத்தப்படவேண்டியவை. எழுத்தாளனை சாமியடியுடன் ஒப்பிட்டு அவர் எழுதியுள்ளார்.வேறொரிடத்தில் எழுத்தாளின் ego பற்றி பேசியுள்ளார்.(காண்க கணையாழி ஜுலை 2003 ). அவர் எழுத்தாளன் குறித்து எழுதியுள்ளவற்றை தொகுத்தால் அவர் எந்த அளவு குழப்புகிறார் என்பது புரியும்.

நானறிந்தவரை யாரும் ஜெயமோகன் போல் அகவய உருவகம் என்று தன் இயலாமையை மறைப்பத்தில்லை. நனவிலி,ஆழ்மனம் என்று அர்த்தமில்லாமல்,context இல்லாமல் வாக்கியங்களை எழுதுவதில்லை.தமிழில் நாகார்ஜுனன்,பெருந்தேவி,தமிழவன்,எம்.டி.முத்துக்குமாரசாமி உட்பட பலரின் எழுத்துக்கள் கோட்பாட்டுப்பிண்ணணியை தெளிவாகக்குறிப்பிடுவவை.மொழிபெய்ரப்பு கட்டுரைகளிலும் வாசகர்களுக்கு தெளிவான குறிப்புகளை தருபவர்கள் எஸ்.வி.ராஜதுரை,வ.கீதா.கட்டியம் இதழ் ஒன்றில் உள்ள ராஜதுரையின் கட்டுரை

மிகச் சிறப்பானது.சிங்கராயர்,அமரந்தாவின் மொழிபெயர்ப்புகளும் நல்ல உதாரணங்கள். நான் சொல்லாடலை நிராகரிக்கவில்லை.கோருவது தெளிவான எழுத்தை, வார்த்தை குவியல்களையல்ல. D.R.நாகராஜ் எழுத்துக்கள் ஜெயமோகன் எழுத்துக்கள் போலவா உள்ளன.D.R.நாகராஜின் நண்பர்கள் நந்தி,ராம் குஹா,சிவ் விஸ்வநாதன் எழுத்துக்களையும்,மற்றும் பெங்களுரிலுள்ள அவரது நண்பரகள் பலர் எழுதிய/எழுதும் Deep Focus சஞ்சிகையில் வெளியாகும் எழுத்துக்களையும் படியுங்கள், நான் சொல்வது புரியும்.ஜெயமோகன் நாகராஜ் பெயரைச் சொல்லித்தப்பிக்க முடியாது. நான் குறிப்பிட விரும்பும் இன்னொரு பெயர் டி.ஜி.வைத்தியனாதன்.

சமூக அறிவியலில் அறிவியல்துறைகளின்கலைசொற்களை பயன்படுத்துபவர்கள் அவற்றை புரிந்துகொள்ளாமல், கருத்தியல் ரீதியான வேறுபாடுகளை கணக்கில் கொள்ளாமல் பயன்படுத்துவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.(4).இது குறித்து வேறோரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

ஜெயமோகன் எழுத்துக்களில் ஒரு முக்கியமான பிரச்சினை எங்கு வருகிறது என்றால் எந்த் கோட்பாட்டுப் பிண்ணணியும் தரப்படாமல் ‘மகா வாக்கியங்கள் ‘ தரப்படுவதில். ஜெயமோகனின் எழுத்துகளில் ஏகப்பட்ட assertions முன்வைக்கப்படுகின்றன. இவற்றுக்கு என்ன பொருள், என்ன சான்று, எந்த கோட்பாட்டின் அடிப்படையில் இவற்றை முன்வைக்கிறீர்கள் என்று கேட்டால் வரும் பதில்தான் அவர் கட்டுரை. ஆசிரியன் என்பது குறித்து ஒரு பெரிய விவாதமே நடந்துள்ளது.ஜெயமோகன் எழுதும் எழுத்துக்கள் இவ்விஷயத்தில் mumbo-jumbo ஆகவே உள்ளன. நனவிலி என்ற ஒரு சொல்லை வைத்தே இவ்வாறு வாதிடமுடியும்.

இனக்குழு- இது சோவியத் நூல்களில் tribe என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.மதுரை பல்கலைகழகத்தில், முனைவர் பட்டம் பெற்ற, நாட்டார் வழக்காற்றியல்,மானுடவியல் துறைகளில் புலமை கொண்ட நண்பர் ஒருவர் இதைஉறுதி செய்தார். மானுடவியல்,சமூகவியல்,நாட்டார் வழக்காற்றியல் துறைகளில் யாரும் tribe, caste ஐ ஒரே பொருளில் பயன்படுத்துவதில்லை.ethinic/ethinicity எனபதும் ஜாதி(caste) என்பதற்கு இணையானப்பொருளில் பயன்படுத்த்ப்படுவதில்லை.தமிழ் மொழிபெயர்ப்புகளில் பிழைகள் இருக்ககூடும். நான் ஆங்கில நூல்களை ஆதாரமாகக் கொண்டேவாதிடுகிறேன்.தங்கள் தரப்பு சான்றாக ஆங்கிலத்தில் உள்ள நூல்களிலிருந்து அவர்கள் சான்றுதரட்டும்.இன்னும் தெளிவாகசொல்வதானால நான் குறிப்பிட்டுள்ள துறைகளில் வெளியான நூல்களிலிருந்தும், journal களிலிருந்தும் அவர்கள் சான்றுகள் தரட்டும். சோவியத நூல்கள் தவிர பிற நூல்களையும் கணக்கில் கொள்ளவேண்டும். caste,tribe,clan -இவை ஒன்றல்ல. இனக்குழு என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல்லை அவர்கள் குறிப்பிடட்டும்.

தமிழ்நாட்டில் தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கி.ராவின் எழுத்துக்கள் சித்தரிக்கும் பகுதிகள் தவிர பிறபகுதிகளிலும் வாழுகிறார்கள்.இது தவிர கன்னடம் பேசும் நாயக்கர்களும் சில பகுதிகளில் வாழ்கின்றனர். இனக்குழு என்று வாதிடுபவர்கள் இது குறித்து என்ன சொல்ல விரும்புகிறார்கள். அனைத்து நாயக்கர்களுக்கும் கி.ராவே கதை சொல்லி என்று சொல்லபோகிறார்களா ? இல்லை இனக்குழு என்பதில் உள்ள சிக்கல்களை உணரப் போகிறார்களா.ஒரு எச்சரிக்கை, பொதுவான அம்சங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு வேறுபடும் புள்ளிகளும்.இன்னொரு எச்சரிக்கை கலைச்சொற்களை இஷ்டப்படி பயன்படுத்திவிட்டு பழியை இலக்கியம் மீது போட முயல வேண்டாம்.

நான் படிக்கும் பல கட்டுரைகள், நூல்கள் பல்துறை அறிவு சார்ந்தவை. படைப்பாற்றல்,அறிவுத்திறன் குறித்து பல நூல்களை படித்துள்ளேன்.இவற்றில் குழப்பம் இல்லை.ஏனெனில் தாங்கள் முன்வைக்கும் கருத்துகள்/ கோட்பாடுகளின் வரையரைகள்/போதாமைகள் குறித்து எழுதுபவர்கள் குறிப்பிடுவார்கள்.இது அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.சான்றுகள் இல்லாமல் grand claims, assertions மட்டுமே கொண்ட கட்டுரைகளை அறிவார்ந்த வாசகர்கள் நிராகரித்துவிடுவர்.சிலர் தங்கள் அறியாமையை மறைக்க, விமர்சனங்களை எதிர் கொள்ள திராணியற்று தாங்கள் ஏதோ உயர்மட்டத்தில் இருப்பதாக எழுதுவார்கள்.இதில் வியப்படைய ஒன்றுமில்லை.தன்னைப் பற்றிய மயக்கங்களை எழுத்தில் வெளியிடுவதில் ஜெயமோகனுக்கு எல்லா உரிமையும் உண்டு.

ஆனால் கணையாழி பேட்டியில் எழுத்தாளனின் ego பற்றி பேசும் போது அவரைப்பற்றித்தான், அவரது ego பற்றிப் பேசுகிறார் என ஒரு வாசகனால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.இரண்டு கட்டுரைகளில் கி.ரா பற்றி அவர் எழுதியிருந்த்ததில் உள்ள முரணைக் காட்டியிருந்தேன். அது குறித்து அவர் பதில் -மெளனம்.

தெரிதா போன்ற பெயர்களை நான் எழுதாத போது அவர் என்னை கிண்டல் செய்வதாக நினைத்து எதைஎதையோ எழுதினார். அவர் எழுதியது அவருக்கு மறந்து விட்டது போலும்.இக்கட்டுரையில் தெரிதா வின் பெயர் தென்படுகிறது.இப்போது அவர் எழுதியதை அவருக்கு எதிராக என்னால் திருப்பமுடியும்.அவர் எழுதிய பாணியில் கிண்டல் செய்ய முடியும்.மற்றப்படி அவர் கட்டுரைகளில் உள்ள அபத்தங்களை நான் பட்டியலிட்டு கட்டுரைகளாக எழுதினால் பல கட்டுரைகள் எழுத வேண்டியிருக்கும்.துறைவாரியாக அபத்தங்கள் (உ-ம் த்ததுவ துறையில் ஜெயமோகன் எழுத்துக்களில் உள்ள அபத்தங்கள், அறிவியல் குறித்த எழுத்துக்களில் உள்ள அபத்தங்கள்) பற்றி நூற்கள் எழுதுவது இன்னும் பொருத்தமாக இருக்கலாம்.

இன்று இலக்கிய விமர்சனம் என்பது பல புதிய போக்குகளை உள்ளட்க்கியதாக உள்ளது.ஜெயமோகன் கட்டுரைகளில் அது குறித்து எதுவுமே பேசப்படுவதில்லை.உதாரணமாக reception study.தன் நூலில் கோல்ட்ஸ்டான் ஹாம்லெட் குறித்தும் எழுதுகிறார், ஜான் லீ காரியின் நாவல்கள் குறித்தும் எழுதுகிறார்(5). உதாரணமாக ஒரு கட்டுரை ‘Marxism and/as Humanism: The Reception of Hamlet ‘.

பல சமயங்களில் ஜெயமோகனின் எழுத்துக்கள் சில பத்தாண்டுகள் தூக்கத்திற்க்குப்பின் ஒருவர் எழுந்து விவாதிப்பது போலுள்ளது.

(1) ‘If positivism is the organizational myth of science,then its origin myth is the Scientific Revolution (7)

(7)-Following Fuchs I use the term ‘myth ‘ in neither the derogatory nor the fictive sense,but in the sense of a powerful framework for making sense of the world. Introduction: Thinking Locally,Acting Globally Steven J.Harris- Configurations Vol 6 No 2, 1998. Configurations- A Journal of Litearture,Science , and Technology

இன்னொரு உதாரணம்-Matter,System, and Early Modern Studies : Outlines for a Materialist Lingustics-F.Elizabeth Hart. foot note 10 I recognize that my method implies a conflation of disctinct concepts of language; for better or worse,I place within the same inquiry those like Derrida or Lacan, for whom language is a vast ontalogical metaphor, and linguists and cognitive scientists,for whom language is one of an array of cognitive functions defined by a certain set of physiological constraints.The virtue of this inquiry,I beleive,is in urging poststructuralism toward a more refined and careful use of language as metaphor while supporting its efficacy for cultural studies Configurations Vol 6 No 3, 1998

(2) Private Power,Public Law-Susan Sell

(3) States of Fantasy

(4) Sokal,A and Bricmont,J (1998) Intellectual Impostors:Postmodern Philosophers ‘ Abuse of Sciecnce,London : Profile

(5) Communities of Cultural Value Philp Goldstein 2001 Lexington Books

***

Series Navigation

Similar Posts