சொன்னார்கள் ஏப்ரல் 27 2004

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

திண்ணை


‘ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் எங்களுக்கு பிரசங்கம் செய்கிறார்கள் என்பது தான் வேடிக்கை. மார்க்சிஸ்டுகள் ஜனநாயகத்தை நம்புவதில்லை. காங்கிரஸ் 19 மாதங்கள் அவசர நிலை பிரகடனம் செய்திருந்தது. எங்களுக்கு ஜனநாயகம் போதிக்க இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ‘ முன்னாள் துணைப் பிரதமர் எல் கே அத்வானி (பி டி ஐ செய்தி நிறுவனம்)


‘நம் நாடு மிக ஏழ்மையான நாடு. மிகவும் ஏழ்மைப் பட்டவர்களை நாம் சென்றடைய வேண்டும். நிதிநிலையை அதிகரிக்க ஏழைகள் மீதும் வரி விதிக்க வேண்டியுள்ளது. வசூலிக்கப்பட்ட இந்தப் பணம் சரியாய்ப் பயன்படுத்துவது பற்றிய ஜாக்கிரதை உணர்வு தேவை. ‘ ஐந்து லட்சம் கோடி பட்ஜெட்டை எந்த விவாதமும் இல்லாமல் அங்கீகரித்தபின்பு மன்மோகன் சிங் பேசியது. தேசிய ஜனநாயக முன்னணி பட்ஜெட் விவாதத்தைப் புறக்கணித்துள்ளது. (தி ஹிண்டு)


‘மத்திய அரசாங்கம் மாறியவுடன், அரசாங்கத்தின் அணூகுமுறையும் மாறிவிட்டது போலும். யாரோ முக்கியஸ்தரைப் பாதுகாக்க அரசாங்கம் முனைகிறது. ‘ உச்ச நீதிமன்றம் குறிப்பு. 900 கோடி தீவன் ஊழலில் சிக்கிய லாலுப் பிரசாத் யாதவ் வழக்கில் அப்ரூவராக மாறிய தீபேஷ் சன்டோக் மீது வரி இலாக தொடர்ந்துள்ள வழக்கு பற்றி உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து. (டைம்ஸ் ஆஃப் இண்டியா)


‘ அன்னை தெரெசாவின் நம்பிக்கை மிக உறுதியாய் இருந்தது. சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் வேதனையைத் தானும் அனுபவிக்க வேண்டும் என்பது அவர் எண்ணம். தான் ஏசுவை மணம் செய்து கொண்டவர் என்று அவர் நம்பிக்கை. எளிமையாய் இதை எனக்கு அவர் விளக்க முயன்றார். என் மனைவியுடன் நான் கொண்ட திருமணம் போன்றது அது என்று விளக்க முயன்றார். ‘

நவீன் பி சாவ்லா, அன்னை தெரெசாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். செய்தி-ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் செயலாளர். (தி ஹிண்டு)


‘ என் அலுவலகத்திலிருந்து நான் வெளியே வந்து என் மோட்டார் சைக்கிளைக் கிளப்ப முயன்ற போது , தாடி வைத்த, தடிமனான ஒரு ஆள் என்னிடம் வந்து ‘ உன் பெயர் தான் சாஜித் இல்லையா ? ஏன் குரானை அவமதிக்கிறாய் ? ‘ என்று என்னைக் கேட்டுத் தள்ளி விட்டான். அவனுடன் கூட வந்தவன் என்னை இரு முறை முதுகில் கத்தியால் குத்தினான். ‘

பத்திரிகையாளர் சாஜித் ரஷீத், மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்துப் பெறும் முறையை எதிர்த்து எழுதிவருபவர். ‘மகாநகர் ‘ என்ற இந்தி ஏட்டின் ஆசிரியர்.

(இண்டியன் எக்ஸ்பிரஸ்)


***

‘The irony is that we are being given sermons by people who don ‘t believe in democracy. The Marxists, who don ‘t believe in democracy and the Congress, which imposed Emergency for 19 months in this country, have no right to teach us democracy ‘, the former Deputy Prime Minister L K Advani told reporters here. (PTI)

***

‘We are a very poor country. We have to reach the poorest sections of the country. We have to tax even the poor to raise resources. It is our duty to ensure that the money that is voted is properly utilised, ‘ the Prime Minister remarked ater passing 500,000 crore budget without discussion as NDA boycotted the proceedings. (The Hindu)

**

‘It seems that the government is changing its colours with the change of government at the Centre It seems that the government wants to protect an important person ‘.

Suspecting the income tax authorities of wanting to ‘protect an important person ‘ in Rs 900 crore fodder scam case in which railway minister Lalu Prasad Yadav is a key accused, the Supreme Court on Friday put a big question mark on the tax department ‘s decision to prosecute an approver Dipesh Chandok

(Times of India)

***

‘The thread that ran consistently through was her(Mother Teresa) untiring faith and the conviction that she too must endure the pain of Jesus on the Cross, for she was wedded to him. She sometimes tried to explain this to me in simple terms: that she was married to him as I was to my wife. ‘

Navin B. Chawla, Mother Teresa ‘s biographer, is Secretary in the Ministry of Information & Broadcasting. (The Hindu)

***

‘ ‘As I came down from my office and was about to start my bike, a bearded, well-built man came up to me, asking: ‘Tera naam Sajid hai ? Tum Quran ki toheen karta hai (Are you Sajid ? You insult the holy Quran). ‘ Then he pushed me while his companion stabbed me twice in the back. ‘ ‘

Writer-journalist Sajid Rashid (48), who wrote articles opposing Triple Talaq, editor of Hindi Mahanagar, (Indian express)

Series Navigation