சுடாக்கு

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

பசுபதி


சதுரனென நான்பெருமை சாற்றப் புதிய
புதிரொன்றைத் தேடுகின்ற போது — முதியர்
இளைஞர்கைச் செய்தித்தாள் ஏடுகளில் கண்டேன்
சுளுவாய்த் தெரிந்த சுடாக்கு.

கட்டத்தில் எண்களிடக் காலொன்றில் நின்றாலும்
கட்டம்தான் மிச்சம்! களைத்தயர்ந்தேன் !– துட்டர்கள்
ஒன்பதின்மர் தந்தனரே உன்மத்தம்! சித்ரவதைத்
துன்பத்தின் எல்லை சுடாக்கு.

எண்ணும் எழுத்துமிரு கண்களெனப் போற்றென்றார்;
எண்நம்மைக் கைவிட்டால் என்செய்வோம் ? — நண்பரே!
போக்கு குறுக்கெழுத்துப் போட்டிகளில் உன்பொழுது!
தூக்கிக் கடாசு சுடாக்கு!

சுடாக்கு= sudoku
http://www.japanesetranslator.co.uk/portfolio/sudoku/

~*~o0O0o~*~
s.pasupathy@yahoo.ca

Series Navigation