சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருக்கிறேன்

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

இளந்திரையன் –


சிறுகச் சிறுக
சேர்த்து வைத்திருக்கிறேன்
என்னைப் பற்றியும்
என் வேர் பற்றியும்

யாரும் கவனிக்கவில்லை
அவரவர்க்கு
அவரவர் அவசரம்
யாருக்கும் நேரமில்லை

மண்ணின் வாசனை
மனங்களின் நேசம்
மலர்களின் வாசம்
மலரும் நினைவுகள்

சொல்ல வேண்டும்
உரக்கச் சொல்ல வேண்டும்
மண்ணை நேசிக்கும்
மனங்கள் பற்றி

உயிரைத் துறக்கும்
உயிர்ப் புக்கள் பற்றி
இனவாதம் எதிர்க்கும்
இதயம் பற்றி

சிறுகச் சிறுக
சேர்த்து வைத்திருக்கிறேன்
என்னைப் பற்றியும்
என் வேர் பற்றியும்

– இளந்திரையன் –

Series Navigation

இளந்திரையன்

இளந்திரையன்