This entry is in the series 20101205_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்


சிந்தனை சுரப்பது
இதயத்திலா?
மூளையிலா?
இரண்டையும் இணைக்கும்
இரத்தத்திலா?
இரத்தத்தில் கரைந்த
ஆக்ஸிஜனிலா?
ஆக்ஸிஜன் வந்த
ஆகாய வெளியிலா?
ஆகாயம் வந்த
அண்ட வெளியிலா?

தோண்டத் தோண்ட
வேர்கள் புரியவில்லை
பறக்கப் பறக்க
நுனியும் தெரியவில்லை

ஆழ்மனக் கடலில்
சிந்தனைக் குமிழி
நழுவி நழுவி உயர்கிறது
நழுவும்போதே
கழுவுகிறது
நினைவு மட்டம்
நெருங்கியதும் உடைகிறது
உடைந்ததை ஒட்டிச் சேர்த்து
‘நம் சிந்தனை’ என்று
நாமகரணம் செய்கிறோம்

Series Navigation